#
விரித்தான் வலை
தப்பியது மான்
சிக்கியது புலி
#
சில்லென்று காற்று
காலம் தப்பிய மழை
வீணாகும் பயிர்கள்
#
கடலைத் தேடிய நதி
வெள்ளப் பிரவாகம்
நெகிழிக் குப்பைகள்
#
பஞ்சத்தில் விவசாயி
பசி கேட்கிறது
உணவிற்கு எலி
#
வெள்ளை மணலில்
பாதம் பதித்துச் செல்கின்றன
கடல் அலைகள்
#
பூங்காவில் எச்சரிக்கை
பூக்களைத் தொடாதீர்
மொய்க்கும் தேனீக்கள்
#
கனவு தேசத்தில்
பறக்கிறது குதிரை
படிக்கிறேன் புத்தகம்
#
ஆதவனின் அருகில்
மீண்டு எழுந்தன
கருகிய சிறகுகள்
#
சிதறிய பின்
பல பிம்பங்கள்
நீர்க் கோலங்கள்
எழுதியவர்
கவிதா பிருத்வி
தஞ்சை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் கவிதைகள். சிறப்பு
மகிழ்ச்சி.. நன்றி தோழர்
அருமை ❣️🥰👌
மகிழ்ச்சி.. நன்றி தோழர்