குழந்தைகள் புத்தகத் திருவிழா (Children Book Fest)

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு சிறார் எழுத்தாளர் சங்கம், பாலர் அரங்கம் ஆகியோருடன் இணைந்து பாரதி புத்தகாலயம் நடத்தும் குழந்தைகள் புத்தகத் திருவிழா வெள்ளியன்று (மே 10) தேனாம்பேட்டை அரும்பு அரங்கத்தில் தொடங்கியது.

இந்த விழாவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் இரா.கணேசன் விற்பனையை தொடங்கி வைக்க, கரெடி டெல்ஸ் பிரதீப் பெற்றுக் கொண்டார்.

May be an image of 5 people and text

இதில் பாரதி புத்தகாலயம் பதிப்பாளர் க.நாகராஜன், அறிவியல் செயல்பாட்டாளர் த.மோகனா, மொழிபெயர்ப்பாளர் கி.ரமேஷ், பாலர் அரங்க பொறுப்பாளர் வனஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இளங்கோ, இந்திய மாணவர் சங்கம் விக்னேஷ், எழுத்தாளர்கள் யெஸ்.பாலபாரதி, கன்னிக்கோயில் ராஜா, தேவி கிரிஷன், ஆர்.பத்ரி பத்திரிக்கையாளர் மணிமாறன் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

May be an image of 5 people, child, people studying, television and text

மே 20ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள இந்த புத்தக விழாவில் தினசரி குழந்தை எழுத்தாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்..

புத்தக கண்காட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் ஆங்கில பதிப்பகங்களின் லட்சக்கணக்கான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 10 முதல் 25% வரை கழிவு வழங்கப்படும் தொடர்ந்து பத்து நாட்களும் குழந்தைகளை ஈர்க்கும் நிகழ்வுகள், ஓவியம் வரைதல், ஓரிகாமி, அறிவியல் நிகழ்வுகள், ஆய்வுகள், விஞ்ஞானிகளுடன் உரையாடல் என பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *