நம் நாட்டின் சுகாதார திட்டங்கள் (Health Schemes): எல்லோருக்குமான சுகாதாரம் (ஆரோக்கிய வாழ்வு) என்பதே நம் லட்சியம் - சவுமியா சாமிநாதன்

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நம் நாட்டின் சுகாதார திட்டங்கள் அமைய வேண்டும்

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நம் நாட்டின் சுகாதார திட்டங்கள் (Health Schemes) அமைய வேண்டும். இதில் மற்றைய நாடுகளை போல் தனியார் துறையின் பங்களிப்பும் மிக முக்கியம். மக்களுக்கான சேவையை தனியாரும் நிச்சயம் செய்திட வேண்டும். அவர்கள் லாபம் ஈட்டுவதை மட்டும் பார்க்க கூடாது. அதை அரசுகள் உறுதி படுத்திட வேண்டும் என மிக தீர்க்கமாக பேசியுள்ளார் திருமிகு சவுமியா சாமிநாதன். உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியும், மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் சவுமியா சாமிநாதன் சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்க நிகழ்வில் பேசியது குறிப்படத்தக்கது.

கோவிட் உருவாக்கிய மாற்றங்கள்: 

உலகத்தையே புரட்டி போட்ட கோவிட் பெருந்தொற்று பரவல் மிக பெரிய சுகாதார , அடிப்படை மாற்றங்களை உருவாக்கியது. ஒரு சிறு வைரஸ் கிருமி உலகத்தின் பல விசயங்களை புரட்டி போட்டது. அதில் மிக முக்கியமாக பாதிக்கப்பட்டது சுகாதார துறையே. உலகெங்கிலும் திட்டமிடப்பட்டிருந்த நிலையான வளர்ச்சி இலக்குகள் முற்றிலும் முடங்கி போனது. குறிப்பாக தடுப்பூசி திட்டங்கள், புற்று நோய்க்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்கள், அதையொட்டிய அறுவை சிகிச்சைகள், கிராமங்களுக்கான பிரத்யேக சுகாதார நடவடிக்கைகள், நல்வாழ்வு முகாம்கள் என பல வேலைகள் நின்று போனது. . கடந்த 5-6 ஆண்டுகளாக முடங்கி போனது எதுவும் சரி செய்யப்படவில்லை. இதை மாற்றாமல் மக்களுக்கான சுகாதார மாற்றங்கள் எதுவும் நிகழாது. 

கோவிட் பெருந்தொற்று காலத்தில் அரசு மற்றும் அதன் பல துறைகள் எடுத்த தொடர் கூட்டு முயற்சிகள் தான் ஒரளவுக்கு நிலைமையை சீர் செய்தது. இக்காலத்தில் தனியாரின் முயற்சியும் பங்களிப்பும், மிக குறைவே. அரசுகளிடமிருந்து பல சலுகைகளை பெற்ற போதிலும் அவர்கள் அதை சமூகத்திற்கு செய்த்தது குறைவே. அவர்களுக்குறிய சமூக பங்களிப்பை நிச்சயமாக செய்திடல் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். 

கால நிலை மாற்றங்கள் – அதனின் தாக்கங்கள் : 

சமீப காலங்களில் உலகத்தில் பருவ நிலை மாற்றங்களால் ஏராளமான பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது. இது பொருளாதார தடுமாற்றங்களையும் இணைத்தே உருவாக்கி வருகிறது. உதாரணமாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் உருவான பொருளாதார பின்னடைவிலிருந்து பல தொழில்கள் இன்னும் கூட மீள முடியவில்லை. 

அதே போல திடீர் பெருமழை, அதையொட்டி வெள்ள பாதிப்பு,  வறட்சி, வெயில் காலத்தில் சூடேறும் பூமி, அதனால் வரும் வெப்ப அலைகள், புயல், சூறாவளி என பல இயற்கை சார் பிரச்சனைகள் நமக்கு அச்சுறுத்த்லாகவே உள்ளது. அதோடு இந்த மாதிரியான அசாதரணமான நிலைகளில் மக்களுக்கு சுகாதார பாதிப்பு, தொற்று நோய் அபாயம் என பாதிப்புகளும் உண்டு.

இந்த கால நிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதுவும் குறிப்பாக பெண்கள் மற்றும் வளரின குழந்தைகள் மத்தியில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பொருளாதாரத்தில் வறிய நிலையில் உள்ளவர்களிடம் மட்டுமே கணக்கில் கொண்டோம். ஆய்வின் முடிவில் அதிர்ச்சிகரமான ஆனால் உண்மையான தரவுகள் கிடைத்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரும்பான்மையான குடும்பங்களில் மேற்சொன்ன காரணங்களால் யாரோ ஒருவர் பாதிக்கப்படுவதும் அவர்களை காப்பாற்ற செய்யப்பட்ட செலவினங்கள், அதற்காக விற்கப்பட்ட அவர்களின் சொத்துக்கள், வாங்கப்பட்ட கடன்கள், அதை கட்ட முடியாமல் மலை போல் நிற்கும் வட்டி, அதற்காக பெண்கள் சந்தித்த மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் என ஏராளமான தரவுகள் கிடைத்தன. அதன் விளைவாகவே இன்று முடிவுகளை நோக்கி நாம் செல்ல வேண்டியுள்ளது.

கூட்டு முயற்சிகள்: 

எல்லோருக்குமான சுகாதாரம் (ஆரோக்கிய வாழ்வு) என்பதே நம் லட்சியம். அதை சாத்தியமாக்குவதற்கு அனைவரின் பங்களிப்பும் தேவை. அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேர்ப்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும் தீர்வும் ஒரு சேர கிடைப்பதை உறுதி செய்திட தனியாரின் பங்கேற்பு , பங்களிப்பு மிக அவசியம். உதாரணமாக தாய்லாந்து நாட்டில் தனியார் அமைப்புகள் தான் ஆரம்ப சுகாதார மேம்பாட்டு பணிகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் முழுமையாக செய்து வருகிறது. இது ஒரு முன்மாதிரி. இது போல நமது நாட்டிலும் செய்ய வேண்டியுள்ளது. அதாவது இதை கட்டாயமாக்க வேண்டியது அவசியம். அப்படி செய்யும் போது அரசின் நல திட்டங்களை ,தனியாரின் பங்கேற்போடு மக்களை சென்றடையும்.

தனியார் மற்றும் பெரும் கார்ப்பரேட்டு நிறுவனங்கள் தங்களுக்கான சமூக கடமையை இப்படி தான் நிறைவேற்ற முடியும். 

எல்லோருக்குமான சுகாதாரம்:

மக்களுக்கான திட்டங்கள் ஒரு பக்கம் நிறைவேறவும், தனியாரின் பங்களிப்பை உறுதி செய்திடும் அதே நேரத்தில் ஒவ்வொரு தனி நபரும் மருத்துவத்துக்காக செலவிடும் தொகையும் குறைந்திட வேண்டும் என்பதே உயர்ந்த நோக்கமாக இருக்க முடியும். காரணம் மருத்துவக்கான செலவு தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இதுவே பிரதானமான நோக்கமாக இருக்க வேண்டும். காரணம் பொருளாதாரத்தில் வ்றிய நிலையில் இருப்பவர்கள் மருத்துவத்துக்காக செலவிடும் தொகைக்காக குழந்தைகளின் கல்வி செலவுகளை குறைக்கிறார்கள்.. இதன் விளைவு இடை நிற்றல்.. இதுவும் சமூகத்திற்கு பெரும் பாதிப்பு தானே . 

மேலும் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக தொற்று நோய் பரவலை விட தொற்றா நோய்களே (NON COMMUNICABLE DISEASES) அதாவது வாழ்க்கை முறை மாற்றங்களால் வரும் சிக்கல்களே அதிகம் என ஆய்வுகள் தெரிவிகின்றது. அதோடு இந்தியாவில் வயதையொட்டி வரும் பாதிப்புகளும் அதிகமாகி வருவதால் ஒரு பரந்து பட்ட எல்லோரையும் உள்ளடக்கும், கணக்கில் கொள்ளும் மருத்துவ சுகாதார திட்டங்களே தேவை. அதை ஒன்றிய , மாநில அரசுகள் காலத்தோடு அமல்படுத்துவது சமூக அக்கறை கொண்டுள்ளதற்கு சாட்சியாக அமையும். 

ஆதாரம்; தி எகனாமிக் டைம்ஸ் செப் 30 2024.

(இந்த கட்டுரை சவுமியா சாமிநாதன் அவர்களின் உரையை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டது.)

எழுதியவர்:
Natarajan Sivaguru
சிவகுரு நடராஜன்
தஞ்சாவூர்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Vasudevan v

    Very pertinent message to the society by Dr. Sowmya Swaminathan. Both the governments should take initiative in implementing her advice ie. Private participation in health welfare schemes of the people.
    Tamil translation of the text can reach to the masses.
    Thank you Mr. Sivaguru Natarajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *