இந்தியாவில் உருவாக்கப்பட்டதுதானா ஆரியபட்டா செயற்கைக்கோள்?
இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 4
இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேருவதற்கு முன் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஏராளமான தகவல்கள்ல் மிக மிக முக்கியமானது நம்முடைய இதயத்துடிப்பான ஆரியபட்டா குறித்து அறிந்து கொள்வது ஆகும் வரலாற்று சிறப்புமிக்க.. இந்திய சாதனைகளின் பட்டியலில் முதலில் எப்போதும் இடம்பெறுவது ஆரியபட்டா எனும் நம்முடைய நாட்டின் முதல் செயற்கைக்கோள்.
மிக எளிதாக இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது என்கிற கேள்விக்கு ஆரியபட்டா என்று ஒரு டிக் அடித்து இந்த வரலாறை நாம் கடந்துவிடுகிறோம்.. ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் போராட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஒருவர் இஸ்ரோவில் இணையும் பொழுது அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக அவரால் தன்னை உணர முடியும்.
அது சரி முதலில் செயற்கை கோள் என்றால் என்ன?
நம் பூமிக்கான இயற்கைகோலாக இருப்பது சந்திரன் ஆகும்.. அதாவது நம்முடைய பூமியை சந்திரன் ஒரு மையப்புள்ளியாக கொண்டு சுற்றி வருகிறது அது போல் நம்பால் விண்ணிற்கு அனுப்பப்படுகின்ற மனிதனால் உருவாக்கப்பட்ட.. புவியை மையப்புள்ளியாக கொண்டு சுற்றி வருகின்ற ஒரு இயந்திரத்திற்கு தான் செயற்கைக்கோள் என்று பெயர்.. உலகிலேயே முதல் செயற்கைக்கோளை அவ்விதமாக ஏவிய நாடு சோவியத் யூனியன் அந்த செயற்கைக்கோளின் பெயர் ஸ்புட்னிக் அது ஏவப்பட்ட ஆண்டு..1957..
எனவே ஒரு செயற்கைக்கோள் என்பது ஒரு கிரகத்தையோ அல்லது விண்வெளியில் உள்ள வான் உடலையோ சுற்றிவரும் மனிதனால் உருவாக்கப்பட்ட சாதனம்.. புவியீர்ப்பு விசை செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் இயக்குகிறது
சரி அடுத்த கேள்வி செயற்கை கோள்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
செயற்கைகோள்கள் பூமியில் இருந்து ரேடியோ சிக்னல்களைத் பெறுகின்றன.. அவைகளை பெருக்கி தங்களுடைய.. புள்ளி விவரங்களோடு இணைத்து அவை பூமிக்கு திரும்ப சிமிக் கைகளை அனுப்புகின்றன..
ஒரு செயற்கைக்கோள் புவியை சுற்றிவரும் பொழுது அதில் இணைக்கப்பட்டு இருக்கின்ற படக்கருவிகள் அங்கிருந்து பூவியில் புகைப்படங்கள் எடுத்து அனுப்புகின்றன அதே சமயத்தில் சில செயற்கைக்கோள்கள் எக்ஸ் கதிர்களை வெளியிட்டு திரும்பப் பெறுகின்ற எதிரொலி எக்ஸ் கதிர்கள் மூலம் இன்னும் விரிவான ஆழமான படங்களை நமக்கு அனுப்பி நம்முடைய அன்றாட வாழ்வில் தட்ப வெட்பம் முதல் பல வகையான செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.. இதுதான் செயற்கைக்கோள் குறித்த முக்கிய அம்சங்கள் ஆகும்.
இப்போது ஆரியபட்டாவுக்கு திரும்புவோம்..
எல்லா அரசாங்கங்களும் ராணுவத்திற்கு தனியாக ஏராளமாக செலவிட்டுக் கொண்டிருந்த பொழுது இந்திய அரசு இஸ்ரோவுக்கு என்று தன்னுடைய நிதி நிலை அறிக்கைகளில் ஒரு அளவிற்கு பணம் ஒதுக்க வேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தை ஆரம்ப நாட்களிலிருந்தே விக்ரம் சாராபாய் சதீஸ் தவன் போன்றவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்..
ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியை சாதிப்பதற்கான அதிவேக பாய்ச்சலை ஜவகர்லால் நேரு விதைத்திருந்தார்.. அறிவியலின் அடிப்படை ஒரு நாட்டின் முன்னேற்றம் என்று கருதிய அந்த ஆரம்ப நாட்களில் ஹோமி ஜஹாங்கிர் பாபா விக்ரம் சாராபாய் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் எனும் மூவர் அணி இந்தியாவை அறிவியலில் தன்னிகரற்ற சாம்ராஜ்யமாக உருவாவதற்கான அற்புதங்களை விதைத்துக் கொண்டிருந்தது நாம் ஏற்கனமே கண்டது போல இஸ்ரோ இந்திய அரசாங்கத்தின் ஒரு துறையாக அறிவிக்கப்பட்டது.
1971ஆம் ஆண்டு.. திடீரென்று விக்ரம் சாராபாய் எனும் அந்த மாமனிதர் விடைபெற்ற பொழுது அந்த மாபெரும் பணியை தன் தோளில் சுமந்தவர் சதீஸ் தவன்….1972 ஆம் ஆண்டு நம் இந்திய நாட்டிற்கு என்று ஒரு ஸ்பேஸ் கமிஷன் அமைக்கப்பட்டது டிபார்ட்மெண்ட் ஆஃப் ஸ்பேஸ் என்று துறை விரிவுபடுத்தப்பட்ட பொழுது அதற்கு கீழே இஸ்ரோ கொண்டுவரப்பட்டது இந்திய அரசாங்கத்தினுடைய ஒரு பகுதியாக இஸ்ரோ மாறியது, 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தான்.
இந்த நாளில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவினுடைய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு வெறும் 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து அந்த பணி யை உடுப்பி ராமச்சந்திர ராவ் என்று பிரபலமாக போற்றப்படும் யூ ஆர் ராவ் வர்களிடம் ஒப்படைக்கிறார்..
யார் இந்த யூ ஆர் ராவ்?.. யூ ஆர் ராவ் இந்தியாவின் செயற்கைகோள் நாயகன் என்று போற்றப்படுகிறார் கர்நாடகா மாநிலத்திலுள்ள அடம் ஆரோவில் பிறந்தவர் ஆரம்ப கல்வியை அடம் ஆறு பள்ளிகளில் முடித்தார் உடுப்பியிலுள்ள கிறிஸ்துவ உயர்நிலை பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார் ஆனந்தபூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர்..
இந்த வளாகத்திற்கு வருகை புரிந்து ஒரு கட்டடத்தை திறந்து வைத்த விக்ரம் சாராபாய்யின் கண்ணில் அவர் பட்டார் அங்கிருந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறப் போகிறேன் என்று அறிவித்தவரை முதுகலை பட்டம் முடித்தவுடன் தன்னை வந்து பார்க்குமாறு விக்ரம் சாராபாய் கேட்டுக்கொள்கிறார் இதன் மூலம் இஸ்ரோவில் இணைந்தவர் யூ ஆர் ராவ்.. இப்படி பல மாணிக்கங்களை தேடித்தேடி சேகரித்த பெருமை விக்ரம் சாராபாய்யை சேரும்
யூ ஆர் ராவ் அண்டக் கதிர் வீச்சு என்று அழைக்கப்படும் காஸ்மிக் அலைகள் குறித்து தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்..1972 ஆம் ஆண்டு செயற்கைகோள் தொழில்நுட்பம் குறித்து தீவிர ஆய்வுகள்ல் அவர் ஈடுபட தொடங்கினார் இந்த காலகட்டத்தில் தான் இஸ்ரோவிற்கு இந்திரா காந்தி வருகை புரிந்தார்.. உலகத்திலுள்ள ஏறக்குறைய 10 நாடுகள் அப்போது செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி இருந்தனர் ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அயல் நாட்டினரின் செயற்கை கோள்களை தான் தங்களுடையவை என்று விலை கொடுத்து வாங்கி அதை விண்ணிற்கு மற்றவர்களின் மண்ணில் இருந்து அனுப்பிக் கொண்டிருந்தன.
