இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல – நூல் அறிமுகம்
சில நாட்கள் முன்பு பாரதி புத்தகாலயத்தில் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒருதோழர் இந்தப் புத்தகத்தை எடுத்து கொடுத்து “இதை படிங்க தோழர், நல்லா இருக்கும்” என்று கூறினார். நானும் வாங்கி படித்ததும்” கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை என்ற நூலின் தொடக்க புள்ளியாக இருப்பதை புத்தகத்தில் என்னால் அறிய முடிந்தது.
போராசியர்.ரோமிலா தாப்பர் பண்டைய காலத்தில் இந்தியாவில் தொடங்கி இன்றைய காலத்தில் சமூக மாற்றங்களை வைத்து ஆதாரத்தோடு இந்த கட்டுரையில் எடுத்துக் கூறுகிறார்.
இந்த புத்தகத்தில் மதங்களில் இருக்கும் கருத்து வேறுபாடும் என்ன என்பதும், அதன் மூலம் கலாச்சார பரிணாம வளர்ச்சி நடந்திருப்பதாக இருக்கின்றது. ஒவ்வொரு சமூகத்திற்கும் கருத்து வேறுபாடு என்பது கண்ணுக்குத் தெரிவதாகவே இருக்கும், ஆனால் மாற்றத்தை தராது. கருத்து வேறுபாடுகளை மாறுபட்ட வடிவங்களில் வெளிப்படுவதை காண முடியும். சில தத்துவக் கோட்பாடுகளில் உள்ள கருத்து வேறுபாடு அறிவுசார் மட்டத்தில் இருக்கும் என்று போராசிரியர் குறிப்பிட்டிருப்பார்.
குறிப்பாக, மதங்கள் எப்போதும் கருத்து வேறுபாடுகள் நிறைந்த அமைப்பாக இருக்கும். எல்லா மதங்களும் ஒரு கடவுளை குறிப்பிட்டு பயணம் செய்கிறது. ஆனால் இந்து மதம் மட்டும் அப்படி இல்லை, அவர்களுக்கு நிறைய வடிவங்கள், பெயர்கள் இருப்பதை இந்த புத்தகம் கூறுகிறது.
இந்து மற்றும் இந்துத்துவாவும் (Hindutva) இடையே வேறுபாடுகள் குறித்து பேசும் புத்தகமாக இருக்கிறது. .இந்து ராஷ்டிராவை உருவாக்குவதே உருவாக்குவதுதான் இந்துத்துவாவின் முக்கியமான நோக்கமாக இருந்தது. இந்து என்பதற்கு புதிய வரைமுறையும், புண்ணிய பூமியாகவும், பித்ரு பூமி என்று அழைக்கப்படும். ஆனால் எந்த ஒரு ஆதாரமும் பண்டைய நூல்களில் இல்லை என்று புத்தகத்தில் இருக்கும்.
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் குறித்த கருத்து முரண்பாடுகள் மற்றும் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எளிதாக இடம் பெற்றிருக்கும். வேத அடிப்படையில் இருக்கும் மதம் என்பது உயர்சாதி மதமாக இருந்தது. சன்னியாசத்திற்கும், துறவிற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததாகவும், பக்தி உணர்வுகளை அதிகரிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இஸ்லாமியத்தோடு தொடர்புடைய அனைத்தையும் முஸ்லீம் என்பதாக அழைக்கும் பழக்கம் இருப்பதாகவும், ஆக்கிரமிப்புக்காக இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று முஸ்லீம் படையெடுப்பாளர் வைத்து பேசுவதை எழுத்தாளர் மறுப்பதாக புத்தகத்தில் இருக்கிறது. காலனி ஆதிக்கத்தின் மூலமாக மதங்கள் இந்தியாவில் நுழைந்ததாகவும், சிந்து நாகரித்தின் அடிப்படையில் மதங்கள் உருவாகியதும் புத்தகத்தில் இருக்கிறது.
மதசார்பின்மை மற்றும் மத சகிப்புத் தன்மை என்பது முற்றிலும் வேறுபாடு இருப்பதையும், மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களும் சமமாக பின்பற்றுவது, சட்டங்களையும் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். மதசகிப்புதன்மை என்பது இந்திய நாட்டின் அடையாளமாக இருந்தில்லை. அதற்கான வரலாற்று உண்மைகளை புத்தகத்தில் எடுத்து கூறுகிறது.
ஒரு சிறிய புத்தகம் நிறைய புரிதல்களையும் அர்த்தங்களையும், வரலாற்று ஆவணங்களோடும், நிகழ்வுகளோடும் ஆராய்ந்து கருத்துகளை முன் வைத்து போராசிரியர் கூறுகிறார். 5000 ஆண்டுகளாக உள்ள தொல்பொருள், மரபணு மற்றும் மொழியியல் அடிப்படையில் ஆராய்ந்து, இந்தியர்கள் என்பவர்கள் பல்வேறு கலாச்சாரங்கள் நிறைந்த மக்கள் என்று தெளிவாக இருக்கிறது.
இந்த புத்தகம் “கருத்து வேறுபாடுகளின் குரல்கள்” என்ற புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் புத்தகமாகவும் இருக்கிறது.
நூலின் தகவல்கள் :
நூல் : இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல
ஆசிரியர் : பேரா.ரொமிலா தாப்பர்
தமிழில் : வீ.பா.கணேசன் (V.Ba.Ganesan)
பாகம் : 23 பக்கம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/hindu-madhamum-hinduthuvavum/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.