கடல் தாண்டி
தொடர் பயணம்
வானில் பறவைகள்
***
பயிற்சியில்லாமல்
மலையில் நடைப் பயணம்
வனவிலங்குகள்
****
வானில்
மேகக் கூட்டம்
மிதக்கும் ஓவியங்கள்
***
இரவை மென்று விழுங்கி
பிரசவிக்கும்
பகல்
***
கற்றல் அறியா அம்மா
கண்டுப் பிடித்துவிடுவாள்
பிள்ளைகளின் பசியை
***
உலகின்
ஒற்றை மொழி
பசி
****
கண்டம் தாண்டி வந்த
பறவைகள்
அடைக்கலம் தந்தது வேடந்தாங்கல்
***
கார்ப்பரேட் ஒப்பந்தம்
கையறு நிலையில்
வனவிலங்குகள்
***
மலர்களின் மனம்
சுமையானது
இரங்கல் வீடு
*****
உலகம் முழுவதும்
பறவைகளின் சுற்றுப் பயணம்
ஓரே வானமும் பூமியும்
***
எழுதியவர்

திருமதி சாந்தி சரவணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை அருமை
சிறப்பு தோழர்.
///மலர்களின் மனம்
சுமையானது
இரங்கல் வீடு///
///கற்றல் அறியா அம்மா
கண்டுப் பிடித்துவிடுவாள்
பிள்ளைகளின் பசியை///
மேற்காணும் இரு ஹைக்கூகளும் எனக்கு நெருக்கமாக தோன்றியது.
வாழ்த்துகள்…
சிறப்பான கவிதைகள்.
வாழ்த்துகள் தோழர்.
கற்றல் அறியா அம்மா…..
மிகவும் கவர்ந்தது