உடல் நலமும் மருந்து துறையும் – எஸ்.சுகுமார்

 

முதலில் உடல்நலம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

ஒருவர் வெறுமனே நோயின்றி இருந்தால் மட்டுமே நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று அர்த்தமல்ல உடலாலும், மனதளவிலும் சமூகத்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி வாழ்ந்தால்தான் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

ஆரோக்கியமாக இருத்தல் என்பது நோய்த் தடுப்பு, அப்படியே நோய் வந்தாலும் அதற்கான மருத்துவம், மற்றும் காயங்கள் படுவது,  இதர உடல் மற்றும் மனதாலும் எவ்வித தாக்குதலுக்கும் இல்லாதிருக்கிறார் என்பதாகும்.  அவை இருந்தால் மட்டுமே அவர்  ஆரோக்கியமாக இருக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

உடல் ஆரோக்கியம்,  சமூகக் கலாச்சாரம், சுற்றுப்புற சூழல் மற்றும் பொருளாதார ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்து சத்தான உணவு, வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், மரபு ஆகியவைகளை கொண்டு கணக்கிட்டு உடல்நலத்துடன் ஒருவர் இருக்கிறாரா என்று அறியப்படுகிறது.

கொரோனா தொற்று நோய்

Helping Nuclear Medicine and Radiotherapy Departments Deal with ...

இன்றைய சூழலில் கொரோனா உலகத்தையே உலுக்கிவிட்டது. இதற்காக தனிமையில் இரு, தள்ளி இரு என்றெல்லாம் கூறுகிறார்கள். இவ்வாறு இருந்துவிட்டால் மட்டுமே இந்த  தொற்று நோய்ப் பரவலைத் தடுத்துவிட முடியாது. இதற்கான மருத்துவம் தேவை.

தடுப்பு மருந்துக்கான முயற்சி

உலகளவில் இன்று பல நாடுகளில் இந்தக் கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க அதிவேகமாக முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவண்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனமும் சீனாவில் ஹுவான் பகுதியிலுள்ள ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அதே போன்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் சுவீடன் நாட்டு ஆஸ்ட்ரா செனகா என்ற நிறுவனமும் பார்டா என்ற அமைப்பும் இணைந்து ஆராய்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. இவர்கள்  வரும் அக்டோபர் மாதத்திலேயே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தாகிவிடும் என்று கூறுகின்றனர்.

உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களின் நிலைதான் என்ன? ஏன் இன்று உலகளாவிய நிலையில் தொற்று நோய்க்கு லட்சக்கணக்கில் மாண்டனர் என்பதற்கு இந்த பன்னாட்டு நிறுவனங்களைக் கேட்டால் அவைகள் பதிலளிக்காது. ஏனெனில் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் பல பத்தாண்டுகளாக வெப்ப மண்டல நாடுகளில் நிலவும் நோய்களுக்கும் அல்லது தோன்றக்கூடிய நோய்களுக்கும் மருந்துகளை கண்டறிய  எந்த ஒரு ஆராய்ச்சியினையும் செய்யவில்லை. இதற்கு ஒரே காரணம் அவர்களுக்கு இதில் கொள்ளை லாபம் இல்லை. எனவே இந்த ஆராய்ச்சியினைக் கைவிட்டுவிட்டன.

கொரோனா தடுப்பு மருந்து வெற்றி ...

