1.
சரிந்து விழுந்தேன்
பறக்கும் கம்பளத்திலிருந்து
கிழிந்தபாயில் கண்ட கனவு
2. அன்பு
நஞ்சானது
அளவுக்கு மிஞ்சியதால்
3. சுடுகின்ற
மழை
கண்ணீர்
4. இரவிலும் கண்டேன்
ஞாயிறின் ஒளியை
நிலவினிடத்தில்
5. நிலவொளியின் உதயத்தில்
விடியல் கண்டது
நிழல்
6. ஆழிப்பேரலையிலும்
உயிர்த்தெழுந்தது
மரத்துண்டு
7. காலச்சுவடாய் நினைவுகள்
கானல் நீராய் கனவுகள்
இடையினில் தளும்புகிறது நிகழ்காலம்
8. புரட்டிய பக்கங்கள்
வெறுமையாக..
எதிர்காலம்
9. கொட்டும் கண்ணீரை
வேகமாய்த் துடைத்தது
மழைக்காற்று
10. வாடிய தளிர்
துளிர்த்தது கண்ணீரில்
மழை
எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

