Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ மாதம்…செ. சுதாவின் ஹைக்கூ

 

1.
சுகமான நிகழ்வுகளாயினும்
வலியைத் தான் தருகின்றன
மனதில் எழும் நினைவுகள்

 

2.
பிரபஞ்சம் முழுவதும் கல்லறை
அமைத்தாலும் பத்தாது
உணர்வுகளின் இறப்பிற்கு

 

3.
தன்னை அறியாமலேயே தன்
தாய்க்கு போர்த்தி விடுகின்றன
இலையுதிர் காலத்து மரங்கள்

 

4.
நேற்று போல் இன்றும் இருக்காது
இன்று போல் நாளையும் இருக்காது
மனித மனம்

 

5.
குறையக் குறைய
நீண்டு கொண்டே போகும்
காத்திருக்கும் நாட்கள்

 

6.
வெம்மையை உள்வாங்கி
குளுமையை கொடை விரிகின்றன
கோடை காலத்து மரங்கள்

 

7.
அனுபவிக்க தந்த அறிவை,அனுபவிக்க
மறந்து தன்னையும் மறந்தான்
மனிதன்

 

8.
என்ன நடந்தாலும் தன்
இயல்பைத் தொலைப்பதில்லை
மானுடத்தை தவிர அனைத்தும்

 

9.
காற்றோடு வரும் ஸ்பரிசம்
மனம் வரை கூத்தாடச் செய்யும்
மண் வாசனை

 

10.
மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட
மாபெரும் பொக்கிஷம்
நினைவுப் பெட்டகம்

 

நன்றி,
செ. சுதா

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 5 Comments

5 Comments

  1. மா.ஜெயசுஜா

    சிறப்பானகவிதைகள்

    • Prabha

      மிகவும் பிடித்திருக்கிறது.

      • திருமதி. சாந்தி சரவணன்

        சிறப்பு. மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்

    • ந ராஜ்குமார்

      அருமை

  2. தன்னையறியாமல் தன் தாய்க்கு போர்த்தி விடுகின்றன….
    கவிதை அருமை
    வாழ்த்துகள் 💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *