இன்று கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பேசப்பட்டு அதை பற்றிய பீதி அதிகமாகியுள்ளது. உண்மையில் இந்த வைரஸ் எப்படி செயல்படுகிறது ஏன் இந்த சமூக இடைவெளி, இந்த ஊரடங்கிற்கு பின் நாம் என செய்ய வேண்டும் என்பதை நாம் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வோம்.
இந்த கொரோனா வைரஸ் அனைத்து உறுப்புகளையும் தாக்கும் திறன் கொண்டது. இதனை எதிர்க்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும். அது இருந்தால் ஒருவர் அந்த நோயினால் பாதிக்கப்படாமல் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அவர் அந்த நோயை அடுத்தவருக்கு பரப்ப வாய்ப்பு உண்டு. பின் இந்த நோய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியினை. உடலில் அதிகரித்தால் போதுமா அல்லது இதற்காக தடுப்பு மருந்து வேண்டாமா என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது. இதனை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
நோயின் ஆரம்பம்:
ஏற்கனவே இந்த வைரசால் தாக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதோ, இருமும் போதோ அல்லது பேசும்போதோ எச்சில் துகள் பக்கத்தில் இருப்பவர் மேல் பட்டு அது வாய், மூக்கு கண் ஆகியவை மூலமோ அல்லது நேரடியாக சுவாசித்தோ வாய் அல்லது மூக்கு மூலம் உடலில் முதலில் தொண்டையிலுள்ள உமிழ்நீரில் ஒட்டுகிறது. அது இரத்தத்துடன் கலந்து உடல் முழூக்க சுற்றுகிறது. அப்போது உடலில் உள்ள ஏதாவது ஒரு செல்லில் ஆங்கியோடென்சின் 2 நொதி (Enzyme) (Angiotensin Converting Enzyme 2 ACE2 என்னும் அந்த செல்லின் மேல் உள்ளதுடன் இனைகிறது. அதாவது இந்த ஆங்கியோடென்சின் என்பது உடல் முழூவதும் இருக்கும். அதனை ஈரல் சுரக்கிறது. இது உடலில் இரத்த அழுத்தத்தினை முறைபடுத்தும். செல்லின் இந்த புலன் உணர்வு தூண்டி (Receptor) மூலம் இந்த வைரஸ் செல்லில் நுழைகிறது. ஒரு செல்லில் நுழைந்தவுடன் புத்தகத்தை நகல்(Xerox) எடுப்பது போல உடலின் பல செல்களில் வளர ஆரம்பித்து விடுகிறது.
இதனால் இந்த வைரஸ் தாக்கப்பட்டவர் ஒருவர் முதல் வாரத்திலேயே பலருக்கு இதனை தொற்ற வாய்ப்பினை அளிக்கிறார்.. பாதிக்கப்பட்டவருக்கு மூக்கில் வாசனை அறிவது முடியாது, நாக்கில் சுவை இருக்காது மற்றும் தலிவலி உடல்வலி அதிகமாக இருக்கும்.
இவ்வாறு கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர் ஒருவாரத்திற்குள் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி எதிர்கொண்டு தடுக்குமேயானால் அவர் அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவார். இல்லை என்றால் இந்த வைரசானது நுரையீரலுக்குள் செல்லும். ஒரு நுரையீரலானது ஒரு டென்னில் விளையாடு மைதானம் அளவு பெரியது. அதில் சின்ன பலூன்கள் போன்று உறுப்புகள் இருக்கும் இந்த பலூன் வெளியிலும் இந்த ஆங்கியோடென்சின் 2 இருக்கும். எனவே இந்த வைர்ஸ் அதில் சுலபமாக நுழைந்துவிடும்.
இந்த பலூன் போன்ற உறுப்புகள் மூலம்தான் நாம் மூச்சு இழுக்கும் போது ஆக்சிஜனானது நுரையீரலுக்குள் செல்கிறது. அந்த ஆக்சிஜன் பிறகு இரத்த ஒட்டம் மூலம் உடல் முழூவதிலும் பரவுகிறது. ஆனால் இந்த வைரஸ் நுழைந்துவிட்டதால் இந்த ஆக்சிஜன் பரவுவது தடுக்கப்படுகிறது. அதே நேரம் நமது உடலிலுள்ள வெள்ளை இரத்த அணுக்கள் கிமோகைன்ஸ் என்ற புரதத்தை சுரக்கிறது. இந்த கிமோகைன்ஸ் என்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியினால் தூண்டப்படுகிறது. இவைகள் உடலில் எங்கு நோய் கிருமிகள் உள்ளனவோ அந்தப் பகுதிக்கு சென்று அவைகளை அழிக்க போராடும்.
அதனால் நுரையீரலில் அந்த இறந்த செல்கள், அதனால் ஏற்படும் கழிவுகள் இவைகளெல்லாம் நுரையீரலில் குவிவதால் அவற்றினை வெளியேற்ற நமக்கு இருமல் வருகிறது. இதனால்தான் நமக்கு உடலில் காய்ச்சல், மூச்சு தினரல் ஏற்படுகிறது. பலர் இந்த நிலையிலிருந்து மருத்துவத்தால் தப்பி விடுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு அவ்வளவாக மூச்சு தினரல் இருக்காது. உடலில் ஆக்சிஜன் குறைந்த அளவு சுற்றிக்கொண்டிருக்கும். அவ்வாறு இல்லை யென்றால் அதுவே கடுமையாகி அது நிமோனியா என்ற நோயின் அறிகுறியாக மாறிவிடும்.
அவ்வாறு மூச்சு தினரல் அதிகமாகும் போது அவர்களுக்கு ஸ்கான் எடுத்து பார்த்தால் அவர்களின் நுரையீரலில் வெள்ளையாக திட்டு தெரியும் இடையிடையே கருப்பு இடைவெளி இருக்கும். இது அந்த சளி அந்த பலூன் பகுதியில் அதிகமாக உள்ளதை காட்டுகிறது.
ஆனால் இந்த கரோனா வைரஸ் மற்ற உறுப்புகளையும் தாக்குகிறது. இந்த வைரசானது கண், மூக்கு, குடல் பகுதிகளையும் தாக்குகிறது. வயிற்று பகுதியில் அதிகமாக இந்த ஆங்கியோடென்சின் இருக்கும். அதனால் அங்கெல்லாம் இந்த வைரசானது ஒட்டிக்கொள்கிறது. ஏனெனில் அது இரத்த ஓட்டத்தில் சுற்றுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. இரத்த ஒட்டத்தில் சுற்றுவதால் அது இரத்த குழாயினையும் தாக்குகிறது. நவே இருதயத்தையும் தாக்குகிறது.
ஏற்கனவே சொன்னது போன்று கிமோகைன்ஸ் சுரப்பதால் மற்றொரு சுரப்பியான சைடோகையும் சுரக்கிறது. இதன் அளவு அதிகமாகும் போது இரத்தம் உறைதலும் நடக்கிறது. எனவே இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
இவைகளெல்லாம் இந்த வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கே இருக்கும். அடிப்படையில் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதை காட்டுகிறது.
ஆக இந்த நிலை ஏற்கனவே இருதய பிரச்சனை அல்லது நீரழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும் போது ( இவர்களுக்கு நோய் எதிப்பு சக்தி கு”ர்றைவாக இருக்கும்) இந்த நபர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
எனவேதான் மூச்சு தினரலுக்காக வெண்டிலேட்டர்களும், இருதய சிறுநீரக ஓட்டத்திற்காக டையலேசிஸ் என்பதும் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுகீறது.
அதே சமயம் இந்த மாதிரி பாதிப்புக்கு உள்ளாவது ஒட்டுமொத்த பாதிக்கப்பட்ட நபர்களில் வெறும் 5% விழுக்காடு மட்டுமே.
ஏற்கனவே சொன்னது போன்று இந்த சைடோகின் சுரப்பதால் அது நோய்கிருமிகளை எதிர்க்கும் போது அந்த கிருமிகள் இறக்கின்றன. அதன் கழிவுகளால் மூளை பகுதி வீங்குகிறது. ஏனெனில் அங்கும் இரத்த ஓட்டம் குறைகிறது. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் போவதில்லை. ஆகவே அவர்களுக்கு ஸ்ட்ரோக் என்பதால் தாக்கப்பட்டு உடலிலுள்ள சில உறுப்புகள் இயங்காமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே இந்த நோய் தீவிரமாகும் போது அனைத்து உறுப்புகளும் பாதிப்பது இந்த பிரச்சனையால்தான்.
ஆங்கியோடென்சின் 2 சுரப்பதால் அது இரத்தக் குழாயினை சுருக்கும். இதனை சரிபடுத்த சிறுநீரகத்தின் மேலே உள்ள அட்ரினல் சுரப்பியிலிருந்து ரெனின் என்ற நொதி சுரக்கும். இவை இரண்டும் மாறி மாறி சுரந்து இரத்த அழுத்தத்தினை உடலில் கட்டுப்படுத்துகின்றன. இந்த நோயினால் அதிக ஆங்கியோடென்சின் 2 சுரப்பதால் ரெனின் என்ற நொதியும் அதிகமாக சுரக்க வேண்டி உள்ளது இது சிறுநீரகத்தின் செயல்பாட்டினை பாதிக்கிறது எனவே சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது.
எனவே பொது மருத்துவர், இருதய, நுரையீரல், குடல், சிறுநீரக, மூளை நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.
சாதாரண நோய்கொள்ளி மருந்துகள் (Antibiotic) இதற்கு போதுமானதாக இல்லை. காரணம் இந்த வைரசுகள் இந்த மருந்துகளுக்கு அவைகள் எதிர்பு சக்தியினை கொண்டிருக்கின்றன.
ஆனால் சுன்டெலிகள், பெருச்சாலிகள், குரங்குகள் போன்றவைகள் இந்த வைரசால் தக்கப்படுவதில்லை. எனவே அவைகளிலிருந்து இந்த நோய்க்கான மருந்தினை நோய் எதிக்கும் சக்தியினை பெறமுடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அதனால் இந்த கரோனா வைரசுகளுக்கு தடுப்பு ஊசி போடுவதுதான் சிறந்தது என்று மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று உயிருள்ள கிருமிகளை உடலுக்குள் செலுத்துவது. அதாவது கிருமிகளை ஆய்வுகூடத்தில் வளர்த்து அவற்றின் வீரியத்தை சில வேதி பொருட்களால் குறைத்து தடுப்பு ஊசி தயாரிப்பது. இன்றுள்ள பிசிஜி ஊசி இந்த வகையை சார்ந்ததாகும். (It is called as active Immunisation or Live attenuated vaccine)
மற்றொன்று கிருமிகளின் வீரியத்தை முழூவதுமாக அழித்து கொல்லப்பட்ட கிருமிகளை உடலில் ஏற்றுவது. (Passive Vaccine) போலியோவிற்கு இந்த முறை அமுலாகுகிறது.
இப்போது முதலில் இந்த கரோனா வைரஸ் உடலிலுள்ள செல்களின் ஆன்கியோடென்சின் 2 என்பதை தேடி ஒட்டிக்கொண்டு உடலை பாடாய்ப்படுத்துகிறது என்று பார்த்தோம். அந்த வைரஸ் எந்த நொதியினை கொண்டு இந்த ஆங்கியோடென்சின் 2 இரண்டுடன் ஒட்டிகொள்கிறது என்பதை அறிந்துவிட்டால் இதற்கான தடுப்பு ஊசி தயாரிக்க முடியும். இதில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளார்கள்.
அதுவரையிலும் விலகி இரு விழித்திரு வீட்டில் இரு என்பதோடு அறிவியலோடு நாம் இதனை அனுக வேண்டும்.
(இக்கட்டுரை சயின்ஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம் ஆகும்)
– நன்றி https://science.sciencemag.org/