மொழிபெயர்ப்புக் கவிதைகள் – ஹிந்தியில் : காத்யாய்னீ | தமிழில் : வசந்ததீபன்(1) உடல் இல்லாமலிருப்பது
___________________________________

உடல் இல்லாமலாகிறது
ஒரு நாள்
பெண்ணும்
தலைகீழாகிப் போகிறாள்
உலகம் முழுவதும்
திடீரென்று.(2) தனிமையில் பெண்ணின் சிந்தனை
________________________________________

அமைதியின் ஒரு மூச்சை
சுவாசிக்க வேண்டி
பெண்
தனது தனிமையை அழைக்கிறாள்.

தனிமையைத் தொடுகிறாள் பெண்
உரையாடுகிறாள் அதனுடன்
வெற்றியடைகிறாள்
குடிக்கிறாள் அதை
மவுனமாக.

ஒருநாள்
அவள் எதுவும் சொல்லவில்லை
தனது தனிமையுடன்
எந்த வித முயற்சியும் செய்யவில்லை
துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கு
நிற்க , யோசிக்கிறாள்.

அவள் யோசிக்கிறாள்
தனிமையில்…
பலனை அடைவதற்கு முன்பே
ஆபத்து
அறிவிக்கப்பட்டிருக்கிறது.(3) உலகறிவில்லாதவன் எழுதிய கவிதை
________________________________________

ஏன் சபிக்கிறாய் இவ்வளவு ?
நாங்களோ
எவருடைய
எதையும் அழிக்கவில்லை.

வெப்பத்தை எடுக்கவில்லை
மாதோவுக்கு கொடுக்கவில்லை
சந்தோஷத்தை ஒப்புக் கொள்கிறோம்
பரம சுகம்.

வாழ்கிறோம் அப்படியே
ராமன் சட்டத்தை பராமரிக்கிறான்.

ஊழ் சட்டத்தின் கால்கள்
பறக்க வைப்பதில்லை.

உலகம் _ இயக்கம்
எங்களுக்குள் வியாபாகிக்காததால்
உனக்கு என்ன ?

கிணற்றின் வாயைப் போல
எங்கள் வானம் சிறியது என
ஏன் உனக்கு கஷ்டம் ?

நாங்கள் என்ன அழித்து இருக்கிறோம் ?
இவ்வளவு தண்ணீர்
குடித்து _ குடித்து
சபிக்கிறாய் ?(4) மனிதன் ஒரு சமூக விலங்கு
______________________________________

நாங்கள் படிக்கிறோம்
நாம் சமூக விலங்காய் இருப்பது பற்றி
நாங்கள் இருக்கிறோம்
ஒரு சமூக விலங்காக.

தப்பித்து வாழ்கிறது
நிற்க ,
அறிந்து கொள்ளல்
ஒரு சமூக விலங்காய் இருப்பது பற்றி.

அப்படியே அறிந்து கொள்கிறோம்
ஒரு சமூக விலங்கின் தேவைகள் ,
கடமைகள் மற்றும் அதிகாரங்களை
என
சமூக விரோதமாக
அறிவிக்கப்படுகிறவைகளை.(5) ஆண்கள் தமது குழந்தைகளின் , தெய்வங்களின் மூலமாக
வம்சத்தை விருத்தி செய்வதற்காக பெண்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ,

( ரிக்வேத குறியீடு )
________________________________________

பெண் படைக்கப்பட்டாள்
வம்சத்தை
விருத்தி செய்வதற்காக ,
வாழ்வை படைப்பதற்காக
மட்டும்…
அவர் சொன்னார்
நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
புதிய சமுதாயச் சட்டத்தைப்
படைத்து.

ஆனால் அவர் மறந்து போனார்
எதையும் படைக்க முடியாது
கொஞ்சமும் யோசிக்காமல்.

எதையும் எவனொருவன்
கொஞ்சம் படைக்கிறானோ _
அவன் யோசிக்கிறான்.

அவள் படைக்கிறாள்
வாழ்வையும்
வாழ்வு பற்றியவைகளையும்
யோசிக்கிறாள்
தொடர்ச்சியாக.

யோசிக்கிறாள் _
வாழ்வின் மையப் புள்ளி என்ன ?
யோசிக்கிறாள் _
வாழ்வின் அழகு என்ன ?
யோசிக்கிறாள்_
அது எந்தப் பொருள் ?

அதில்லாமல்
எல்லாம் அரை குறையாக இருக்கிறது
அன்பிலும் , அழகிலும் , தாய்மையிலும்…

யோசிக்கிறாள் அவள் _
மற்றும்
விசாரிக்கிறாள்
துருவித் துருவி.

எதிரொலி ஒலிக்கிறது
பள்ளத்தாக்குகளில்
மைதானங்களில்
மலைகளோடு
சமுத்ரத்தின்
உயரும் அலைகளோடு
மோதி.

விடுதலை !!! விடுதலை !!! விடுதலை !!!

 

ஹிந்தியில் : காத்யாய்னீ

தமிழில் : வசந்ததீபன்காத்யாய்னீ
________________

பிறப்பு : 07 மே , 1959
________

இடம் : கோரக்பூர் , உத்திரபிரதேசம்
_______

சில முக்கிய நூல்கள் :
__________________________

(1) ஸாத் பாஈயோங் கே பீச் சம்பா (1994)
(2) இஸ் பெளரூஷ் பூர்ண சமய் மே ,
சேஹரோங் பர் ஆஞ்ச் , ஜாதூ நஹீன் கவிதா (2002)
(3) ஃபுட் பாத்த் பர் குர்ஸீ (2009)
(4) ராக்க் அந்த்ரே கீ பாரிஷ் மே , ராத் கே ஸந்தரீ கீ கவிதா , சாஹத் , கவிதா கீ ஜகஹ் ,ஆக்கேட் , குஹேர் கீ தீவார் க்கடீ ஹை .
மற்றவை :
______________

(1) ருஷ்ய மற்றும் ஆங்கில மொழிகளில் கவிதைகளின் மொழிபெயர்ப்பு.
(2) 2 கட்டுரைத் தொகுப்புகள் தவிர அநேக பிரபல இதழ்களில் , பத்திரிக்கையில் படைப்புகள் வெளியாகி உள்ளன.