உலக புத்தக தினம் ஏப்ரல் 23,2020

உலக வரலாற்றின் பக்கங்களில் புத்தகங்கள் தான் ஆகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

வீழ்த்தவே இயலாது என கருதிய ஏராளமான சாம்ராச்சியங்கள் புத்தகங்களால் வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

வரலாற்றின் நாயகர்கள் பலரை புத்தக வாசிப்புதான் சக மனிதர்களிடமிருந்து உயர்த்தியிருப்பதை சர்வ சாதாரனமாக அறிய இயலும்.

அத்தகைய வலிமை வாய்ந்த புத்தகங்களினை கொண்டாடும் இந்த நாளில் உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள இருக்கும் புத்தகம் எதிர்க்கவே இயலாது என்ற வலிமை வாய்ந்த சக்தி ஒன்றினை வீழ்த்திக் காட்டிய வரலாறு.

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு
(1936-1968)

இன்றைய சமூகம் கடந்தகால வரலாறுகளை அறிந்திருக்க வேண்டும்.

அதுவே நிகழ்காலத்தய நமது பிரச்சனைகளை அணுகுவதற்கான நடைமுறைகளை கற்றுக்கொடுக்கும், படிப்பினைகளை வழங்கும்

அந்த வகையிலே இந்த புத்தகம் இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளின் மீதான நமது எதிர்கால திட்டமிடலை, வழிகாட்டுதல்களை நிச்சயம் வழங்கும்

அரசியல் சுதந்திரம் வேண்டி பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு வீரச்சமர் புரிந்த முன்னூறு ஆண்டு கால போராட்டத்திற்கு சற்றும் குறையாத திருப்பங்களை, போராட்டங்களை, தியாகங்களை, துரோகங்களை உள்ளடக்கிய இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு ஆவணமாக இந்த புத்தகத்தில்.

இந்து முஸ்லீம் பிரச்சனையினால் பிரிட்டிஷ் இந்தியா சுதந்திரத்தின் போது பாகிஸ்தான், இந்தியா என இரண்டாக பிளவுற்று அரசியல் மாற்றங்களினால் பங்களாதேசம் உருவாகி மூன்றாக இருக்கிறது.

ஆனால் சுதந்திர இந்தியாவை பிளவுபடுத்தி நாசமாக்கப் போகிறீர்கள் என *குடியரசு தலைவர் இராதாகிருஷ்ணன்* அன்றைய பிரதமர் *லால்பகதூர் சாஸ்திரிக்கு* எச்சரிக்கை விடுக்கும் நிலையினை ஏற்படுத்திய போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

அன்று சர்வ வல்லமை பொருந்திய ஆட்சி அதிகாரத்திலும் அரசியல் அதிகாரத்திலும் அனைத்துமே எங்களின் முடிவுதான் என்றிருந்த இந்தி ஆதரவு சக்திகளை முறியடித்து, அசுர பலத்துடனான காங்கிரசு அமைப்பினை தமிழக போராட்டம் எப்படி வெற்றி கொண்டது என்பதே இந்தபுத்தகத்தின் சிறப்பு…

ஆங்கிலேய நிர்வாகம் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட அவசியம்…

மொழி வாரியாக காங்கிரசு கட்சி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டி ஆங்கிலேயரிடம் கோரிய. பின்னணி…

பின்னாளில் அதே காங்கிரசும் பிரதமர் நேருவும் மொழி வாரி உரிமை மறுத்த வரலாறுகள்…

மொழி வழி மாநிலங்கள் கோரிக்கையினை அரசியலமைப்பில் சேர்க்காத பின்னணி….

மொழி வழி மாநிலம் குறித்த நேரு , பட்டேல் பட்டாபி சீத்தாராமையர் குழு அறிக்கை…

ஆந்திர போராட்டம்….

சென்னை யாருக்கு என்கிற பிரச்சனை….

1956 ல் நிறைவேற்றப்பட்ட மாநிலங்கள் சீரமைப்பு திட்டம் என ஆட்சி செய்த காங்கிரசு அரசாங்கத்தின் முரன்களோடு இந்த வரலாறு துவங்குகிறது.

மொகலாயர் ஆட்சி காலத்தில் தில்லியின் அரண்மனையை ஒட்டியகடைத்தெருவில் மட்டும் பேசப்பட்ட இந்தியின் தோற்றம்…

அதேகாலத்தில் வட இந்தியாவில் பேசப்பட்ட கரிபோலி, பிரச்பாஷா, பிண்டேலி, கனோசி,அவதி, மகதி, மைதிலி, ,போச்புரி ,பிகேலி, சட்டீச்காரி என பலதரப்பட்ட மொழிகளோடு இந்தியின் வளர்ச்சி ….

கரிபோலி மொழி பாரசீக கரப்புடன் இணைந்து உருதுவாக தோற்றம்….

மொழியில் மதங்களின்கலப்பு…

இந்தி பற்றி காந்தியின் கருத்து…

இந்தி எவ்வாறு பொதுவான மொழியாக ஏற்கப்பட்டது…

ஆங்கிலத்திற்கும் இந்திக்குமான போட்டி…

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை தேசிய மொழியாக்க மேற்கொண்ட முயற்சி…

பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை எதிர்க்க முடியாமல் திணறிய இந்தி பேசாத மாநிலங்களின் பிரதிநிதிகள்…

இந்தி தேசியமொழி என. அறிவிக்கப்பட்டதில் குழப்பங்கள்…

இந்தியா முழுவதிலும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தின் வழிகாட்டல்…

இராசாசியின் முயற்சி…

இந்தி கட்டாயம் என்கிற பிரதமரின் அறிவிப்பு…

அண்ணாவின் எதிர்ப்பு…

தந்தை பெரியாரின் தீவிர நடவடிக்கை…

சிறைச்சாலை மரணங்கள்…

பெண்கள், துறவிகள், மதம் கடந்து போராட்ட களத்தில் நின்ற பெரியோர்கள்…

அரசியல் அமைப்பு அவையில் நடந்த, இன்றும் என்னவென்றே தெரியாத ரகசியங்கள் என இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் நம்மை ஒரு பார்வையாளராக மட்டுமின்றி ஒரு்போராட்டக்காரனாகவும் அழைத்துச் செல்கிறது இந்த புத்தகம் .

இன்று மீண்டும் மொழி அழிப்பிற்கு ஆளுகிற வர்க்கம் அசுர பலத்தோடு தயராகிற போது, அதனை எதிர்கொள்ள இந்த புத்தகம் மிக அவசியம்..

வாங்குங்க…
வாசியுங்க….
வாசித்ததை பிறருக்கும் சொல்லுங்க…

புத்தக தலைப்பு
“இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு”
(1938-1968)

ஆசிரியர்.
“பேராசிரியர் அ. இராமசாமி”

“நக்கீரன் வெளியீடு

#bookday

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *