1.
இரவல் வாங்கி
வாழ்கிறவனெல்லாம்
ஒளிரத்தான் செய்வான்
நிலா
2.
நீர் குமிழில் மின்னும்
வண்ணங்களுக்கு தெரியாது
சில வினாடிகளில்
சிதறிவிடுவோமென்று
3.
கண்ணை மீனென்றான்
கடைவாயைக் கோவையென்றான்
கல்யாணம் செய்யலன்னா
கொடும் பாதகன் நானென்றான்
4.
தீட்டிய ஓவியங்கள்
உயிராய் நிற்கின்றன
நகைக் கடை வாசலில்
5.
ஒரு துளி பனித்துளி
புல்லின் மேல்
உருப்பெருக்கி நிற்கிறது
எழுதியவர்
மொ பாண்டியராஜன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

