ஹைக்கூ - கவிதைகள் | Haiku Poems

ஹைக்கூ மாதம்…..

ஆதிராவின்  ஹைக்கூ முத்துக்கள்

1

கடலின் கோபம்
கரையில் வாரியிறைத்தது
நெகிழிக் குப்பைகளை.

 

2

குழலோசை
அந்திப்பொழுதை இனிதாக்கியது
தனிமை.

 

3

உயர்ந்த மலைகள்
நீண்டுகொண்டே செல்கிறது
தூக்கணாங்குருவிக் கூடு.

 

4

நிலவொளி
தொலைவில் மங்கலாகத் தெரியும்
வசந்தகாலக் கொக்கு.

 

5

வறண்ட பூமி
தண்ணீர்த் தேடித் தவமிருக்கின்றன
தாயின் கால்கள்.

 

6

தெருநாய் ஓலம்
சன்னலினூடே உள்நுழைகிறது
நிலவொளி.

 

7

எழுந்துவரும் அலைகள்
மேடும் பள்ளமுமாக நிறைந்திருக்கிறது
மீனவர் வாழ்க்கை.

 

8

தெருவில் கலவரம்
மௌனமாய் ஓய்ந்தடங்குகிறது
இறுதி ஊர்வலம்.

 

9

நல்ல விளைச்சல்
அறுவடைக்குத் தயாராயிருக்கிறது
வங்கிக் கடன்.

 

10

இலையுதிர் காலம்
அதிகளவில் நிரம்பியுள்ளது
முதியோர் இல்லம்.

 

11

சீறும் புயல்
வெள்ளத்திலும் பாதுகாப்பாய் இருக்கிறது
சிறுவனின் கைகளில் ஆட்டுக்குட்டி.

 

 

எழுதியவர் 

– புதுகை ஆதிரா

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. புதுகை ஆதீரா

    எனது ஹைக்கூ கவிதைகளின் தேர்விற்கு மகிழ்வுடன் நன்றி🙏

    புதுகை ஆதீரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *