(1) தண்ணீராக இருக்கிறேன் ஆகையால்
_________________________________
நான் தண்ணீர், ஆகையால் என்னைக் குற்றம் சொல்லாதே
நான் ஏன் பனிக்கட்டி ஆனேன் என்று
நான் நீராவி ஆனேன் என்று
அல்லது அப்போது நான் ஏன் குளிராக இருந்தேன்
மேலும் நான் இப்போது ஏன் சூடாக ஆகி இருக்கிறேன்
அல்லது நான் ஏன் ஒவ்வொரு பாத்திரத்தின் வடிவமாக ஆகிறேன் என்று.
இன்னும் நான் நன்றியறிவுள்ளவனாக இருக்கிறேன் என்று மக்கள்
என்னைப் பற்றி கருத்து உருவாக்குவதற்கு முன்பு இதை நினைவில் வைத்திருக்கிறேன்
நான் தண்ணீர் என்று
மற்றும் இந்த அறிவுரை தர வேண்டியதில்லை
நீரின் பாரம்பரிய நற்பண்புகளை தர்மத்தை எவ்வளவு காலம் வரை நிறைவேற்றி வாழ்வேன் என்று.
(2) அகில இந்திய கொள்ளையன்
___________________________
டெல்லியின் கொள்ளையனாக இருந்தான்
அகில இந்தியனாக இருந்தான்
சரளமாக ஆங்கிலம் பேசினான்
ஏனெனில் கொள்ளையன் வெளியில் இருந்து வந்தான்
அதனால்தான் சரளமாக இந்தி பேசவில்லை
கொள்ளையன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட
வேண்டியவனாக இருந்தான்
அன்று கொள்ளையன் கடவுளிடம் ஒரே ஒரு ஜெபத்தை மட்டுமே செய்தான்
இந்த டெல்லியில் கடவுள்
என் குழந்தைகளை சரளமாக
ஆங்கிலம் பேச வைக்க வேண்டும் என்று.
மற்றும் கடவுள் அவனுடைய பிள்ளைகளுக்கோ
இல்லை…
ஆனால் அவனது பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு நிச்சயமாக இந்த தகுதியை உருவாக்கித் தந்தார்.
கொள்ளையடிக்க இவ்வளவு இருள் உள்ளன
மேலும் இவ்வளவு கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
என்று கொள்ளையர்களின்
பல சாதிகளும் சம்பிரதாயங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
ஆனால் இவற்றில் இவ்வளவு நல்லிணக்கம் இருக்கிறது என்று
கொள்ளையடிப்பவனும்
விரும்பத் தொடங்குகிறான்
என்று
ஏதோவொரு நாள் அவனும் கொள்ளையனாகிக் காட்டுவான்.
கொள்ளைத் தொழில் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது
அவன் கொள்ளையடித்து நடந்து வருகிறான்
மற்றும் ஒரு கப் தேநீர் ஏந்திக் கொண்டு டிவி பார்த்தபடி
தனது களைப்பைப் போக்குகிறான்.
தேவையற்று
எவன் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறவனோ
அவன் கொள்ளைக்காரன் அல்ல
ஒவ்வொரு கொள்ளையனுக்கும் தனக்கு கொள்ளையடிக்க உரிமம் கிடைக்கவில்லை என்பது
நன்றாகவே தெரியும்
எல்லோருக்கும் தமது வழியில் கொள்ளையடிக்க உரிமை உண்டு.
இந்த நிலையில் கொள்ளையன் தனது கொள்ளையரிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முயற்சிக்கிறான்
என்ன இவன் கொள்ளையடிக்க ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து இருக்கிறான்
அதனுடைய நகல் செய்யப்பட முடிந்திருக்கிறது.
நாங்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறோம் வாருங்கள் நாம் கொள்ளையடிப்போம் என்று
தற்சமயம் கொள்ளையர்கள் அழைக்கிறார்கள்
அத்தகைய இடம்
அத்தகைய நாள்
அத்தகைய நேரம்
மேலும் கொள்ளையர்களையும்
கொள்ளையடிக்க வருகிறார்கள்
கேலி செய்பவர்கள்
கொள்ளைக்காரர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் கொள்ளையடிக்கும்
இந்த தந்திரம் வெற்றிகரமாக இருந்து கொண்டிருக்கிறதென்று
கொள்ளை எவ்வளவு பலம் தந்திருக்கிறதென்று கொள்ளையடிப்பவர்கள் மகிழ்கிறார்கள்
மற்றும் நாங்கள் கொள்ளையடித்து பாதுகாப்பாய் குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்று அவர்கள் அழைக்கிறார்கள்.
இருக்கிறார்கள் _ இருக்கிறார்கள் ஒருநாள் இவ்வளவு கொள்ளைகளை நடத்தி
கட்டண கொள்ளையர்கள் ஒன்றாகவே
கொள்ளைக்காரன் தப்பித்தான்
மற்றும் இந்த கொள்ளையர்கள் முதலாகவே இவ்வளவு கொள்ளையை முடித்து இருந்தார்கள் என்று
கொள்ளையர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வரத் தொடங்கின
இதைப்பற்றி இவ்வளவு கண்ணீர் பாய்ந்தோடியது என்று கொள்ளையடிப்பவர்களும் அழத் தொடங்கினார்கள்
இதனால் இவ்வளவு ஈரமாகிப் போனது பூமி என
எப்பொழுதுமாக
சதுப்பு நிலமாகிப் போனது.
ஹிந்தியில் : விஷ்ணு நாகர்
தமிழில் : வசந்த தீபன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.