தமிழ்நாடு ஒரு நிலம் மட்டும் அல்ல “தமிழ்நாட்டு வரலாறு” – ஸ்ரீ | நூல் விமர்சனம்

தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள்

இன்றைய நூலின் பெயர்: தமிழ்நாட்டு வரலாறு

நூல் ஆசிரியர் : கே.ராஜய்யன் [ தமிழில் சா.தேவதாஸ் ]

உங்களுக்கு தமிழ் மொழி வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது..

தமிழ்நாட்டு வரலாறு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு – காரணம் நூல்கள் வெகு குறைவு. இந்த நூல் அந்த குறையை போக்குகிறது. சங்க காலம் முதல் 2004 ஈழப்போர் வரை தமிழ்நாட்டு வரலாறை பேசுகிறது இந்த நூல். 40 ஆண்டுகால உழைப்பில் ஒவ்வொறு வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணமாக இருக்கிறது இந்த நூல்..

ஆரம்பகால தமிழ்நாடு..
வழிபாட்டு வடிவங்கள்..
களப்பிரர்கள்..
இந்து மற்றும் இஸ்லாம் மதங்களின் வருகை..
பல்லவர்கள்..
சோழர்கள்..
பிற்கால பாண்டியர்கள்..
இஸ்லாமிய ஆட்சி..
விஜயநகர ஆட்சி..
நாயக்கர் ஆட்சி..
பாளையக்காரர் எழுச்சி..
மராட்டியர் ஆட்சி என தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சி..
தென்னிந்திய கலகம்..
சுயராஜ்ய போராட்டம்..
சமூக நீதிக்கான போராட்டம்..
திராவிட இயக்கம்

என முடிகிறது இந்த நூல். தமிழ்நாட்டு வரலாற்றை பற்றிய பல கருத்தாக்கங்கள் உடைபட்டிருக்கின்றன..

களப்பிரர் காலம் இருண்ட காலம் ஏன்..
தமிழரின் வாழ்வில் இந்துமத தாக்கம்..
சமூக நீதி போராட்டம்.

போன்றவற்றில் இந்த நூல் புது வெளிச்சம் காட்டுகிறது. துல்லியமாக, முழுமையாக நிகழ்வுகளை சாதக – பாதக அம்சங்களுடன் பேசுகிறது இந்த நூல்.. இதன் ஆசிரியர் ஒரு கேரளக்காரர் என்பது ஆச்சர்யம்…

வாசியுங்கள்..
தமிழ்நாடு ஒரு நிலம் மட்டும் அல்ல என புரியும்..

பக்கம்: 517
விலை: ரூ 400
வெளியீடு: எதிர் வெளியீடு