ஹிந்தி கவிஞர். அசோக் வாஜ்பேயின் கவிதைகள் (தமிழில் வசந்ததீபன்)

(1)

விழுகிறது
ஒரு கல்..
ஒரு பறவையின் இறகு..
ஒரு பூவின் கெட்ட காலத்தில்
உதிர்ந்து போன பூவின் இதழ்..
அழைத்துப் போய் முடிந்த
ஒரு வார்த்தையினுடைய
குழந்தைப் பருவம்..
எல்லாம் விழுகின்றன.
இந்தக் குளிர்
பிரகாசமாய் பரவியது
விரிந்த உள்ளங்கையின் மேல்
மற்றும்
மொழிக்கு நேரம் தருகிற
கவிதை போல
எல்லாவற்றுக்கும்
வெளிச்சம் தருகிறது அபயம்.
(2)
இந்தக் குரல்களின் இரைச்சலிருந்து
அழிந்து வருகிறது ஒரு அழைப்பு
புனிதமான தெய்வங்கள் கூட அதற்குப் பயப்படுகின்றன
அந்த அழைப்பானது
உன்னை அழைக்கிறது.
எல்லாக் கதவுகளின்
முற்றங்களின் ஓரம்
ஜன்னல்களிலிருந்து வெளியே
ஒரு பிரகாசமான சுவர்க்கலோகத்தில்
அங்கே உலகத்தின்
எல்லாக் குழந்தைகளுடைய நிர்மலமான கபடற்றத்தனம்…
உலகக் கடலில் எண்ணிக்கையற்ற படகுகளைக் போல
நீந்திக் கொண்டிருக்கிறது.
ஒரு அழைப்பு உன்னை அழைக்கிறது
கடலைக் கடந்து
மற்றவைகளை தூரத்திலிருந்து
பார்ப்பதற்காக.
These seven poems by Ashok Vajpeyi show why Hindi poetry matters
(3)
பிரகாசம் மட்டுமல்ல
இருளும் படைக்கிறது :
பிரார்த்தனையின் மொழிநடைகளை,
ஆசையின் பகட்டை ,
மன நிம்மதியில்லாதை ,
கனவுகளின் சிக்கலான அழகான திகிலை ,
நினைவுகளின் கடினமான கற்களை
இருளும் உருவாக்குகிறது.
இருள்  சுமையைக் தாங்குகிறது
சுமையைக் தூக்குகிறது
நம் தோள்களிலிருந்து சுமையைக்
தனியாக எடுத்துச் செல்கிறது
இருள் நம் கண்ணீரை மறைக்கிறது
அது கவனமாகக் கேட்கிறது
மற்றும் எண்ணுகிறது
நம்முடைய ரத்தத்தில்
வறண்ட  முடிவற்ற அழுகையை.
இருள் எழுதுகிறது
நம்முடைய சுய வரலாறையும்
பிறகு அதை
நம்மிடமிருந்து ஒளித்து
நீரின் மடிப்புகளில் வைத்திருக்கிறது.
நாங்கள் இருந்தோம்
எங்கள் வீடு இருந்தது
பயங்கரமான காலத்தில்
சிலவற்றை காக்க முயற்சித்தோம்
என்பவற்றை
இருள் நினைவு கொள்கிறது.
படைக்காமல்
கடவுளுக்கோ
மனிதனுக்கோ
எந்த அர்த்தமும் இல்லையென்று
இருள் அறிந்திருக்கிறது.
(4)
இவ்வளவு பெரும் குழப்பத்திலையும்
கேட்கிறது
ஒரு காலடிச்சத்தம்.
யாரோ எங்களை நோக்கி
வந்து கொண்டிருக்கிறார்கள்…
எந்த தேவதை இல்லை
எந்த கொலைகாரன் இல்லை
ஒரு வார்த்தை மட்டும் தான்
அது ஏதோ கவிதையில்
வீட்டைத் தேடுகிறது.
(5)
சில நேரங்களில்
இருளும் பாடுகிறது
துக்கத்தின் கானத்தை
தனித்துப் போய் விட்ட பாடலை
அன்பாய் கொழுந்து விட்டு எரிந்த பாட்டை
எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும்
ஒதுக்கப்பட்டுப் போன பாட்டை
காலத்தை ஜெயிக்க முடியாததின் பாட்டை
மெல்ல மெல்ல அழியும் பாட்டை…
சிலசமயங்களில்
இருளும் பாடுகிறது…
என்னுடைய முடிவின்
பழைய வண்ணத்தை…
என்னுடைய பிறப்பின் வரவேற்பு
பாட்டைப் போல
அது பாடி இருந்தது.
ஹிந்தியில் : கவிஞர். அசோக் வாஜ்பேயி
தமிழில் : வசந்ததீபன்