- மழலையிடம் பேசுவது போல்
வயல் கிளிகளை
விரட்டும் பாட்டி
- புத்தர் ஒளியை
வாங்கி கொண்டார்
சுடர் விளக்குக் கடையில்
- சுடும் பாலைவனத்தில்
ஆடு மேய்ப்பவன்
காலடியில் புழுக்கைக் குளிர்ச்சி
- மட்டமாய்ப் பேசுபவர்களை
பார்த்துச் சிரிக்கின்றன
செடியில் பூக்கள்
- புத்த முனி
பிடிக்காமல் இருக்க
மரத்தில் அடித்த ஆணி
- புத்தர் ஞானமடைய
போனபோது வீட்டில்
நகவெட்டி தொலைந்திருந்தது
- என்ன பொறியியல்
மகிழ்வுந்து சக்கரம்
சுற்றும் கொசு
- ஐசோடோப்பை
படிக்கும் பள்ளிப் பிள்ளை
துணி துவைக்கையில்
- ஞானமடைந்த
சீடன் முன்
முட்டாளாக நடிக்கிறார் குரு
- முல்லைக் கொடி படர
இறந்து போன தாத்தா
நட்ட கைத்தடி
- செம்பருத்தி மகரந்தம்
வரைந்த ஓவியம்
ஆதிவாசி மக்கள் நடனம்
எழுதியவன்
க. புனிதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


very good.