- நன்றி மறவாமை
மனிதனுக்கு நினைவு ஊட்டுகிறது
வெட்டப்பட்ட மரம்…!
- சிற்பிகளின் கைவண்ணம்
சான்று பகர்ந்தவாறு இருக்கின்றன
கோவில் சிற்பங்கள்…!
- காய்ந்த பூஞ்சோலை
ஏமாற்றத்துடன் கூடு திரும்புகின்றன
தேனீக்கள் கூட்டம்…!
- சமவெளிப் பிரதேசம்
தீண்டிவிடத் துடிக்கின்றன
கீழ்வான மேகங்கள்…!
எழுதியவர்
மெ. கிஷோர் கான்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

