வீரராகவனின் ஹைக்கூ கவிதைகள் | Veeraragavan's Haiku Poems

 கருங்காட்டில் நடைப்பயணம்
வழிகாட்டியது
பௌர்ணமி நிலவு

 

 உணவுக்கான
காத்திருப்பு நீண்டதால்
பசியைத் தின்றது வயிறு

 

 கன்றை இழந்த தாய்ப்பசு
நீதி கேட்டது
இறுதியில் அதுவும் இரையானது

 

 சட்டைப் பைகளில்
கள்ளப் பணம்
தேர்தல் காலம்

 

 தண்ணீரைச் சிறைப்பிடித்த மனிதர்கள்
சொட்டு நீருக்காகத்
தவிக்கும் பறவைகள்

 

 காடுகளில்
மனித நடமாட்டம்
பற்றி எரிந்தது காடு

 

உதட்டோடு உதடு
உரசிக் கொள்கின்றன
பூந்தோட்ட மலர்கள்

 

 நீண்ட கைகளால்
ஓங்கி அடிக்கிறது நிலத்தை
நீர்வீழ்ச்சி

 

 மூச்சுக்காற்றிலும்
சுதந்திரம் இல்லை
அகதிகள் விடும் பெருமூச்சு

 

 வைகறைப் பொழுதில்
கோழி கூவியது
எழுந்து விட்டேன் கனவில்

 

 கழுதை தேய்ந்து
கட்டெறும்பானது
அரசியல்வாதிகளின் வாக்குறுதி

 

 சில்லறை கேட்டேன்
சத்தமாகச் சிரித்தாள்
பழம் விற்கும் கிழவி

 

 கறிக்குழம்பு வாசம்
எச்சில் ஊறியது
வழிப்போக்கனுக்கு

 

 நாவின் வறட்சி
தாகத்தை தீர்த்துக் கொண்டன
ஆறுகள்

 

 பால் தெறித்த காம்பு
துள்ளி வரும் கன்று
ஏமாற்றிய பால்காரன்

 

 வெற்று முழக்கங்கள் வீரவசனங்கள்
தேர்தல் நாடகத்தில்
ஏமாறும் மக்கள்

 

 இலைகளை உதிர்த்து விட்டு
நிர்வாணமாக நிற்கின்றன
மரங்கள்

 

 தண்ணீர்க் குழாயில் சாதிய வேறுபாடு
எல்லாப் பானைகளைத் தழுவிய நீரும்
ஒன்றாகவே கலந்தது சாக்கடையில் !!!

 

 சில்லென்ற சாரல் மழை
அழைத்துச் சென்றது
பனி மலைக்கு

 

 மூங்கில் காடுகள் உரசியது
மனிதனின் கைகளிலும்
தீப்பெட்டி

 

எழுதியவர்

 

திரு. இரா. வீரராகவன், எம்.ஏ., பி.எட்.,
தமிழ் ஆசிரியர்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *