ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

 

 

 

*
அழகான ஓவியம் பார்த்தேன்
ஒன்றும் புரியவில்லை
எதையோ உள்வாங்கியது மனம்.

I saw a beautiful painting
I don’t understand anything
The mind absorbed something

*
நழுவி நழுவி போகிறது
நிழலைக் கைகளால்
பிடிக்கும் முயற்சி.

Slip and slip
With showdowy hands
Try to catch up.

*
கிளையில் பறவை கூடு
வெயில் புழுக்கம்
விசிறுகின்றன இலைகள்.

Bird’s nest on a branch
Heatstoke
The leaves are blowing.

*
ஆடிக் காற்று
பாரம் தாங்காமல்
முறிந்து விழுந்தது மரம்.

Gusty wind
Without burden
Tree fell down.

*
நெல் வயலில் மழைநீர்
முதிர்ந்த கதிர்கள் ஈரம்
தலைசாய்த்து படுத்து உறக்கம்.

Rain in paddy field
Mature rays are moist
Sleep with head.

*
அறுவடை காலம்
கையில் அரிவாள்
பிறை நிலா.

Harvest time
Tool in hand
Crescent moon.

*
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
விளையாடிய குழந்தை
மணலில் தொலைத்த மோதிரம்.

Can’t find it Anywhere
A child who played
A ring lost in the sand.

*
தொடர்ந்து நடக்கிறது
பாலியல் கொடுமைகள்
பெண்ணை நிலவோடு ஒப்பிடாதே.

Continues to happen
Sex harassments
Don’t compare a women to the moon.

*
மாட்டுக் கொட்டகையில்
இரவெல்லாம் அழுகுரல்
கன்றை இழந்த தாய்பசு.

In the cow shed
Crying all night
A mother cow
who has lost her calf.

*
பாலியல் வன்புணர்வு
இன்னும் அழியவில்லை
அரக்கர் வம்சம்.

Sexual assault
Not yet destroyed
Demon dynasty.

– ந.க.துறைவன்

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *