Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்… பா. கெஜலட்சுமியின் ஹைக்கூ

1
கூட்ட நெரிசலிலும்
தியானத்தில்..
பேருந்தில் குழந்தை.

2
நின்ற கோலத்தில்
தவம்
புத்தகங்கள்.

3
கடவுச் சீட்டில்லாமல்
கண்டம் கடக்கலாம்…
வாசிப்பு வசமானால்.

4
மேளதாள வெடியுடன்
கேளிக்கை வீதியுலா
கைகூப்பி வேட்பாளர்.

5
கணினியில் முதற்பிள்ளை
அமீரக அப்பாவுக்கு
அமாவாசையில் முழுநிலவு!

 

6
வீட்டினுள் மழைச்சாரல்
முழுதும் நனைந்தாள்
குளிப்பாட்டிய அன்னை

7
முன்னேறும் போது
மகிழ்ச்சி
வரிசையில் மட்டும்

 

8
பரவுகிறது
அதிவேகமாய்
ரகசியம்.

 

9
பருத்த தொந்தி
நொடியில் இளைத்தது
பலூன்.

10

கால் ஒடிந்ததால்

மூலையில் முடங்கியது
நாற்காலி

 

பா. கெஜலட்சுமி

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. மா.ஜெயசுஜா

    சிறப்பான கவிதைகள்

  2. ஹைக்கூ கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்தது.
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *