Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ரவிகிருஷ்ணா

1

அதிகரித்த மழை
துன்பம் தருகிறது
குளிர்ந்த காற்று

2

மழையின் அறிகுறி
வானம் போட்ட வில்லு
அழகாய் இருக்கிறது

3
உதயசூரியன்
செந்நிற ஒளி
தீயின் சுவாலை

4

துன்பம் தருகிறது
புத்தகப் பைச்சுமை
எதிர்கால இன்பம்

5

நீண்ட மரக்கிளை
நிழலைத் தருகிறது
கட்டிய வீடு

6

பூக்களின் வரிசை
மணம் வீசுகிறது
வாசனைத் திரவியம்

7

வானத்து மேகம்
விசாலித்துக் கிடக்கிறது
எங்கிலும் வெள்ளம்

8

பறவைகள் கூட்டம்
குளம் முற்றிலும்
அல்லியும் தாமரையும்

9

இருள் நீங்குகிறது
மின்குமிழ் ஒளியில்
புத்தகம் படிக்கிறேன்

10

முயற்சி இன்மையால்
தோல்வி கிடைத்தது
கற்றுக்கொண்ட பாடம்

11

விலையேற்ற வாழ்வு
துன்பம் தருகிறது
குறைந்த சம்பளம்

12


கைத் தொலைபேசி
வாசிப்புப் பஞ்சம்
வெறுமித்த நூலகம்

13

கடல் சூழ்தீவு
ஈழத் தேசம்
பசுமையின் வீடு

14

நிறைந்த செல்வம்
நெற்றியில் பொட்டு
முகத்தில் மலர்ச்சி

15


கடலலைகள்
மீண்டும் எழுகின்றன
சூரியன்

16

கார்முகில்
சூரியனை மறைக்கிறது
கட்டிய வீடு

எழுதியவர்      

-ரவிகிருஷ்ணா




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. ரவிகிருஷ்ணா

    அன்புடையீர் , வணக்கம் நான் எழுதி அனுப்பின ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டமைக்கு நன்றி தொடர்ந்து எழுதுகின்றேன்,பிரசுரிக்க வேண்டுகின்றேன்

    கவிஞர்
    ரவிகிருஷ்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *