1
வேண்டுதல்
உயிரை எடுத்தது
பலி ஆடு!
2
வெடிச்சத்தம்
பீதியில் தெருநாய்கள்
கோயில் திருவிழா
3
கொழுந்து விடும் இலை
விருந்துக்குத் தயாராகிறது
கம்பளிப்புழு
4
விதைத்த மகிழ்ச்சியில்
சிரிக்கிறது பூ
வண்ணத்துப்பூச்சி
5
சவ ஊர்வலம்
இழுத்துச்செல்கின்றன எறும்புகள்
உயிர்விட்ட பூச்சி
6
நிழல் விழ விழ
குளிர்கிறது
பூமி
7
எவ்வளவு போட்டும்
நிரம்பவே மறுக்கிறது
பிச்சைப்பாத்திரம்.
8
வாகனங்களைத் தேடினேன்
சப்தமற்ற சாலைகளில்
வந்தது பந்த்.
9
அமைதியைத் தேடிப்பயணம்
மனதில் வந்துஆர்ப்பரித்தன
சஞ்சல அலைகள்
10
கோயில் முழுக்க பக்தர்கள்
காலியாக இருக்கிறது
பிரசாத கூடை
எழுதியவர்
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


ஹைக்கூ கவிதைகள் அத்தனையும் அருமை
Pingback: அள்ளிப் பருக நீளும் கைகள் (ஹைக்கூ கவிதைகள்) - Book Day