சமீபகாலமாக இரத்த அழுத்தம், நீரழிவு, கொலஸ்ட்ரால் என்று சொல்லக்கூடிய கொழுப்பு இவைகளெல்லாம் அதிகமாக உடலில் இருப்பதைக் குறைக்கும் மருந்துகளிலேயே கவனம் செலுத்தின. இவைகளெல்லாம் நோய்களல்ல. இவைகள் உடலில் ஏற்படும் குறைபாடுகள். இவைகள் மனித உடலில் ஏற்படுவதற்குக் காரணம் சரிவிகித உணவு இல்லாதது, அதிக கொழுப்பான உணவு, மன அழுத்தம், வேளைக்கு உணவு சாப்பிட முடியாதது மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் ஏற்படக்கூடியது. இவைகளுக்கு மருந்து சாப்பிட ஆரம்பித்தால் கடைசி வரை சாப்பிட வேண்டும். எனவே இதில் தங்களின் மருந்தை விற்க ஒரு நிரந்தர சந்தை இருக்கிறது. அதுவும் நம் எல்லோருக்கும் இவைகள் என்ன விலைக்கு விற்கப்படுகின்றன என்று தெரியும். இதனை அதிகமாக விற்க இவைகள் மற்றொரு விளையாட்டினையும் விளையாடின. அது என்னவென்றால் நாம் மருத்துவரைப் பார்த்தால் அவர் பரிசோதனை செய்து அந்த தகவலுடன் வாருங்கள் என்று அனுப்புவார். நாமும் அதனைச் செய்வோம். பின் உங்களுக்கு இவ்வளவு கொழுப்பு அதிகமாக உள்ளது அல்லது சர்க்கரை அதிகமாக உள்ளது என்றெல்லாம் அந்தப் பரிசோதனை முடிந்த பின் சொல்வார். நாமும் நம் தலைவிதி என்று மருந்துகளை உண்போம். அதற்கு எல்லையே இல்லை. பிறகு ஆண்டிற்கு இரு முறை அல்லது ஒரு முறை என்று பரிசோதனை செய்யச் சொல்வார். இது தொடர்கதையாக இருக்கும்.

அளவுகோலும் பன்னாட்டு நிறுவனங்களும்

ஆனால் இந்த அளவுகோலை இந்த மருந்து நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதுதான் பிரச்சனை. மருத்துவர்கள் அல்ல. இந்தப் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்கள் கொள்ளை லாபத்திற்காக இந்தப் பரிசோதனை கணக்கினை நிர்ணயிக்கின்றன. அதற்கு ஒரு சில விலை போகிற மருத்துவர்கள் சொல்லுவதை ஆதாரமாகக் காட்டுகின்றன.

இதனால்தான் அண்மையில் நீரழிவு, கொலஸ்ட்ரால் இவைகளைப் பற்றிய மறு ஆய்வு நடத்தப்பட்டு இந்த அளவுகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தத் தரவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் தர மறுக்கின்றன அல்லது அப்படியே வெளியிட்டால் அந்தந்த நிறுவனங்களுக்கு சாதகமாக வெளியிடுகின்றன. இதில் எத்தனையோ ஊழல் இருக்கின்றது.

காப்புரிமையும் சந்தை ஏகபோகமும்

மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ...

மேலும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையினைப் பெற்றுவிட்டால் மக்களின் நிலை அதோகதிதான். அவைகள் ஏகபோக நிலையினை இந்தக் காப்புரிமையால் பெற்றுவிடுகின்றன. ஆகவே அவைகள் வைத்ததுதான் விலை, அவைகள் விற்பதுதான் சந்தை அவைகள் சொல்வதுதான் மருந்து.

கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் கண்டுபிடித்தவர்களுக்கு  போய்ச்  சேருவதில்லை  அது  ஏகபோகமாக உரிமையாக ஒரு நிறுவனத்திற்கு போய்ச்சேருகிறது. அதுதான் விபரீதம். இதனை வைத்து 20  வருடம் 30 வருடம் என்று தங்களுக்கு உலகச் சந்தையில் ஏகபோக உரிமையினை நிலைநாட்டிக் கொள்கின்றன.

