ஹைக்கூ கவிதைகள் | Haiku | Poem

ஹைக்கூ கவிதைகள்

 

 

  • குளத்து வளையில்
    எட்டிப் பார்க்கிறது தவளை
    தெறித்தது மழைத்துளி

     

  • வானம்
    வசப்பட்டது
    வானம்பாடி

     

  • தேன் குடித்து
    மயங்கியது வண்டு
    பூமணம்

     

  • கழுத்தில் கயிறு
    இறுக்குகிறது
    ஓடும் நாய்

     

  • இலைகள் வடிக்கிறது
    ஆனந்தக் கண்ணீர்
    சொட்டும் மழைத்துளி

     

  • மரங்களில்
    கனிகள்
    சுகமான சுமைகள்

     

  • தேரின் வடம்
    கைகளில்
    தடம்

     

  • யோசிக்கிறார்
    சாமியாடி
    என்ன சொல்வது என்று

     

  • நாசியைத்
    துளைக்கிறது
    உணவுக் கடை

     

  • எறும்புகள்
    கூட்டம்
    இறந்த எறும்பிற்கு இரங்கல்

     

  • தோள் மீது கை
    பள்ளி திறந்தது
    பிள்ளைகள்

     

  • மணம் வீசுகிறது
    புத்தம் புது
    நூல்கள்

     

  • பள்ளிவாசலில்
    சின்ன சின்ன தின்பண்டம்
    மகிழ்வில் வியாபாரி.

 

எழுதியவர்

வ.சு.வசந்தா

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. திருமதி. சாந்தி சரவணன்

    அருமை மா. மனமார்ந்த வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *