நூலின் உள்ளே: இந்த நூல் நம் கடந்து வந்த உலகப் போர்களை நம்மை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது ஒரு போருக்கு மிக முக்கியம் தகவல் பரிமாற்றம் அந்த தகவல் பரிமாற்றத்தின் உள்ள குறியீடுகள் அதை அறியாமல் இழந்த இழப்புகள் என்று எல்லாவற்றையும் இது அறிய வைக்கிறது மேலும் கூடுதலாக பல நிகழ்வுகளை சொல்கிறது இந்த நூல்..
இந்த நூலை வாசிக்கும் போது பல செய்திகள் புதிதாகவும் அதே சமயம் எத்தனை நாட்கள் அறிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்ற ஒரு நெருடலும் இருக்கிறது உலகப் போரில் ஜெர்மனி வெற்றி பெற்று உலகையே உலுக்கிய நிகழ்வு யாருக்கும் மறக்க இயலாது ஏன் இன்றுவரை கூட முகநூலில் அவரின் பெயரை பதிவிட்டால் பதிவு கூட பயந்து அழிந்து விடுகிறது அப்படிப்பட்ட மனிதர்களின் வெற்றிக்குப் பின்பு மிகப்பெரிய தொழில்நுட்பம் உண்டு என்பதை வாசிக்கும் போது பிரமிப்பு தான் மிஞ்சுகிறது இதுவரை நான் இந்த நிகழ்வை வாசித்தது இல்லை இது புதிதாக தெரிந்து கொண்டது என்று தான் சொல்வேன்..
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி நம்பிய மிகப்பெரிய வீரன் தொழில்நுட்பம் என்ற எனிக்மாவும் என்ஸ்கிரிப்ஷன் இவர்கள் இருவர் தான் இந்த வீரர்களின் தகவல் பரிமாற்றம் தான் இந்தளவு ஜெர்மனி வெற்றிக்கு வழி வகுத்தது அதை எதிர்கொள்ள பிரிட்டன் பல வியூகங்களை செய்தாலும் தோல்வி தான் வல்லவனுக்கு ஒரு வல்லவன் என்று இளம் வயது கணித மேதை ஆலன் டூரிங் தான் இந்த இரு தொழில்நுட்பத்தின் பங்கை குறைக்க செய்த செயல்கள் அதிகம் இதை உருவாக்க கால நேரம் பல நாட்கள் எடுத்தது அதை சரியாக பயன் படுத்தி முறியடித்தவர் ஆலன் டூரிங்..
இதற்காக ஆலன் பல இன்னல்கள் அவமானங்கள் என்று சந்தித்தது இறுதியில் பிரதமருக்கு கடிதம் எழுதிய பிறகே அவருக்கு அந்த செயலுக்கான உதவி கிடைத்தது
அதுவரை அவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை இத்தனை வெற்றிக்கு உழைத்த மனிதர்களை வெளி உலகத்திற்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தவில்லை ஜெர்மனி அதற்கு பல காரணங்கள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை எத்தனையோ உயிர்களை காப்பாற்றிய ஆலனின் உயிரை காப்பாற்ற முடியவில்லை மர்மமான முறையில் இறந்தார் ஆலன் அவர் தின்ற ஆப்பிளில் சைனைட் இருந்தது என்று பலயூகங்கள் அவள் தின்ற ஆப்பிளின் பாதி தான் ஆப்பிள் போனின் லோகோ என்று பலவாறு செய்திகள் உலா வருகின்றன..
அந்தப் போர் பற்றி வாசிக்கும் போது ஆலன் எப்போது கண்டுபிடிப்பார் என்ன செய்வார் என்று ஆர்வமாக இருக்கும் அந்த இடங்களை வாசிக்கும் போது.. காரணம் ஓநாய் நீர்மூழ்கிக் கப்பல்கள் பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுள்ளது ஒரு புறம் அதை வாசிக்கும் போது மனதில் தோன்றும் இப்போது நடந்து கொண்டிருப்பது போலவும் ஆலன் சீக்கிரம் கண்டுபிடிங்கள் என்று எண்ணத் தோன்றும்.. ஆலனை பற்றி வாசிக்கும்போது ஏதேனும் குழப்பமாக இருந்தால் எல்லோரும் புகைப்பிடிப்பார்கள் அல்லது பாட்டு கேட்பது அமைதியாக இருப்பது என்று தான் இதுவரை அறிந்திருப்போம் ஆனால் ஆலன் அவர்கள் குழப்பமான சூழ்நிலையில் மாரத்தான் ஓடுவாராம் அப்போது தான் அவரின் குழப்பங்கள் தீருமாம் இதுபோல் இப்போதுதான் நான் வாசித்திருக்கிறேன் விஞ்ஞானிகள் இப்படித்தான் இருப்பார்கள் நமக்கு என்ன தெரியும் மக்குகள் தானே நாம்..
ஓநாய் நீர் மூழ்கி கப்பல்களால் நடத்தப்பட்ட அட்லாண்டிக் போர் தான் மிக நீண்ட கடற்போர் என்று குறிப்பிடப்படுகிறது..
இந்த நூலில் பல நிகழ்வுகளை ஆசிரியர் சொல்லியுள்ளார் இந்த உலகப் போர் பற்றி வாசித்து முடித்தவுடன் இதில் உள்ள இதுவரை அறியாத தொழில்நுட்பம் தெரிகிறது.

முதன் முதலில் ஆரம்பிக்கும் கட்டுரைகளை நாம் குறிப்பிட வேண்டும் (Artificial intelligence) செயற்கை நுண்ணறிவுடன் காதல் ஆன்டரியா பீட்டர் அவர்களின் காதலைப் பற்றி தான் சொல்கிறேன்.. எல்லை மீறிய காதல் கல்யாணம் வரை சென்ற காதல் என்று பல நிகழ்வுகளை சுவாரசியமாகவும் அதே சமயம் இதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டுதான் உள்ளது என்று அறியும் போது வியப்பாகவும் நாமும் கூட கணினி என்று அறியாமல் பல நேரம் பேசி இருக்கிறோம் நிகழ்வுகள் மனதில் வந்து போகிறது அதில் ஸ்கேன் செய்து எலிசாவுடன் பேசலாம் இப்போது கூட என்று இருந்தது நானும் ஸ்கேன் செய்து சில மணி துளிகள் பேசினேன் கேட்கும் கேள்வியுடன் உடனே பதில் உடனே ஒரு கேள்வியை உள் கேள்வியாக கேட்கிறது வியப்புதான் ஏ ஐ வரும் காலத்தில் மனிதர்களில் தவிர்க்க முடியாத ஒன்று என்று அறிந்து கொள்ள முடிகிறது..
நாம் இணையத்தில் தேடும் தேடல்கள் அதற்கு வரும் பதில்கள் அது போலவே அது சம்பந்தமாக வரும் செய்திகள் என்று இதில் எண்ணற்ற நிகழ்வுகள் உள்ளது நாம் ஓடிட்டியில் பார்க்கும் படங்களில் கூட அதனை செயல்படுத்த தெரிகிறது பிடிக்காததை எப்படி தவிர்க்கிறது பிடித்தது எப்படி நமக்கு அது இன்னும் அதிகமாக நமக்கு தெரியப்படுத்துகிறது என்று அறிந்து கொள்ள முடிகிறது..
போட்டியில் வென்ற கணினி வாட்சன் அதனின் பரிசுத்தொகை ஒரு மில்லியன் டாலர்என்றும் பல நிகழ்வுகள் இன்னும் நம் அறியாத நிகழ்வுகள் என்று நிறைய இருக்கிறது உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த டீப் ப்ளூ..
நாம்தான் அறிந்து கொள்ளவில்லை நமக்கு தான் ஒன்றும் தெரியவில்லை என்று இதை வாசிக்கும் போது உணர முடிகிறது..
இந்த நூலை வாசிக்கும் போது Chat GPT அப்படி ஆப் இருக்கா என்று என் மொபைலில் நான் google appல் போட்டால் அது ஏற்கனவே என் மொபைல் இருந்தது ஆச்சரியம் என்ன இது என்று யோசித்து என் மகன் எனக்கு சொல்லாமல் அதை பதிவிறக்கம் செய்துள்ளான் அதுவரை நம் கண் முன் இருந்து கூட எனக்கு தெரியவில்லை ஒன்றைப் பற்றி அறியும் போது தான் நாம் அதை தேட நினைக்கிறேன் கண்முன் இருந்தாலும் அதை பார்ப்பதில்லைை என்ன ஒரு நுண்ணறிவு என்று நாம் நம்மை பற்றி யோசித்துக் கொள்கிறேன்..
அவன் அறிந்ததை கூடநான் அறிந்திருக்கநான் அறிந்திருக்கவில்லை அதுதான் இந்த காலத்து பிள்ளைகள்..
இந்த நூல் நாம் பார்க்காத பார்த்துக் கொண்டே அதனுடன் பயணித்து எதுவும் இதுவரை தெரியாத அறியாத செய்திகள் நிறைந்த புத்தகம் தவறு விடாதீர்கள் எதிர்காலம் இதுதான் முக்கியமாக மனிதர்களை பயிற்றுவிக்கும் என்பது மட்டும் உண்மை அற்புதமான நாவல் தவறாமல் இதை அனைவரும் வாசிக்க வேண்டும்..
ஆசிரியர் பற்றி:
ஹரிஹரசுதன் தங்கவேலு – சொந்த ஊர் கோவை வணிக மேலாண்மையில் முதுநிலை மற்றும் ஹேக்கிங் நிபுணத்துவம் பயின்றவர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் நிபுணராக ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்கள். தினசரி மற்றும் வார இதழ்களில் கதைகள் மற்றும் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சென்னை தமிழ்ச் சங்கத்தின் 2018ம் ஆண்டுக்கான சேக்கிழார் தமிழ் விருது மாண்புமிகு ஆளுநர் உயர்திரு பன்வாரிலால் புரோஹித் அவர்களால் இவருக்கு அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் கதை என்ற இவரது முதல் புத்தகம் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் உயர்திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கரங்களால் 2021ம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளியானது. இந்த புத்தகம் 2021 ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த நூலுக்கான பரிசு பெற்றது குறிபிடதக்கது. AI எனும் ஏழாம் அறிவு இவரது இரண்டாவது புத்தகம்.
நூலின் தகவல்கள்:-
நூல் : AI எனும் ஏழாம் அறிவு
நூலாசிரியர் : ஹரிஹரசுதன் தங்கவேலு
வெளியீடு : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
விலை : ரூ. 230/-
பக்கங்கள் : 191
நூலறிமுகம் எழுதியவர்:-
நடராஜன் செல்லம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.