இந்தியாவில் நிலை

இந்த நிலை நம் நாட்டில் சுதந்திரத்திற்கு முன் மிக மோசமாக இருந்தது. இதனை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கேபார் என்பவர் 1959ல் இந்தியாவில்தான் உலகத்திலேயே மருந்துகள் அதிக விலையில் விற்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் அன்றைய மக்கள் நலனைக் கொண்டு செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அரசு காப்புரிமைச் சட்டத்தை மாற்றி, மருத்துவத் துறையில் முன்பிருந்த சோவியத் உதவியுடன் பொதுத்துறை ஐடிபிஎல் என்பதை நிறுவியது. யூனிசெப் இந்தியாவுக்கு இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் நிறுவனத்தை நன்கொடையாக நிறுவி தந்தது. இதைத் தவிர 1860ல் ஆச்சாரியா பி.சி ராய் என்பவர் சில தாவரங்களிலிருந்து நச்சுத்தடை மருந்தினைக் கண்டறிந்தார். பின்னர் இந்த ஆச்சாரியா, பி.சி. ராயு, பேராசிரியர் கஜ்ஜார் ஆகியோர் இணைந்து பெங்கால் கெமிகல் நிறுவனத்தினை நிறுவினர். இந்தியாவில்தான் மலேரியாவுக்கான குளோரோக்குயின் மருந்தானது கொய்னா மரத்திலிருந்து கண்டறியப்பட்டது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1970ல் கொண்டுவரப்பட்டது. விலைக் கட்டுப்பாட்டு ஆணையமும் இருந்தது. இவைகளெல்லாம் அன்று இந்திய முதலாளிகளால் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாத போது நடந்தது.

ஆனால் தாராளமயம் என்று நம் நாட்டில் மத்தியில் காங்கிரசும் பாஜகவும் இந்தியாவில் செல்வங்களைக் கூறு போட்டு விற்பதில் போட்டி போட்டு செயல்படுகின்றன. இன்று பாஜக என்ன செய்கிறது என்று அனைவரும் தெரிந்தது. ஒரு பாவமும் செய்யாத பிஎஸ்என்எல் எப்படி இழுத்து மூடப்பட்டது என்பதை உலகு அறியும். இது போன்று பல துறைகளில் நடக்கிறது. அதுபோன்றே ஐடிபிஎல். எச்ஏஎல் என்று முன்பு சொன்ன இரண்டு பொதுத்துறை மருந்து நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. இனி தனியார் நிறுவனங்களிடமிருந்துதான் அரசு மருந்துகளை வாங்க வேண்டும்.

மருந்து விலைக் கட்டுப்பாடு

கலாரசிகன்: காப்புரிமைச் சட்டமும் ...

நம் நாட்டில் மருந்து விலை கட்டுப்பாடு நிறுவனம் உள்ளது. அது முன்பு ஏதோ ஒரு அளவுக்கு செயல்பட்டது. ஆனால் தாராளமயக் கொள்கையால் அது நீர்த்துப் போய்விட்டது.

மருந்துகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது : 1. கச்சாப்பொருள் விலை  2.. கச்சாப்பொருளிலிருந்து மருந்தாகத் தயாரிக்கும் செலவு 3.. தரம் 4. அதில் ஏற்படும் சேதாரம் 5. அதற்குப் பின் அதனை அட்டையிலோ அல்லது பாட்டிலிலோ பாக் செய்வது 6. தயாரித்த பின்பு அதனை விற்க ஏற்படும் செலவுகள். இதில் நிறுவனங்களின் லாபமும் இணைந்துள்ளது. 7. பிறகு வரிகள் 8. இறக்குமதியானால் சுங்க வரி.

ஆண்டு     விலைக் கணிப்பு     மொத்த   அடிப்படை      அத்தியாவசிய

                                                                           மருந்துகள்                      மருந்துகள்

 

1979       மேற்கூறியது போல்     342       அத்தியாவசிய                      90 %

மருந்துகள்

 

 

1987             ”         “                                                      142                                        70 %

 

1995             “         “                                                        76                                     50 %

 

2012        சந்தை விலையினை          348       அத்தியாவசிய         18 – 20 %

நிர்ணயிக்கும்                              மருந்துகள்

 

இந்த அட்டவணையிலிருந்து அத்தியாவசிய மருந்துகளின் விழுக்காடு ஆண்டுக்கு ஆண்டு  சந்தையில் குறைந்து வருவது தெரியும். முன்பு 1979ல் 90% ஆக இருந்தது 2012ல் 18-லிருந்து 20%க குறைந்துவிட்டது. அப்படி என்றால் அத்தியாவசியமாக இல்லாத மருந்துகளே அதிகம் விற்கப்படுகின்றன.

அன்னிய அல்லது இந்திய மருந்து நிறுவனங்களின் ஒரே நிலை அவர்களின் லாபம் மட்டுமே. மக்களின் உடல்நலம் இல்லை. அவர்களின் கருத்துதான் என்ன?

“மருந்துகளுக்காகவே நாங்கள் உள்ளோம்”. இதன் அர்த்தம் இவர்கள் மருந்துகளை விற்பார்கள், அதை சாப்பிடவே மக்கள் உள்ளார்கள்.

இப்போது அடுத்த அணுகுண்டு வெளிவருகிறது.

இந்த மருந்துகளில் உயிர்காக்கும், அத்தியாவசிய மருந்துகள், குறைந்த தேவையுள்ளவை மற்றும் இதர மருந்துகள் என பிரிக்கப்படுகிறது. இப்போது நாம் பார்க்கப்போவது மருந்து நிறுவனங்கள் எந்த வகை மருந்துகளை அதிகம் விற்கிறார்கள் என்பதாகும்.

 

 

ஆண்டு நிபந்தனை வரைமுறை மருந்துகளின் எந்தபிரிவு சந்தையில்  
      எண்ணிக்கை   விற்கும்  
          விழுக்காடு  
             
1979 மருந்து உற்பத்தி        
  உற்பத்தியாகும் செலவின் 342 அத்தியாவசிய 90%  
  செலவின் அடிப்படையில்   ம்சருந்துகள்    
  அடிப்படையில்          
             
1987         ”         “ 142   70%  
             
1995         “         “ 76   50%  
2012 சந்தைவிலை சராசரிவிலை 348               “ 18 – 20 %  
  அடிப்படையில் அடிப்படையில்        

 

மேலே இருக்கும் அட்டவணையிலிருந்து ஆண்டுக்கு ஆண்டு அத்யாவசிய மருந்துகள் விற்பது குறைந்து கொண்டே வருவதை பார்க்கமுடியும்.

இந்த மருந்து நிறுவனங்கள் எத்தனை லாபம் சம்பாதிக்கின்றன என்பதை பாருப்போம்

இந்த அட்டவனை 1979 மருந்துகள் விலை கட்டுபாட்டின் அடிப்படையில்

உயிர் காக்கும்   அத்தியாவசிய     குறைவாக        தேவை இல்லாத
மருந்துகளில்     மருந்துகளில்   பயன்படுத்தப்படும்       மருந்துகள்

லாபம்            லாபம்            லாபம்               லாபம்

40 %              55 %              100 %           அளவே இல்லை

 

சந்தையில்       சந்தையில்       சந்தையில்          சந்தையில்

பங்கு                     பங்கு                     பங்கு                   பங்கு

90%                            90 %                         90 %                   10 %

 

மருந்து சந்தையில் பங்கு இலாபம்
உயிர் காப்பவை 40% 90%

 

அத்தியாவசியமானவை 55% 90%
குறைவாகப் பயன்படுத்தபடுபவை 100% 90%
தேவை இல்லாத மருந்துகள் 10% அளவே இல்லை

 

 

ஆனால் 1987 மருந்துக் கட்டுபாட்டின் அடிப்படையில்

தேசிய உடல்நலத்         இதர அத்தியாவசிய      அத்தியாவசியமில்லா

திட்டத்தின் கீழ் வரும்           மருந்துகள்              மருந்துகள்

மருந்துகள்

உற்பத்திச் செலவுக்கு       உற்பத்திச் செலவுக்கு   விலைக் கட்டுபாடே

மேல் 100 % லாபம்          மேல் 100 % லாபம்     இல்லை

70 % மருந்துகள்           70 % மருந்துகள்          30 % மருந்துகள்

விற்கப்படுகின்றன          விற்கப்படுகின்றன       விற்கப்படுகின்றன

 

முதல் அட்டவணையில் லாப வரைமுறை இருந்தது. அது தாராளமயக் கொள்கைக்கு முன் இருந்த நிலை. பிறகு தாராளமய காலத்தில் சந்தைதான் விலையினை நிர்ணயிக்கும் என்று வந்த உடனேயே குறைந்தபட்சம் எப்படி 100 % லாபம் மருந்து நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன என்பது தெளிவு.

