குயில் கூவும் போது
மலை பள்ளத்தாக்கில்
வெள்ளம் வடிந்தது
…
புழுவை விழுங்கிய
மரங்கொத்தி சப்தம்
வித்தியாசமாய்க் கேட்கிறது
…
மழைப் பாத்திரத்தை
கவிழ்த்தி வைத்தேன்
தாளம் இசைத்தது
…
கொஞ்சம் தூரம்
நகரும் நத்தை
பின்னோக்கி நகர்வதில்லை
…
தண்ணீர் கிணறு
அருகில் நடனம்
வேடி பூக்கள்
…
பிரண்டை கொடி
கடந்து போகும் பட்டாம்பூச்சி
கேட்காத இசை
…
ஒளி விலகல்
குறையும் நிழல்
புத்தனின் சிறுவன் பருவம்
…
களைச் செடியிலும்
ரோஜாவைப் பூக்கச் செய்யும்
மண்
….
விருந்தின்போது
பருந்து துரத்தும்
கோழியின் சப்தம்
…
மலைக்கு முன்
கனமானது
முயல்
எழுதியவர்
க. புனிதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

