கொரோனா ஹைக்கூ கவிதைகள் – வசு.வசந்தா

கொரோனா ஹைக்கூ கவிதைகள் – வசு.வசந்தா

 

கொரோனா

கொரோனாவால் விடுமுறை
பிள்ளைக்கு களிப்பில்லை
ஆன்லைன் வகுப்பு

அழையாத விருந்தாளி
அலைக்கழிக்கும் கோமாளி
கொரோனா

கொரோனா காலம்
அப்பாவின் வடிகால்
பிள்ளைகள்

காலத்தின் கோலம்
கணநேரத்தில் ஓலம்
கொரோனா

ஆன்லைன் வகுப்பு
கெட்டது
கண்கள்

அழைத்துச் செல்லும் விருந்தாளி
அவதிப்பட்டு திரும்புவான்
மருத்துவமனை

பிணம் தின்னும்
கழுகுகள்
கொரோனா காலம்

நான்கு நாட்களுக்கு
வழங்கப்படும்
கொரோனா சாப்பாடு

டீ காபி மறந்து போச்சு
கப சுர குடி நீர் நிறந்தரமாச்சு
எங்கும் எப்போதும் இதுவே பேச்சு

தனித்திரு
கவசம் போடு
கைகளைக் கழுவு

   –வசந்தா சாமிநாதன்
Show 2 Comments

2 Comments

  1. சாந்தி சரவணன்

    கொரோனா கவிதைகள் சிறப்பு மா. வாழ்த்துகள்

  2. Sakthi Bahadur

    சிறப்பு… விழ்த்துகள் தோழர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *