#
அக்னி தாகத்தில்
சட்டென்று ஒரு துளி
நெற்றி வியர்வை
#
சில்லென்று காற்று
காலம் தப்பிய மழை
வீணாகும் பயிர்கள்
#
கடலைத் தேடிய நதி
வெள்ளப் பிரவாகம்
நெகிழிக் குப்பைகள்
#
பஞ்சத்தில் விவசாயி
பசி கேட்கிறது
உணவிற்கு எலி
#
வெள்ளை மணலில்
பாதம் பதித்துச் செல்கின்றன
கடல் அலைகள்
#
பூங்காவில் எச்சரிக்கை
பூக்களைத் தொடாதீர்
மொய்க்கும் தேனீக்கள்
#
கனவு தேசத்தில்
பறக்கிறது குதிரை
படிக்கிறேன் புத்தகம்
#
ஆதவனின் அருகில்
மீண்டு எழுந்தது
கருகிய சிறகுகள்
#
சிதறிய பின்
பல பிம்பங்கள்
நீர் கோலங்கள்
——————
எழுதியவர்
கவிதா பிருத்வி
தஞ்சை

