குழந்தைகளுக்கான உரிமைகள் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
– கு. மணி
. தாயின் பாலை தந்து வளர்த்தால்
. தங்கம் போல் வளரும்
. தழுவும் போதே தட்டி வளர்த்தால்
. தன்னை உணர்ந்து விடும்
. நோயில்லாமல் காத்து வளர்த்தால்
. நூறு வயது வரும்…..
. நோக்கம் ஒன்றைச்சொல்லி
. வளர்த்தால்
. பாரில் உயர்ந்துவிடும்
. காலம் அறிந்து உணவு கொடுத்தால்
. கவலை பறந்து விடும்
. கல்விக்கடலில் மூழ்கிட வைத்தால்
. காலத்தை வென்று விடும்
. ஐந்து வயதில் கற்பவை எல்லாம்
. ஆயுள் வரை தொடரும்
. பண்பாடு உள்ள பிள்ளைதான்
. பாரதம் வேண்டுவது
. என்று தெள்ளத் தெளிவாக எளிய தமிழ் நடையில் எடுத்துரைக்கிறார் கண்ணதாசன். நாளைய உலகம் இருக்கப் போகிறது எனவே பிள்ளைச் செல்வங்களை காத்து வளர்ப்பது நமது நாட்டைக் காத்து வளர்ப்பது போல என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
குழந்தை என்றால் யார்?
சர்வதேச சட்டத்தின்படி 18 வயதுக்கு கீழ் உள்ள எந்த ஒரு மனிதனும் குழந்தை என்று கருதப்படுவார். உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் இது. ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் குழந்தைகளுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டது. அவற்றின் படியும் இந்தக் கருத்தே பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 18 வயதுக்கு கீழ் இருக்கும் அனைத்து நபர்களும் குழந்தைகள் தான்.
- குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொரு மனிதரும் கடந்தே ஆக வேண்டிய பருவம்.
- குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவ காலத்தில் பல்வேறு விதமான அனுபவங்களை பெறுகிறார்கள்.
- குழந்தைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது கொடூரமாக நடத்தப்படுவது போன்ற அவலங்களுக்கு உள்ளாக் கூடிய பலவீனமான நிலையில் உள்ளார்கள்.
வரலாறு மற்றும் முக்கியத்துவம்
- வரலாறு முழுவதிலும் வெவ்வேறு பண்பாடுகளில் குழந்தைகள் பல விதங்களில் நடத்தப்பட்டுள்ளனர்.
- குழந்தை வளர்ப்பு நடைமுறைகளும் குழந்தைகளை எவ்வாறு அணுகுவது என்பதும் காலப்போக்கில் கணிசமாக உருவாகியுள்ளன.
- சமூக: பொருளாதார: மதம் மற்றும் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகள் இந்த நடைமுறையில் தாக்கத்தை செலுத்தி இருக்கின்றன.
- பண்டைய நாகரீகங்கள் எப்போதும் குழந்தைகளை சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாகவும் எதிர்காலத்திற்குப் பங்களிப்பவர்களாகவும் பார்த்தன. உதாரணத்திற்கு பண்டைய ரோமாபுரியில் குழந்தைகள் அவர்களின் அப்பாக்களின் சொத்தாக கருதப்பட்டனர். அவர்களின் நலம் குடும்பத்தின் முதன்மைப் பொறுப்பாக இருந்தது.
- பண்டைய கிரேக்க நாகரீகத்தில் கல்வியும் உடற்பயிற்சியும் ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் மிக முக்கியமானதாகவும் மதிப்பு வாய்ந்ததாகவும் கருதப்பட்டது .
- ஐரோப்பாவில் இடைக்காலத்தில் குழந்தைகள் பொதுவாக குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
- தத்துவ ஞானி ஜான் லாக் அவர்களின்” தபுலா ராசா “( வெற்று ஸ்லேட் ) அவர்களின் கருத்துப்படி குழந்தைகளை மென்மையாக வளர்க்க வேண்டியது தேவைகளும் இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு நடைமுறைகளில் தாக்கத்தை செலுத்தின.
- 18- 19 நூற்றாண்டுகளில் நடந்த தொழில் புரட்சி குழந்தைகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வந்தது.
- இருபதாம் நூற்றாண்டு முழுவதும் குழந்தைகளின் உரிமைகளும் அவர்களின் பாதுகாப்பின் தேவைகளுக்குமான அங்கீகாரம் அதிகரித்து வந்தது.
- குழந்தை உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வாழ்வதற்கான உரிமை: ஆரோக்கியமாக வாழ்வதற்கான உரிமை : கல்வி உரிமை: தீங்கிழைத்தலுக்கும் சுரண்டப்படுவதற்கு ஆட்படாமல் இருப்பதற்கான உரிமை உள்ளிட்ட குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகளைக் கோடிட்டு காட்டியது.
குழந்தைகளின் உரிமைகள்
குழந்தைகளின் உரிமைகள் என்பது 18 வயது உட்பட்ட ஒவ்வொரு குழந்தைகளுக்குமான சட்டபூர்வமான தனிப்பட்ட மற்றும் அடிப்படை உரிமைகளாகும். இவை ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான உரிமைகள் தொடர்பான சாசனங்கள்மூலம் வரையறுக்கப்பட்டு அனைவருக்கும் கல்வி சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை போன்ற அடிப்படை தேவைகளை உள்ளடக்கியுள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட உரிமைகளை அளித்திருக்கிறது .
- ஆறு முதல் 14 வயதுப் பிரிவினர் அனைவருக்கும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி இலவசமாக பெறுவதற்கான உரிமை( சட்டப்பிரிவு 21 ஏ)
- 14 வயது பூர்த்தியாகும் வரை தீங்கு விளைவிக்கும் சூழ்நிலையில் வேலை செய்ய தடை என்கிற பாதுகாப்பு உரிமை (சட்ட பிரிவு 24 )
- பொருளாதார நிலை காரணமாக வேறு வழி இன்றி அவர்களது வயது அல்லது வலிமையை மீறிய பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது : கொடுமைக்கு உள்ளாக்குவது ஆகியவற்றிற்கு தடை என்ற பாதுகாப்பு உரிமை. சட்டப்பிரிவு 39 இ )
இவற்றைத் தவிர இந்தியாவில் உள்ள பிற குழந்தைப் பருவ வயதைக் கடந்த ஆண் பெண் ஆகியோருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் குழந்தைகளுக்கும் இருக்கிறது.
- சமமான உரிமை( சட்டப்பிரிவு 14 )
- பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை சட்டப்பிரிவு 15)
- தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் சட்டபூர்வமான செயல்பாடுகளுக்குமான உரிமை {சட்டப் பிரிவு 21 )
- இழிதொழில் வணிகத்திலிருந்து பாதுகாக்கப்படவும் வலுக்கட்டாயமாக கொத்தடிமைகளாக ஈடுபடுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படும் உரிமை (சட்டப்பிரிவு 23 )
- சமுதாயத்தில் பலவீனமாக இருக்கும் பிரிவுகளைச்சேர்ந்த மக்கள் சமூக அநீதிகளால் பாதுகாக்கப்படுவதில் இருந்தும் அனைத்து வகையான சுரண்ட்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்ட உரிமை. (சட்டப்பிரிவு 46 )
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தவிர குழந்தைகளின் நலனுக்காகவே குறிப்பிட்ட வகையில் பல சட்டங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் மாநாட்டுத்தீர்மானங்கள் குழந்தைகளுக்கு எந்த விதமான சட்ட ரீதியான உரிமைகள் இருக்க வேண்டும் என்பதை பற்றி ஐக்கிய நாடுகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : சர்வதேச சட்டங்களாக அங்கீகாரம் பெற்றுள்ளன இவை பொதுவாக சி.ஆர்.சி என்று அறியப்படுகின்றன.
குழந்தைகளின் உரிமைகள் குறித்து ஐநாவின் தீர்மானங்கள்:
- 18 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலருக்கும் பொதுவானது. இந்த வயதில் இவர்களுக்கு திருமணம் ஆகி இவருக்கு குழந்தைகள் இருந்தாலும் குழந்தைகளாகவே கருதப்படுதவர்.
- குடும்பம் என்ற அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய இந்த மாநாடு குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது .
- சமுதாயத்தில் குழந்தைகளுக்கான நியாயமான மற்றும் சம அளவிலான உரிமைகளைப் பெறுவதை அந்தந்த நாடுகளின் அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இது அரசாங்கத்தின் கடமை என்று மாநாடு தெரிவித்தது.
- குழந்தைகளுக்குச் சம அளவிலான சிவில்: அரசியல்: சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகள் இருக்க வேண்டும் என்பதை மாநாடு அறிவுறுத்தியது.
இந்த உரிமைகள்
- உயிர் வாழும் உரிமை
- பாதுகாப்பு
- வளர்ச்சி
- பங்கேற்பு
உயிர் வாழும் உரிமை
- வாழ்வதற்கான உரிமை
- சிறந்த தரமான ஆரோக்கியத்தை பெற உரிமை.
- சத்துணவு.
- போதிய அளவு தரமான வாழ்க்கை.
- அடையாளத்திற்கான ஒரு பெயர் மற்றும் தேசீய அடையாளம்.
வளர்ச்சி காண்பதற்கான உரிமை
- கல்வி கற்பதற்கான உரிமை.
- ஆரம்பகட்ட குழந்தைப் பருவத்தில் பராமரிப்பும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருத்தல்.
- சமூகப் பாதுகாப்பு.
- ஓய்வு பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உரிமை.
பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை
- சுரண்டல்கள்.
- கொடுமைகள்.
- மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துதல்.
- உதாசீனம் செய்தல் அல்லது புறக்கணித்தல் ஆகியவற்றில் பாதுகாப்பு.
- நெருக்கடி காலம்: போர்: உடல் ஊனமுற்ற நிலை ஆகிய சமயங்களில் சிறப்புப் பாதுகாப்பு.
பங்கேற்பு உரிமை
- குழந்தைகளின் அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிப்பது.
- எதையும் வெளிப்படுத்தும் உரிமை.
- தகவல்கள் கோரிப் பெரும் உரிமை.
- கருத்தில்: எண்ணத்தில்: மத நம்பிக்கைகளில் தேர்ந்தெடுக்க பின்பற்ற சுதந்திரம்.
முடிவு:
குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வது என்பது அரசாங்கங்கள்: சமூகங்கள்: பெற்றோர்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான மற்றும் அக்கறை உள்ள சூழலை வழங்குவதன் மூலமும் அவர்களின் உரிமைகளை மதிப்பதன் மூலமும் மட்டுமே அவர்கள் தங்கள் முழு திறனையும் அடைந்து பொறுப்புள்ள குடிமக்களாக வளரமுடியும்
பெற்றால் மட்டும் போதாதம்மா
நன்றாய் பிள்ளை வளர்க்கத் தெரியணும்
கற்றால் மட்டும் போதாதம்மா -நற்
கல்வியின் பெருமையை அறியணும்..
உரிமையை வழங்கி -அவர்தம்
உணர்வினை வளர்த்திடுவோம்
உலகம் செழித்திட
உன்னதக் குழந்தைகளைப் போற்றிடுவோம்…….
எழுதியவர்:
கு. மணி
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
லியோ டால்ஸ்டாய் (தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ) எழுதிய “குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்” – நூல் அறிமுகம்

