1)
இந்த நாட்டில் எப்போதும் சிலர்
ஒரு மனிதனை சுற்றி வளைத்து
சாதாரணமாக கொன்று கொண்டு இருக்கிறார்கள்
அவனை அசிங்கமாக வைவதையோ
பாக்கியசாலி தூரம் நின்று பார்க்கிறாய்
நீ புரிந்து கொள்ளவில்லை…
இது எல்லாம்
அந்த ரத்தம் தோய்ந்த
தனிமையான
மனிதனை மட்டும்
கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
(2)
கொஞ்சம் போல இடம்
____________________________
அவன் சொன்னான்
அவனிடம் ஒரு சின்னஞ்சிறு இதயம் இருக்கிறது
அதைப் போல
வெயில் சொன்னது
அதனிடம் கொஞ்சம் போல ஒளி இருக்கிறது
நெருப்பு சொன்னது
அதனிடம் கொஞ்சம் போல வெப்பம்.
(3)
நீ
இந்திரன்
கெளதம்
ராம்
எந்த உருவத்தில் இருந்தாலும்
எப்போது புரிந்து இருக்கிறாய்
என்னை…?
கெட்ட பார்வை
சாபம்
சீர்திருத்தம்
இதுவாக இருந்து கொண்டு என் விதி
தவறாக தங்கிப் போனேன் நான் தான் ஒவ்வொரு முறை
நீ கடவுள்களின் ராஜா
தர்ம பாதுகாவலர்
சீர்திருத்தவாதி மஹானாய் ஆனாய்
மற்றும் நான் ஒவ்வொரு முறை
அப்பாவி அகல்யா.
(4)
“நான் யார்?
கருப்பா இல்லை வெள்ளையா
அடிமை இல்லை ராணி …
பிறந்த நேரத்தில்
என் முகத்தில்
ஒரு வரைபடம் கூட இல்லை,
நான் என் சொந்த மண்ணை
சுயமாக பிசைந்தேன்
என் முகத்தை நானே உருவாக்கினேன்,
என் முகம் மிகவும் அழகாக இல்லை …
ஆனால் வரைபடங்கள் முழுமையானவை “…
(5)
நான் அந்த மரணத்தைப் பற்றி
அடிக்கடி யோசிக்கிறேன்
அது
கணம் _ கணம் தேய்ந்து
போய்க் கொண்டிருக்கிறது _
நம்முள், உன்னுள், எல்லாருள்.
(6)
குளத்தில் மூழ்கிய
அவன் நினைத்தான்
அவனுடன் அவனது துயரமும் மூழ்கிவிடும்
அது தவறாக இருந்தது
அவன் மூழ்கியவுடன்
இங்கு வந்தது அவனது துக்கம் மேற்பரப்பின் மேல்
அந்த நீர்த்தேக்கம் உண்மையில் ஒரு துன்பத்தேக்கம்
என்று அழைக்கப்பட முடிகிறது
அங்கே லேசான மற்றும் கனமான
பெரிய, சிறிய மற்றும் துக்கங்கள் மிதந்திருந்தன
எவர் பார்த்து இருந்தவர்
தம்மை விட பெரிய அந்தத் துயரங்களை பார்த்து இருந்தார்
மற்றும் திரும்பிப் போய் இருந்தார்
எவர் பார்க்க முடியாமல் இருந்தவர்
அவர்கள் தம்மையும் துக்கமதற்கு ஒப்படைத்துப் போய் இருந்தனர்
சொல்வதற்கு அவசியம் இல்லை
அது மிகவும் நேர்மையானது என்று.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

