ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் - நூல் அறிமுகம் | புத்தர் | ஹைக்கூ | கவிதை | https://bookday.in/

ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் – நூல் அறிமுகம்

வியப்பிற்குறிய செய்திகளை மட்டும் வாசகனுக்கு கடத்துவது மட்டுமே படைப்பாளனின் வேலையல்ல.

தவறான பாதையில் பயணிப்பவர்களிடம் தவற்றை சுட்டிக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் கூட. அந்த வகையில், தோழர் தமிழ்ராஜ் தனது “ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர்” தொகுப்பில்.

“விரலிடிக்கில் கசியும் புகை
விரைவினதொரு
மலர் வளையம் தயாரிக்கிறது” என சமூக அக்கறை கொண்டு பதிவு செய்து உள்ளார்.

நான்கு வழி சாலைகளில் பயணிக்கும் நமக்கு பயண நேரத்தை துரிதப்படுத்திகிறது. மறுபுறம் சுங்க சாவடி வரி என்கிற பெயரில் சுரண்டல். இச்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்கள் ஏராளம். ‌அதை விட துயரம். மக்கள் கனவு இல்லங்கள். அந்த காட்சியை துயர் மிகுந்த வரி கொண்டு அழகியலான கவி தந்துள்ளார்.

“வெட்டப்பட்ட பெருமரம்
வலி மிகுந்து அலறும்
தாய்ப்பறவை”

காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதியின் முகம் எழுகிறது.

ஊருக்குள் யானையை விரட்டுவதில் குறியாய் இருக்கும் நாம். பெரும் வனத்தையே அழித்து. உருவ வழிபாட்டை. நிறுவி. எளிய மக்களை ஒருவித போதையில் தள்ளும் கார்ப்பரேட் சாமியரை நோக்கி இது வரை மக்களின் ரெளத்திர விரல் நீளவில்லை.

எல்லைகள் அற்றது நமது ஆசைகள். மிக கவித்துவமாக வரைந்து காட்டுகிறார்.

“கயிற்றின் நீளமே
வாழ்வின் உயரங்களாகிறது
வானேறுகிறது பட்டம்”

தோழரின் தொகுப்பை வாசித்த பிறகு, நான் கண்ணாடி பார்க்கும் தருணங்களில் எல்லாம் ஞாபகத்தில் வந்து போகிறது.

ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர் - நூல் அறிமுகம் | புத்தர் | ஹைக்கூ | கவிதை | https://bookday.in/

 

“வாழ்வின் பேரனுபவம்
ஒளிர்கிறது
நரையாய்… ” நல்ல பார்வை.

“துண்டிக்கப்பட்ட தலையுடன்
அமர்ந்திருக்கிறார் புத்தர்
அசையற்றவனின் துன்பம் “

படிமங்கள் நிறைந்த, இந்த ஹைக்கூ மனித நேயமிக்க வாழ்வியலை சிதைத்து. வர்ணாசிரம தர்மத்தை தந்திரமாய் புகுத்திய கயவர்களை தோலுரித்து காண்பித்துள்ளார். வாழ்த்துகள் தமிழாராஜ் தோழர். மிக சிறப்பான தொகுப்பு.

‌நீங்களும் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு

தோழமையுடன்…

 

நூலின் தகவல்கள் 

நூல் : ஹைக்கூ வாசிக்கிறார் புத்தர்

வெளியீடு : மானுட சிந்தனை பதிப்பகம்

விலை : ரூ. 100/

தொடர்புக்கு : 99658 02089

நூல் அறிமுகம் எழுதியவர்

மு.அருணகிரி

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *