1. பறவைகள்
குழப்பத்தில்
குளம் முழுக்க வானம்.
2. பகல் இரவாய்
இரவு பகலாய்
புதுவரவாய் குழந்தை.
3. சாலையில்
விழுந்து கிடந்தது
மரநிழல்.
4. குதித்து குதித்து
பின் தொடர்ந்தாள்
அம்மாவின் பாதச்சுவடுகள்.
5. அழகிய பூக்கள்
வாசமின்றி
வாசல் கோலத்தில்…
6. தாகத்தால்
நாவறண்டது
குடம் வியாபாரக்கு…
7. அழுவதற்கு
தயாராவாள் அம்மா
அடுப்பூதும்போது…
8. வாசல் தெளித்தேன்
தரையில் வானவில்
வாகனம் வடித்த பெட்ரோல்.
9. திறக்கும்போது
பெருங்குரலெடுத்து
கத்திய கதவுகள்.
10. மீண்டும் மீண்டும்
ஏறிய வண்டிகள்
செத்த நாயின் மீது.
எழுதியவர்:
சு. இளவரசி
சிவகங்கை.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சுவைக்க வைக்கும் கவிதைகள் அருமை. வாழ்த்துகள்
அருமை
அனைத்து கவிதைகளும் அருமை.
“பது வரவாய் குழந்தை”
மற்றும் “மரநிழல்” மிகவும் அருமை.
வாழ்த்துகள்
கிரி. நீ