Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

 

  • விழுந்து எழுந்தபின்னும்

பணிந்து விழவைக்கும்

கபட உறவுகள்

 

  • பணம் பெரிதென போற்றும்

மனமும் பொய்வேசம் கட்டும்

ஒவ்வொரு நொடியும் தோல்வியே

 

  • அரசனும் ஆண்டியாவான் பெருமையில்

ஆண்டியும் அரசனாவான் கற்பனையில்

மாயமான் பல்பொருள் அங்காடி

 

  • நான் கிடக்கிறேன் இப்படியே

அப்பாவை பார்த்துக்கொள் அக்கறையுடன்

என் அன்புப் பேரனே

 

  • மூவரி முத்துக்கள்

மனதில் புத்தொளி

ஹைக்கூ கவிதைகள்

 

  • மடிக்கனம் ஏதுமில்லை

மனக்கனம் தீரவில்லை

சாலையோரம் துயிலும் சன்னியாசி

 

  • சுட்டெரிக்கும் வெயில்

சவால்விடும் பாட்டி

தலையில் பழக்கூடை

 

  • கூரைக் கோடியில்

ஆழ்ந்து உறங்கும்

கீரைக் கிழவி

 

  • போதையில் பாதை மாறுதல்

பாதையில் போதை ஏறுதல்

வறட்டு மனங்கள்

 

  • சுதேசி தேசபக்தன்

பதுங்கிச் செல்ல

அன்னியக்கார்

 

எழுதியவர் 

கொ.ராமகிருஷ்ணன் 

பழனி.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *