ஹைக்கூ கவிதைகள் – இரா.ஜெயந்தி

ஹைக்கூ கவிதைகள் – இரா.ஜெயந்தி

ஹைக்கூ கவிதைகள்

#1
துணைக்கு அழைத்தால்
எதிரியாய் நிற்கிறது
மனசாட்சி.
#2
வெட்டப்பட்ட மரங்களுக்காக
கிடைத்தது தீர்ப்பு
மின்கட்டண உயர்வு.
#3
அரச மரத்தின்
எட்டாக் கனிகள்
பிள்ளைக்காக ஏங்கும் தொட்டில்கள்.
#4
இருப்பை உறுதி செய்ய
கடன் பெற்று மிளிர்கிறது
நட்சத்திரங்கள்!!
#5
இதமான தீண்டலில்
எல்லாம் மாயமானது
தூக்கம்.
இரா.ஜெயந்தி,
பாடி, சென்னை.
Show 3 Comments

3 Comments

  1. GIRI S RENGASAMY

    நீங்கள்

    Daughter
    Mother
    Wife
    Professor
    Acuhealer
    Artist
    Fashion Designer
    Today Haiku

    Tomorrow Not a question mark
    !!!!!!!!!!!!!!!!

    • ந.ஜெகதீசன்

      ஐந்து ஹைக்கூக்களில் மூன்று ஹைக்கூக்கள் மனித உணர்வுகளை நெருக்கமாக பேசுகிறது.

      முதல் ஹைக்கூ என்னை மிகவும் கவர்ந்தது.

      வாழ்த்துகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *