International Library Day: Haruki Murakami எழுதிய "The Strange Library" புத்தகம் ஓர் அறிமுகம் | Haruki Murakami's The Strange Library Book Review in Tamil | www.bookday.in

Haruki Murakami எழுதிய “The Strange Library” – நூல் அறிமுகம்

 “The Strange Library” – நூல் அறிமுகம்

*வெற்றியை நாடியவன் இருப்பது நூலகத்தில் வெற்றியடைந்தவன் இருப்பது நூலகத்தின் நூலில்*

📚 சர்வதேச நூலக தினமாகிய இன்று ( October 24th) நூலகம் குறித்த ஒரு நூலை விமர்சிப்பதில் பேரானந்தம் கொள்கிறேன்,
Haruki Murakami யின் அருமையான சொற்பொழிவு மற்றும் கதை சொல்லும் முறை, கதை எவ்வளவு எதிர்பாராததாக இருந்தாலும் நம்மை கதை களத்திற்குள் நேரடியாக ஒரு கதாபாத்திரமாக கருதி, கதையினூடே ஆர்வத்தோடு பயணிக்க வைக்கும் சக்தி வாய்ந்தது.. நுணுக்கமான விஷயங்களை பேசி நம்மை ஆழமாக சிந்திக்க வைப்பதில் முராக்மியை போன்ற எழுத்தாளர்கள் மிகக் குறைவுதான்..

விமர்சனத்தை வாசிக்கும் வாசகர்களாகிய உங்களிடம் ஒரு கேள்வி தங்களை ஒரு நூலகத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு உனக்கு இதனை விட்டு வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் வரும் வரை இங்கேயே காலத்தை செலவழிக்கலாம் என்று கூறினால் எப்படி இருக்கும்!!?

உண்மையை சொல்லப்போனால் வீட்டிலே ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கலாம் என்று அமர்ந்தால் நம்மவர் பார்க்கும் பார்வையே வேறு விதம், ஓகே..!! சாப்பாடு கடையில வாங்கிட வேண்டியதுதான் என்று சொல்வது போல்.. இப்படி ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பதற்குள்ளாக பல்வேறு பிரச்சனைகள், குழப்பங்களை சமாளிப்பது எதார்த்தமே..

அப்படி ஒரு கேள்வியை இப்பொழுது என்னிடம் கேட்டிருந்தால் அப்பாடா என்று பெருமூச்சு விட்டு சில காலங்களை மகிழ்ச்சியாக நூலகத்திலேயே கழித்துவிடுவேன்!!

International Library Day: Haruki Murakami எழுதிய "The Strange Library" புத்தகம் ஓர் அறிமுகம் | Haruki Murakami's The Strange Library Book Review in Tamil | www.bookday.in

நூலகங்களைப் பற்றிய புத்தகங்களை பற்றி சிந்திக்கும்போது எழுத்தாளர் *எஸ்.ரா. வின், நூலக மனிதர்கள்* (எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தான் சென்று வந்த நூலகங்களைப் பற்றியும், சில அற்புதமான நூலகர்களை பற்றியும், கடந்து வந்த நூலகத்தில் தன்னை வியப்பூட்டிய நூலக மனிதர்களைப் பற்றியும் வியந்து எழுதியிருப்பார்) next book, *Matt Haig ன் The Midnight Library*.. ( The story between life and death) போன்ற புத்தகங்கள் என் மனத்திரையில் நிழலிட்டது..

இப்படித்தான் ஒரு சிறுவனும் நூலகத்தில் ஒரு புத்தகம் எடுக்க சென்று, விசித்திரமான தாத்தாவிடம் மாட்டிக் கொண்டான். Libraryக்கு போய் ஒரு Book படிப்போமே ன்னு நினைச்சது ஒரு குத்தமாடா!!
தாத்தாவோ, சிறுவனிடம் ஒரு மாதம் நன்றாக இந்நூலகத்தை பயன்படுத்தி நூல்களை கற்றுக்கொள் அப்பொழுது தான் அறிவோடு இருக்கும் உன் மூளையை ருசியாக சாப்பிடுவதற்கு இன்பமாய் இருக்கும் என்று பீதியை கிளப்பி விடுகிறார்..

சிறுவனோ, ஒட்டோமான் வரி அமைப்பு (Tax collection) பற்றி அறிந்து கொள்வதற்காக நூலகம் செல்ல, அங்கிருக்கும் 107வது அறையிலிருக்கும் விசித்திர தாத்தாவிடம் சென்று மாட்டிக்கொள்ள, அவரோ சிறுவனை 100 volumes இருக்கிற மாதிரி புத்தகத்தை கையில் கொடுத்து, அதனை முழுவதும் வாசிப்பதற்கு Maize போன்ற அமைப்பை கொண்ட ஒரு இடத்தில் படிக்க விட்டு குழப்பி விட்டு படித்து முடித்ததும் அவனதும் ருசிகரமான மூளையை சாப்பிட போவதாகவும் பயமுறுத்துகிறார்..

தன்னை அறியாமலேயே ஒரு சிறைக்குள்ளாக மாட்டிக் கொண்டதாக எண்ணி சிறுவனும் அடுத்து வரும் கதாபாத்திரங்களான மர்மமான ஊமைப் பெண், மற்றும் செம்மறி ஆட்டு மனிதன் ஆகியோரின் உதவியுடன் அவ்விடத்தை விட்டு தப்பி சென்றானா? தப்பிப்பதற்கான வழியை கண்டுபிடித்தானா? அவன் சந்தித்த நபர்கள் அவனுக்கு உதவினார்களா? அவன் நூலகத்தை நாடியதற்கான பிரதிபலன் அவனுக்கு கிடைத்ததா? நூலகத்தில் என்னதான் நடந்தது? இத்தனை மர்ம கேள்விகளுக்குமான பதிலை The Strange Library வாசித்து அறிந்து கொள்வோமா!!..

இக்கதை களம் இருப்பெரும் வித்தியாசமான அணுகுமுறையை சொல்லி செல்கிறது. அப்பாவியான சிறுவன் எதிர்கொள்ளும் போராட்டம் மிக்க சூழ்நிலைகள் ஒருபுறம், பயங்கரமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் முதியவரின் மிரட்டல்கள் மறுபுறம்..

International Library Day: Haruki Murakami எழுதிய "The Strange Library" புத்தகம் ஓர் அறிமுகம் | Haruki Murakami's The Strange Library Book Review in Tamil | www.bookday.in

நூலகம் எதற்காக? என்னும் கேள்விக்கு பெரும்பாலான வாசகர்களுக்கு, அதுவும் சிறுவனுக்கு, நூலகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் அமைதியான புகலிடம்; மற்றும் பரந்த அறிவுக் களஞ்சியங்களை அணுகக்கூடிய இடம்.

கதை களத்தில் பயணிக்கும் சிறுவனுக்கு நூலகம் தரும் பரிசு சற்று சவாலாகத்தான் உள்ளது. தேடிச்சென்ற அறிவினை பெறவும் முடியவில்லை, அறிவினை கண்டடைய உதவும் நூல்களை கண்டெடுப்பதற்கு வழிகாட்டும் நூலகர்களும் குழப்பவாதிகளாகவே அமைந்து விட்டனர் அவனுக்கு, போன்ற நூலகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டுள்ளார் ஆசிரியர் இப்புத்தகத்தில்..

எது, எப்படியோ!! நாம் பயன்படுத்தும் நம் நூலகங்களின் நிலைப்பாடு என்ன? நூலக பயன்பாடு குறித்த விழிப்புணர்வை நம் மாணவச் செல்வங்களுக்கு விதைத்திருக்கிறோமா? புத்தக வாசிப்பின் மேன்மை அவர்கள் மனதில் வேரூன்றி இருக்கிறதா? போன்ற கேள்விகளை நமக்குள்ளே எழுப்பி நூலகத்தின் பயன்பாட்டை அதிகரிப்போம்..!! வளமான எதிர்காலத்தை நம் மாணவச் செல்வங்களுக்கு உருவாக்குவோம்..!!

*இவ்வுலகமாகிய நூலகத்தில்,*
*புத்தகமாக மனிதர்களாகிய நாம்..!!*
*எவ்வரிசையல் இடம்பெறுகிறோம் என்பது,*
*நம் குணாதிசயங்களை பொறுத்தே..!!*
சில நிமிடங்கள் ஒதுக்குவோமா..!!
நூலகத்தில் நம் வரிசையை கண்டறிய..!!

📚📚📚📚📚📚📚📚📚📚📚
*Wishing you all a thoughtful International Library day*
📚📚📚📚📚📚📚📚📚📚📚

நூலின் விவரங்கள்:

புத்தகம் : The Strange Library
ஆசிரியர் : Haruki Murakami
விலை: ரூ.550

எழுதியவர் : 

✍🏻 சுகிர்தா அ,
நெல்லை..

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *