டாக்டர் அம்பேத்கர் (Ambedkar) இந்து பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும் - (Hindu Pennin Ezhuchium Veezhchium) நூல் அறிமுகம் | Feminism Book

இந்து பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும் – நூல் அறிமுகம்

இந்து பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும் – நூல் அறிமுகம்

1950 ஜனவரி 21 லாமா கோவிந்தா என்பவர் எழுதிய கட்டுரையில் இந்தியாவில் பெண்கள் முயற்சிக்கு முக்கிய காரணம் புத்தரின் போதனைகளே என்று குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான ஒரு விளக்கம் தான் இந்த இந்து பெண்களின் எழுச்சியும் எழுச்சியும் என்னும் சிறு நூல்.

புத்தர் கூறியதாக சொல்லப்படுகின்ற சில உண்மையற்ற விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறது இந்த நூல்.

ஆனந்தா என்பவர் புத்தரை பார்த்து பெண்கள் சமூகம் குறித்து நாங்கள் எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு பெண்களை பார்க்க கூடாது அப்படியே பார்த்து பேச ஆரம்பித்தால் அவர்களுடன் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறி இருப்பதாக கூறியிருப்பது முற்றிலும் பொய்யான ஒரு கருத்து தான்.

புத்தர் காலத்தில் பெண்களுக்கு சுதந்திரமும் மரியாதையும் இருந்திருக்கிறது. வீட்டில் அடைப்பட்டு கிடந்த பெண்களை சுதந்திரமாக வெளியில் நடமாட வைத்திருக்கிறிருக்கிறது புத்தரின் போதனைகள். ஆனால் புத்தரின் போதனைகள் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததாகவே கூறப்படுகின்றன. ஆனால் இதில் எந்த அளவும் உண்மை இல்லை.

புத்தரின் என்பது சீடர்களில் ஒருவரான விசாகம் என்பவர் தானம் வழங்கும் தலைவியாக இருந்திருக்கிறார். இவர் பெண்களை வெறுப்பவராக இருந்திருந்தால் மதிக்காதவராக இருந்திருந்தால் ஒரு பெண் சீடரை அருகில் வைத்திருக்க மாட்டார். வைசாலியைச் சேர்ந்த அமரபாலி என்ற அம்மையார் புத்தருக்கும் அவருடைய சீடர்களுக்கும் தன் வீட்டில் உணவை வழங்கி உபசரித்து இருக்கிறார். அவர் ஒரு அழகான பெண்ணாக இருந்திருக்கிறார். பெண்களின் மீது புத்தருக்கு ஒரு வெறுப்புணர்வு இருந்திருந்தால், பெண்கள் தங்களுடைய பிரம்மச்சாரியத்தை தகர்ப்பவர்களாக எண்ணி இருந்திருந்தால் இப்படி பெண் சீடர்களை அருகில் வைத்திருக்க மாட்டார். பெண்களின் வீடு தேடி சென்று உணவை அறிந்திருக்க மாட்டார்.

புத்தர் காலத்தில் ஆண் சீடர்களுக்கு பிக்குகள் என்றும் பெண் சீடர்களுக்கு பிக்குணிகள் என்றும் சங்கங்களை ஆரம்பித்து தன்னுடைய போதனைகளை இருவருக்கும் சமமாகவே பரப்பி இருக்கிறார். பிக்குகள், பெண் பிக்னிகளுக்கு அவர்களுடைய போதனைகளை கற்பித்து இருக்கின்றனர். இது ஒரு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான ஒரு உணர்வே தவிர ஆண்கள் பெண்களுக்கு அடிமை என்ற ஒரு நிலை கிடையாது.

பெண் மிக உயர்வான பொருளாகும் அவள் இன்றியமையாத உபயோகமுடையவள் ஏனெனில் அவள் மூலமாகவே போதி சத்தர்கள் மற்றும் உலக ஆட்சியாளர்கள் மன்னர்கள் பிறக்கின்றனர். இவை புத்தரின் வரிகள். இந்த வரிகளில் இருந்து புத்தர் பெண்களை எந்த அளவுக்கு மதித்திருக்கிறார் என்பது விளங்குகிறது.

பெண்களின் வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் மனு. அவர் புத்தருக்கு பின் தோன்றியவராக இருந்தாலும் தங்களுடைய பழைய பஞ்சாங்கத்தையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மனு கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு பெண்ணிற்கும் விழுகின்ற ஒரு சாட்டை அடியாகவே பார்க்கின்றேன். இப்படியும் பெண்களை அடக்கி வைக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

பெண் என்பவள் வேதங்களை படிப்பதற்கே உரிமையற்றவளாகவும் அப்படி வேத மந்திரங்களை உச்சரிக்கப்படாத பெண்கள் பொய்யான பெண்களாகவும் மனு கூறுகிறார். இந்த மனு பெண்களின் பிறப்புரிமையான அறிவு பெரும் உரிமையை முற்றிலுமாக மறுக்கிறது.

ஆனால் புத்தர் இதை எல்லாம் மறுத்து பெண்களுக்கு வேதங்களைப் படிக்க உரிமை அளிக்கிறார். அவளை சுதந்திர காற்று சுவாசிக்க வெளியே அழைக்கிறார். அவளுக்கு உரிய அறிவை பெறுவதற்கு எல்லா சுதந்திரமும் தரப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமின்றி திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்கள் விதைகள் விபச்சாரிகள் கூட சுதந்திர காற்றை சுவாசிக்க புத்தர் காரணமாக இருக்கிறார்.

ஆனால் மனு பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக சித்தரித்து இருக்கின்றது. ஆண்களை மயக்குவதற்காகவே பெண்கள் பிறந்துள்ளதாகவும் பெண்களிடம் உஷாராக இருக்க வேண்டும் எனவும் பெண்கள் நினைத்தால் எப்பேர்பட்ட கல்விமானையும் அல்லது முட்டாளையும் தன் விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கு உகந்தவர்களாக கூறுகிறார்.

மட்டுமின்றி ஒரு ஆண் தன் தாயிடமோ சகோதரி இடமும் அல்லது மகளிடமும் கூட தனியாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அவர்களின் உணர்வுகள் அந்த ஆணை பலவீனப்படுத்திவிடும் என்கிறார்.

ஒரு பெண் ஆணின் அழகையும் வயதையும் மட்டும் பார்ப்பதில்லை ஒரு ஆண் எப்படி இருந்தாலும் அவர்கள் தங்களை அந்த ஆணுக்காக விட்டுக் கொடுக்கின்றனர். இதுபோன்று மிக மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர் பெண்கள்.

மேலும் ஒரு பெண் என்பவள் எப்பொழுதும் தன் குடும்பங்களை சார்ந்து இருக்க வேண்டும் குழந்தை பருவத்தில் தன்னுடைய தந்தையையும் வாலிப பருவத்தில் தன்னுடைய கணவனையும் முதிய வயதில் தன்னுடைய மகன்களையும் சார்ந்தே இருக்க வேண்டும். பெண்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை சார்ந்து இருக்கக்கூடிய ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும் ஒரு பெண் தன் கணவனை விட்டோ தந்தையை விட்டோ அல்லது மகனை விட்டோ வெளியே செல்லக்கூடாது. அப்படி சென்றால் அந்த வீட்டிற்கு அது அவமானம். ஆனால் ஒரு ஆண் எது செய்தாலும் அது தவறு இல்லை. ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கலாம் இதுவும் தவறில்லை.

மது அருந்துதல் பெண்கள் சூத்திரர்கள் வைசியர்கள் அல்லது சத்திரியர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கொள்வது மிக சிறிய குற்றங்களாகவே பார்க்கப்பட்டுள்ளன. பிராமணர்கள் கொல்லப்படுவதை மிகப்பெரிய படுபாவமாக பார்க்கப்பட்டிருக்கிறது.

கலப்புத் திருமணம் செய்து அதன் மூலம் பிறந்த குழந்தைகளோ அல்லது துறவு வாழ்க்கையில் ஈடுபட்டவர்களோ தற்கொலை செய்து கொண்டவர்களோ இருந்தால் அவர்களுக்கு தன்னுடைய இறுதி நாளில் செய்யக்கூடிய ஈமச்சடங்குகள் மறுக்கப்படுகின்றன.

மதப் பற்றி இல்லாதவர்களும் குடும்பங்களை விட்டு துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்களும், புத்தரின் சமயத்தில் சேர்ந்து கொண்ட ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கான ஈமச்சடங்குகள் மறுக்கப்படுகின்றன.

இவ்வளவு கொடுமைகளையும் செய்த மனு இந்து பெண்களின் வீழ்ச்சிக்கு காரணமா அல்லது பெண்களை சம மதிப்புடன் நடத்திய சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த புத்தர் இந்து பெண்களின் வீழ்ச்சிக்கு காரணமா?

இன்னும் இது பற்றி விரைவாக அறிந்து கொள்ள இந்து பெண்ணின் எழுச்சியும் எழுச்சியும் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.
மகளிர் தினத்தன்று இந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்த தோழர் Amudhan Devendiran அவர்களுக்கு நன்றிகள்.

நூலின் தகவல்கள் : 

புத்தகம் : இந்து பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்
ஆசிரியர்: டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

நூல் அறிமுகம் எழுதியவர் : 

எழுச்சியுடன்
நளினி மூர்த்தி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *