1. அவர்கள் பசியாய் இருக்கிறார்கள்
_____________________________
அவர்கள் பசியாய் இருக்கிறார்கள்
ஆனால் மனிதனின் மாமிசத்தை சாப்பிடுவதில்லை
தாகமாய் இருக்கிறார்கள்
ஆனால் இரத்தத்தைக் குடிப்பதில்லை
சிறியவர்கள் இருக்கிறார்கள்
ஆனால் மற்றவர்களை சிறுமைப் படுத்துவதில்லை
அவர்களின் தலை மீது
கூரை இல்லை
ஆனால் மற்றவர்களுக்காக கூரை கட்டுகிறார்கள்.
🦀
மராத்தியில் : ஓம் பிரகாஷ் வால்மீகி
ஹிந்தியில் : கேவல் பாரதி
தமிழில் : வசந்ததீபன்
🦀
2. டாகூரின் கிணறு
________________
அடுப்பு
மண்ணினுடையது
மண்
குளத்தினுடையது
குளம்
டாகூரினுடையது.
பசி
ரொட்டியினுடையது
ரொட்டி
கம்புவினுடையது
கம்பு
வயலினுடையது
வயல்
டாகூரினுடையது.
மாடுகள்
டாகூரின்
கலப்பை
டாகூரினுடையது
கலப்பையின் கைப்பிடி மீது உள்ளங்கை என்னுடையது
விளைந்த தானியங்கள் டாகூரினுடையது
கிணறு
டாகூரினுடையது
தண்ணீர்
டாகூரினுடையது
வயல் _ நெற்களம்
டாகூரினுடையது
தெரு _வசிக்கும் பகுதி
டாகூரினுடையது
பிறகு என்னுடையது
என்ன?
கிராமம் ?
நகரம்?
தேசம் ?
🦀
1.கம்பு – ஒரு தானியம்
2.டாகூர் – ஜமீன்தார்
🦀
மராத்தியில் : ஓம் பிரகாஷ் வால்மீகி
ஹிந்தியில் : கேவல்பாரதி
தமிழில் : வசந்ததீபன்
🦀
3.
நெருப்பை யார் மூட்டியது?
மக்கள் அவனிடம் விசாரித்தார்கள்
அவன் பேசாமல் நின்று கொண்டிருந்தான்
அவனுடைய மெளனம் பேசிக் கொண்டிருந்தது
நெருப்பு பிடித்ததின் ரகஸ்யத்தை
வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
🦀
ஹிந்தியில் : ராம் ப்ரீத் ஹர் புரி
தமிழில் : வசந்ததீபன்
🦀
4. மிகவும் நம்பிக்கையோடு
நான் உன்னில் தேடுகிறேன்
ஒரு தோழமையை
மற்றும்
அவநம்பிக்கை அடைகிறேன்
ஒவ்வொரு முறை
ஒரு ஆணைப் பெற்று.
🦀
ஹிந்தியில் : சந்த்யா நிவோதிதா
தமிழில் : வசந்ததீபன்
🦀
எழுதியவர்:

வசந்ததீபன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

