1.
மூங்கில் இசை
நாதமாக நுழைகிறது
துளையில் புல்லாங்குழல்.
2.
ஓடும் நதி
பிரிகிறது பள்ளத்தாக்கில்
ஓடையில் மீன்
3.
பறக்கும் காற்றாடி
சிறுவன் கையில்
அசையும் வானம்
4.
களி மண் பொம்மை
மீசையில் ஒட்டியது
கிழே விழவில்லை.
5.
சலூன் கடை
சாதீ மயிர்
கலர் சாயம்.
6.
நிலா ஜன்னல் பக்கம்
வானம் குழந்தை கையில்
திறக்கும் சாவி.
எழுதியவர்
அகவலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


துளிப்பா-கவிதைகள்
அனைத்தும் அருமையாக இருக்கிறது .என் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகட்டும் .தொடரட்டும் உமது துளிப்பாக் கவிதைப்பயணம்.
கவிக்கோ .இரா .சீ ,பாலகுமார்,M .A .,
கடுகுக்குள் ஒரு கடல் துளிப்பா நூலில் 50துளிப்பாக்கள் அச்சிட்டு வெளியாகிஉள்ளது. /முகநூல் எழுத்தாளர் /ஊடகவியல் சங்க உறுப்பினர் /தமிழ் நெஞ்சம் /முத்துக்கமலம் /தங்கமங்கை/இனிய நந்தவனம் துளிப்பா/கட்டுரையாளர் .