இந்திய நிலப்பிரப்பில் விலங்குகளுக்கும் மனிதனுக்குமான ஒரு நிலையான உறவு இருந்து கொண்டே உள்ளது.குறிப்பாக மனிதர்களுடன் நெடுங்காலமாக இருந்து வரும் மாடு, சேவல், புறா,ஆடு இவை யாவும் பிரிக்க முடியாதபடி பினைந்துள்ளனர். வீட்டு விலங்குகளை கடவுளாக,வீட்டில் ஒருநபராக நினைக்கும் இந்திய நில பரப்பில் எங்கும் காணலாம்.ஒரு கால கட்டங்களில் இந்த விலங்குகளுக்குள் நடந்து வந்த அதன் தனிதன்மை மற்றும் இயல்பாக ஏற்பட்ட மோதல்களை கவனித்த மனிதர்கள்அதனை ஒரு போட்டியாக விழா காலங்களில் நடத்தினர்.இந்த போட்டிகள் ஆரம்பத்தில் பொழுதுபோக்கவே நடத்தி வந்தனர். ஆனால் இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது வெற்றி பெற்ற விலங்குகளை பாராட்டாமல் அதனை வளர்ப்பவரை புகழ ஆரம்பித்தனர்.

இந்த புகழ்ச்சியை அவரின் பெயருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.அந்த மரியாதையை, பெருமையை தக்க வைத்து கொள்ள அந்த விளையாட்டை மேம்படுத்தினர்.அதாவது வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்களை அறிந்து கொண்டு அந்த விலங்குகளை அதுவரை விலங்குகள் ஈடுபட்டு வந்த வேலைகளுக்கு பயன்படுத்தாமல் அது தன்னுடைய பெயரை பெருமையை காட்டும் குறியீடாக மாற்றி அது இன்று வரை தொடர்கிறது. இந்த அளவுக்கதிகமான பெருமை இன்னொன்றையும் கொடுத்துள்ளது.அந்த ஒன்று தான் இவ்விளையாட்டுகளை உயிர்ப்புடனும், இதையேதொழிலாகவே மாற்றி வைத்துள்ளது.கெளரவம் இந்த ஒன்று தான் இன்று இவ்விளையாட்டுகளை ஆட்டி படைக்கிறது. கெளரவம் எப்போதும் தோல்விகளையே அவமானங்களையே ஏற்று கொள்ளாது.இந்த கெளவரவத்தை நிலை நாட்டி கொள்ளவே இந்த போட்டிகளுக்கு தயார் செய்யபடும் விலங்குகளுக்கு திட்டமிடபட்ட உணவுகள்,பயிற்சி நேரம் அதை கவனித்து பயிற்சி கொடுக்க தனி தனி ஆட்கள் என மாறிவிட்டது. வெற்றி பெற வேண்டுமானல் இந்த உணவு இந்த பயிற்சி கொடுக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டுள்ளதால் ஒரளவு பொருளாதார வசதி படைத்தவர்களே தற்போது இந்த வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டிகள் தற்போது வரவு எட்டணா செலவு பத்தணா கணக்குதான். கெளரவம் என்ற ஒன்று வந்ததில் இருந்து சாதி பிரச்சனைகளும் தலை தூக்கியது தன்னுடைய மாட்டை தன்னை விட கீழ்சாதிகாரன் பிடித்து வெல்வதா என்ற கெளரவ பிரச்சனை தான் காரணம்.

Jallikattu, a private event, won't interfere: HC - DTNext.in

இதனாலேயே இந்த போட்டிகளில் தன்னுடைய சாதிகாரர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக மாறியுள்ளது.இந்த போட்டிகளில் நடக்கும் விலங்குகளின் தோல்வி தன்னுடைய தோல்வி என எண்ணும் போக்கு ஏற்பட்டுள்ளதால் போட்டிகளில் ஏற்படும் தோல்வி சில நேரங்களில் அந்த விலங்குகளை கொன்று தன்னுடைய பெருமையை,கெளரவத்தை நிலைநாட்டிகொள்ளுமளவுக்கு செல்கிறது. ஒரு விலங்கின் இயல்பு தன்மையை மாற்றி அதனை மற்ற விலங்குகளை விட சிறந்ததாக மாற்றும் போக்குதான் தற்போது நடக்கிறது. காட்டு யானையை கும்கியாக மாற்றும் செயல்தான் இது அதற்காக ஏராளாமான பயிற்சிகள் கொடுத்து அதனை முற்றிலுமாக மாற்றுகின்றனர். கும்கி யானைக்கு மதம் பிடித்தால் சுற்றியிருப்பவற்றை எப்படி அழிக்குமே அதுதான் இங்கும். இதில் பாதிக்கபட போவது விலங்குகள் மட்டுமல்ல மனிதர்களும்தான். சாதியை உயிர்புடன் வைத்திருப்பவற்றில் கெளரவமுமம் ஒன்று இது தற்போது விளையாட்டிலும் காணப்படுகிறது இந்தபோக்கு இந்த விளையாட்டின் தன்மையையே மாற்றி விடும். மனிதர்களின் சுயநலத்தை விடுத்து இதனை இயற்கையாக எல்லோருக்குமாக நடைபெறும் போட்டியாக மாற்றுவதே நம்முன் உள்ள சவால். மாற்றுவோம்

6 thoughts on “பலி கேட்கும் கெளரவம் – மா.வினோத் குமார்.”
  1. ஒரு நல்ல பதிவு
    வாழ்த்துக்கள் வினோத் குமார்

  2. சாதியை உயிர்ப்புடன் வைத்திருப்பவற்றில் கௌரவமும் ஒன்று .

    சரியான சாட்டையடி அதிகார வர்க்கத்திற்கு.

    பயணங்கள் தொடரட்டும் எண்ணங்களோடும் எழுத்துக்களோடும்…

  3. சாதியை உயிர்ப்புடன் வைத்திருப்பவற்றில் கௌரவமும் ஒன்று

  4. சாதி உயிர்ப்புடன் இருப்பதற்கு மதமே மூலகாரணம். மதமும் சாதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல .சாதியையும் மதத்தையும் ஒழித்து மனிதத்தை வளர்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *