- இன்னும் ஏழையின்
கரங்களில்
ஆணி அடித்துக் கொண்டே தான்
இருக்கிறார்கள்
தீர்ப்புகளால்…
- சிலுவையின்
நிழலில்
சிறிது
இளைப்பாறியிருக்கும்
வெயிலுக்குக்
கொஞ்சம் எறும்புகள்
- கண்ணாடியைக் கொத்தும்
பறவையைப் பார்த்ததும்
புரிகிறது
அதற்கும் வலிக்கும்
அலகுக்கும் வலிக்கு மென்று..
- கண்டம் விட்டு கண்டம்
பறக்கும் பறவைகள்
சுமந்துச் செல்லுமோ
கண்ணீர்ரையும்,
கனவுகளையும்…
எழுதியவர்
இரா. மதிராஜ்..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.