சுங்கச் சாவடியின் வசூல்
காசில்லை சாலை போடுவதற்கு
சுவிஸ் பேங்கில் இருப்பதால்
**********
வாடிய மாடிவீட்டு ரோஜா
ரோட்டோரத்தில் ஏறுமணல்
செழிக்க விடாத மேல்ஜாதி
**********
அனைத்துக் கடலுக்கும்
ஒரே வெள்ளை டான்ஸர்
நிலா
**********
யார் யாருக்கோ கரோனா
நடுங்குது உலகம்
மீடியாக்களால்
**********
உறையாத ஐஸ்கிரீம்
உறைந்த ஐஸ் வண்டிக்காரர்
ஊட்டி குளிரால்.
**********
ஏழை மாணவர்கள்
விடியல் தெரியாமல் நிற்க
புதிய கல்விக் கொள்கையால்.
**********
பிடித்த புத்தகத்தை
புரட்டிச் செல்லும் காற்று
கற்காத காரணத்தால் இருக்குமோ
**********
தூக்கு தண்டனை நிறைவேறியதும்
கைதி உயிர் பிழைத்தான்
தரமற்ற கயிறு
**********
அதிக செல்போன் அலைவரிசை
மனம் மகிழ்ந்த வாடிக்கையாளர்
நன்றி சொன்னார் ENT டாக்டர்.
**********
பொடி போட்டவர் தும்முகிறார்
பொதுமக்கள் ஓட்டம்
கரோனா பயத்தால்
ஜெ.சரவணன்


நிகழ்கால நிகழ்வுகளை பதிவு செய்யும் கவிதைகள் சிறப்பு
சிறப்பான வரிகள் வாழ்த்துகள் தோழர்
சிறப்பு. வாழ்த்துகள் தோழர்
சந்தோஷம். நான் ஒரு கவிஞரின் நண்பர் என்று சொல்லி கொள்ள…
Richard Charles