ஒரு புறம் இவ்வாறு தாராளமயத்தால் 100 விழுக்காட்டிற்கு மேல் லாபம். அடித்தது, காப்புரிமை என்ற பெயரில் ஏகபோகம். அப்படி என்றால் மேலே குறிப்பிட்ட லாப விழுக்காடிற்கு மேல் மருந்துகள் விற்கப்படுகின்றன.

இன்று இந்த கொரோனா தடுப்பு மருந்துகளுக்கும் இதே போன்று காப்புரிமையினை இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் கேட்கின்றன. ஒரு சிறிய நாடான கோஸ்டா ரீகா மற்றும் இதர ஏழை நாடுகள் இந்தக் கொரோனா தடுப்பு மருந்திற்குக் காப்புரிமை கூடாது என்று கோருகின்றன. ஆனால் இந்தியா அதற்கு வாய் திறக்கவில்லை.

மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ...

இருப்பினும் இந்தியாவில் கட்டாய லைசன்ஸ் சட்டம் அமுலில் உள்ளது.; இந்தச் சட்டம் முன்பு பாராளுமன்றத்தில் பலமாக இடதுசாரிகள் இருந்த போது பாதுகாக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ப சட்ட மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆனால் அதனைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிக் கட்சிகளே. மற்ற எதிர்க்கட்சிகளும் மௌனம் சாதித்தன.

இன்றும் மோடி அரசு இந்தச் சட்டப் பகுதியைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்களாகிய பாரத் சீரம், சீரம் இன்ஸ்டிடியூட், ஆகிய தனியார் நிறுவனங்களுக்கும், செங்கல்பட்டிலுள்ள இந்துஸ்தான் லாடக்ஸ் லிமிடட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கும் இந்தக் கொரோனா தடுப்பு மருந்தினைத் தயாரிக்க அனுமதி கொடுக்க முடியும். இதனை உஅலகில் எந்த நாடும் தடுக்க முடியாது. இது உலக வர்த்தக சபையே தேசிய பாதுகாப்பு கருதி ஒப்புக்கொண்ட சரத்தாகும்.  ஆனால் மோடி அரசு இதனைச் செய்யுமா என்பதே கேள்வி.

இதைத் தவிர்த்து உலக சுகாதார நிறுவனம் ஒரு நாடு அதனுடைய உள்நாட்டு உற்பத்தியின் அளவில் 5 % மக்கள் உடல்நலம் சுகாதாரத்திற்காக செலவிட வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்தததிலிருந்து இன்றுவரை  இதற்கான செலவு 1%ஐத் தாண்டியதில்லை. இந்த வருடமும் பட்ஜெட்டில் மத்திய அரசு சுமார்  ரூ. 69,000 கோடி அளவுதான் மக்கள் உடல்நலம் சுகாதாரத்திற்காக ஒதுக்கியுள்ளது. ஆனால் அண்மையில் 50 முதலாளிகளின் கடன் தொகையான ரூ. 69,000 கோடி அளவு  ரத்து செய்துள்ளது. இது யாருக்கான அரசு என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அப்படி என்றால் 130 கோடி மக்களின் உடல்நலனை விட 50 முதலாளிகளின் லாபம் முக்கியம் என்கிறது அரசு. இதனை ஏற்க முடியுமா?

இப்போதும் 20 லட்சம் கோடி பொருளாதாரத்தினைத் தூக்கிப் பிடிக்க ஒதுக்கி உள்ளதாக அரசு தம்பட்டம் அடித்தது. ஆனால் பொருளாதார நிபுணர்களும், இதர சர்வதேச கணக்காய்வு நிறுவனங்களும் இது மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி.யில் வெறும் 1% தான் என்கின்றனர்.

இன்று நிலைமை நாட்டில் மோசமாகியுள்ளது. எதற்கெடுத்தாலும் உடல்நலத்திற்கான இன்சூரன்ஸ் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அரசு செய்ய வேண்டிய ஒரு காரியத்திற்கு ஒரு தனி மனிதனோ அல்லது குடும்பமோ எதற்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். இதன் அர்த்தம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் இவற்றினிடையே ஒரு கூட்டு இருப்பதால் இன்று மக்களின் உடல்நலம் இந்த கூட்டணியிடம் உள்ளது.

அண்மையில் மத்திய அரசு மாவட்ட மையங்களில் செயல்படும் பொது சுகாதார நிறுவனங்களை அரசு-தனியார் கூட்டு என்ற வகையில் அதனை

மாற்றிச் செயல்பட வைக்கும் திட்டத்தினை அறிவித்தது. இப்போது வரை அது செயலுக்கு வரவில்லை. அதற்குள் கொரோனா இதனைக் காப்பாற்றி விட்டது.

Podcast: The Coming Storm No One Is Warning You About | Tim ...

எத்தனை தனியார் மருத்துவமனைகள் நாட்டில் இந்தக் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளித்துள்ளன என்று கேள்வி வேண்டுமென்றால் எழுப்பலாம். பதில் மட்டும் ஒன்றுமில்லை என்பதே .பின் அரசுப் பொது மருத்துவமனைகளே தேச இடர்பாடு நிலையில் உதவமுடியும் என்றபோது மற்ற நேரத்திலும் அரசுதான் மக்களின் உடல்நலத்திலும் அக்கரை செலுத்த முடியும். அது அரசின் கடமையாகும். ஏனெனில் மக்களிடமிருந்து இதற்கு வரி வாங்குகிறது. அரசு வரியினை வாங்கிவிட்டு தனியாரை பொது மருத்துவம் பார் என்றால் எப்படி சரியாக இருக்கும்.

அரசுதான் தூய்மைப் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகிறது. தனியாரில்லையே! தனியார் இரண்டாம் கட்ட மருத்துவம் என்றால் எதோ செய்யலாம். ஆனால் அடிப்படை மக்கள் உடல் நலனைப் பாதுகாக்க மாவட்ட சுகாதார மையம், தாலுகா அளவில் செயல்படும் சுகாதார மையம் இவைகளைத் தனியாரிடம் தாரை வார்க்க கூடாது. அரசே நடத்த வேண்டும். அப்போதுதான் மக்களின் உடல்நலம் பாதுகாக்கப்படும்.

கேரளாவில் ஒரு தாலுக்காவில் சுகாதார மையத்திற்கு என்ன வேண்டும் என்பதை மக்கள் கமிட்டி சொல்கிறது. அதற்கு அரசு நிதி அளிக்கிறது. அதனால் இன்று கேரளா உலகெங்கிலும் பாராட்டப்படும் அளவு கொரோனாவினைத் தடுத்து நிறுத்தியுள்ளது. காரணம் பொது சுகாதாரம் மக்களிடம் உள்ளது. எனவே இந்த அரசு பொது சுகாதாரத்தினை பாதுகாக்க ஒன்றுபடுவோம். உடல் நலமானது ஒரு சமூக நிலை. அதற்கு தமிழ்நாட்டில் மக்கள் ஒரு சமூகமாக எழுந்து நின்று பன்னாட்டு மற்றும் நம்நாட்டு மருந்து நிறுவனங்களின் கொள்ளையினைத் தடுக்க தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கையினை விரட்டியடிப்போம். உடல்நலமானது மக்க்ளின் உரிமை, அதனைப் பறிக்க ஒரு அரசுக்கோ அல்லது தனியாருக்கோ உரிமை இல்லை என்ற முழக்கத்துடன் ஒன்று பட்டு நிற்போம்.

இந்தத் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கையிடமிருந்து மக்கள் உடல்நலமானது பாதுகாக்கப்பட்டால்தான் குழந்தைகள் படிக்க முடியும், தொழிலாளர்கள் வேலை செய்யமுடியும், மக்கள் உயிர்வாழ முடியும். அப்போதுதான் மனித இனம் பாதுகாக்கப்பட முடியும்.