வேலூர் இளையவனின் ஹைகூ கவிதைகள்

வேலூர் இளையவனின் ஹைகூ கவிதைகள்

 

Image may contain: one or more people, people standing, nature, outdoor and text

பழுத்த வெள்ளரிப் பழம்
வெடிக்கும் அறுவடையின்றி
விவசாயி மனம்

காய்ந்து கிடைக்கும் நதி

கூழாங்கற்கள் பேசும்
புரண்ட கதைகள்

 

கடலுக்குள் மீனவன்

தினமும் பொட்டு இடுகிறாள்
முகத்தில் அவள்

 

பண்பலையில் பாட்டு
நாட்டியம் பயில்கின்றன
திரைச்சீலைகள்

 

அவளின் அழகிற்கு
ஒவ்வொன்றும் பொருந்துகிறது
யாரோ எழுதிய கவிதை

 

மணநாள் ஆல்பம்
மாறாமல் இருக்கும்
குழந்தைகள் சிரிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் திறந்த வெளியில் ...

நிற்கிறது

விட்ட இடத்திலேயே

ஊர் சுற்றிய தேர்

 

கேட்கும்
பல்லாயிரம் குரல்கள்
ஆளில்லா காடு

 

பாறையில் மோதி
உடையவில்லை
நதியில் போகும் நிலா

 

அந்திப் பொழுது
ரசிக்க வைக்கும்
குழந்தையின் சிணுங்கல்

 

வரைந்த ஒற்றை கோடு
சிறந்த ஓவியன் கையில்
எத்தனை நளினம்

உலகில் மிகவும் பெரிய காடு எது? - Quora

இன்னும் கூடடையவில்லை
இருள் சூழ்கிறது
மழையில் காடு

 

சருகுகள் உதிர
புன்னகைக்கிறார் ஞானி
நாளை பூக்கள்

 

காற்றை பெருமை செய்கிறான்
இசைக்கும் தம் இசையால்
புல்லாங்குழல் விற்பவன்

 

இங்கேதான் இருக்கிறது
கண்ணுக்குத் தெரியாமல்

காதில் கேட்கும் குயில்

Free photo: Raindrop leaf - Green, Leaf, Leaves - Free Download ...

கோடையில் வரும் மழை

விட்டுவிட மனமில்லாமல்
சொட்டுகிறது இலை

 

அருவியின் சலசலப்பு
பொன்வண்டின் ரீங்காரம்
எதற்கோ தலையாட்டும் நாணல்

 

ரேஷன் கடை வாசலில்
கூட்டமாய் இருக்கும் காட்சி
சிட்டுக்குருவிகள்

 

Image

வேலூர் இளையவன்

(முனைவர் க.இராமஜெயம்)

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *