ஹைக்கூ - கவிதைகள் | Haiku - poems

கவிமோவின்  ஹைக்கூ

1

அடர்ந்த காட்டிற்குள்
தன்னந்தனியாக வருகிறது
ஒத்தையடிப் பாதை.

 

2

மெல்ல உறங்குகிறது
தேகம் தின்ற களைப்பில்
மயானத் தீ.

 

3

கோவில் திருவிழா
வறட்சியால் வாடும்
மேடை நாடகம்.

 

4

காட்டு வழியே
அசைந்தாடி வருகிறது
கையில் தூக்குச்சட்டி.

 

5

உணவின்றி வாடுகிறது
பள்ளிக்கூட விடுமுறையில்
செம்பருத்தி.

 

6

வகுப்பறையில் வட்டமிட்டது
கோடை விடுமுறையில்
சிலந்திப்பூச்சி.

 

7

கிழக்கில் சூரியன்
வீட்டிற்குள் வருகிறது
மரத்தின் நிழல்.

 

8

நஞ்சையில் நடவு
வரப்பில் உறங்குகிறது
கைக்குழந்தை.

 

9

ஏர்க் கலப்பையோடு
வடம் பிடித்து இழுக்கின்றன
நிலத்தில் மாடுகள்.

 

10
தலைகீழாகத்
தெரிகிறது தண்ணீரில்
அக்கரை மரங்கள்.

 

எழுதியவர் 

– கவிமோ
கம்பம்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “ஹைக்கூ மாதம்…..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *