- அலைகளோடு விளையாட்டு
சேதம் இல்லாமல்
தவழ்கிறது மணல்….!
- கலைந்து நிற்கும் மக்கள்
வரிசையாய் எறும்புகள்
மனிதரின் காலடியில்…..!
- தூண்டிலில் சிக்கிய பெற்றோர்
தவணை முறையில் வசூல்
தனியார் பள்ளிகள்
- வறண்டு போன பூமிக்கு
மேகத்தின் கண்ணீர்
மழை….!
- யாரும் கட்டளையிடாமல்
தன் கடமைகளைச் செய்தன
இயற்கையின் சுழற்சி….!
- சுதந்திரமாய்ச் சுற்றித் திரிகிறது
அடைபட்ட கூண்டில்
பட்டாம்பூச்சி…!
எழுதியவர்
ச. சத்தியபானு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

