ஹைக்கூ கவிதைகள் – பா.ஶ்ரீகுமார்
பறவையின் தடம் நீரில் பதியுமா?
வாழ்க்கைப் பாதை முழுவதும்
முட்செடிகள் அவர் விற்பதோ
பூத்துச் சிரிக்கும் பூஞ்செடிகள்
*
கால நதியின் ஓட்டம்
வெவ்வேறு திசைகளில் செல்கிறது
அவரவர் வாழ்க்கைப் பயணம்
*
ஆகாயத்தில் சுவடு பதிக்க இயலாத
பறவை நீரில் விட்டுச் செல்லுமா
தனது தடத்தை?
*
வீழ்ந்த ஒற்றை இறகின்
மீது மழை விட்டுச் செல்கிறது
தன் கண்ணீர் துளிகளை?
*
உடைந்த கடிகாரம்
இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது
எதற்கும் உடைபடாத காலம்
*
பிரிவின் கனத்தால்
அறுபடுகிறது அன்பின் மாயவலை
துளிர்விடுகிறது கண்ணீர்த் துளி
*
ஒரு சிறு துண்டு இரைக்கு
ஆசைப்பட்டு தூண்டிலில் சிக்கும்
மீன்கள்
*
எப்போதாவது வரும் ரயிலுக்காக
எப்பொழுதும் காத்திருக்கின்றன
மௌனமாய் தண்டவாளங்கள்
*
இரவு வானின்
நூலறுந்த பட்டம்
நிலா
*
துடுப்புமில்லை
படகோட்டியில்லை வானில்
மிதக்கிறது பிறை நிலா
*
வலையில் பிடிப்பட்ட மீனுக்குள்
இன்னும் அடித்துக் கொண்டிருக்கிறது
கடலின் அலை
*
காடு மலை கல் முள்
கடந்து வரும் நீரின்
காயம் யார் அறிவார்?
*
குளத்தின் பெரும் மௌனத்தை
அசைத்துவிடுகிறது
ஒரு சிறு கல்
எழுதியவர்

பா.ஶ்ரீகுமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