அது போலவே நாமும் ஒரு செயற்கை கோளை விலை கொடுத்து வாங்கி அனுப்ப முடியுமா என்று இந்திரா காந்தி ஒரு கூட்டத்தில் வினவுகின்றார்.. சத்தீஸ் தபன் வர்களை முந்திக் கொண்டு யூ ஆர் ராவ் பதிலளிக்க கையை உயர்த்தினார்.. நாம் ஏன் அயல நாட்டினர் இடம் வாங்க வேண்டும்.. கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் அதற்குரிய தொழில்நுட்பத்தை சிறப்பாக இங்கே பயிற்சி கொடுத்து நமக்கான செயற்கைக்கோளை நாமே வடிவமைக்க முடியும் என்று யூ ஆர் ராவ் என்கிற இளைஞர் அறிவிக்கிறார்..
அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கூட இந்திராகாந்தி கேட்கவில்லை.. 15 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறேன் அதனுடைய மிநியேசர் என்று அழைக்கப்படுகின்ற ஒரு மாதிரியை நீங்கள் உருவாக்கி காட்டுங்கள் என்று கூட்டத்தை முடித்து விட்டார்.
ஆனால் ஆரியபட்டா என்கிற அந்த அற்புத கனவை எட்டே நாட்களில் ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கி அசத்தியவர் யூ ஆர் ராவ்.. இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் அளப்பரிய 10 சாதனைகள் எப்போது பட்டியலிடப்பட்டாலும் அந்த சாதனைகளில் முதலிடத்தைப் பெறுவது ஆரியபட்டா!
இந்த செயற்கைக்கோளுக்கு பெயர் வைப்பதில் நாம் மிக மிக பொறுப்புணர்வோடு இருந்திருக்கிறோம் கிறிஸ்து பிறப்பிற்குப் பிறகு476 ஆம் ஆண்டு சூரியன் மையத்தில் உள்ளது ….இந்த பூமி ஒரு உருளை என்றும் இந்த உலகிற்கு அறிவித்த ஆரியபட்டா எனும் மாபெரும் அறிஞரின் பெயரை நம்முடைய முதல் செயற்கைக்கோளுக்கு வைப்பது என்று நாம் முடிவு செய்தோம்.. கணிதத்திற்கும் வான இயலுக்கும் ஆரியபட்டா எனும் அந்த அறிஞர் முன்வைத்த பல ஆச்சரியமான பங்களிப்புகள் இன்று வரை பிரபலமாக உலகில் பேசப்படுகின்றன..
ஆரியபட்டா எனும் அந்த செயற்கைக்கோள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே இருக்கின்ற பொருட்களை கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும்.. அந்த கால கட்டத்தில் சோவியத் யூனியன் என்கிற அந்த அற்புத தேசத்தோடு நமக்கு இருந்த நேசம் தோழமை இதன் காரணமாக அந்த நாடு எந்தவகையான விலையும் பெறாமல் கட்டணமின்றி நம்முடைய முதல் செயற்கைக்கோளை விண்ணிற்கு செலுத்துவதாக ஒப்புக் கொண்டது..1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று சோவியத் யூனியனின் காப்புஸ்டின் யார் ஏவுதளத்தில் இருந்து காஸ்மாஸ்-3M ராக்கெட்டில் விண்ணை நோக்கி ஆரியபட்டா பறந்து வெற்றிகரமாக புவியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
ஆர்யபட்டாவின் வடிவமைப்பு மற்றும் பண்புகள்.. உலகளவில் தன்னிகரற்ற நம்முடைய அறிவியல் சாதனையை இன்றைக்கும் பறை சாற்றுகின்றன.. இஸ்ரோவில் இணைய துடிக்கும் உங்களைப் போன்ற ஒருவர் கண்டிப்பாக அதன் அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும்..
ஆரியபட்டா ஒரு இருபத்தி ஆறு பக்கங்கள் கொண்ட பன்னிரு புற வடிவம் அதனுடைய விட்டம் 1.4 மீட்டர் ஆகும் அதோட இடை 360 கிலோ உலகிலேயே முதன் முதலில் நாம் செய்த சாதனை என்னவென்றால் அது முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இருந்து மின் சக்தியைப் பெறுகின்ற சூரிய பலகைகள் பொருத்தப்பட்ட நிக்கல் காட்மியம் மின்கலன்கள் கொண்ட செயற்கைகோளாக இருந்தது.. இதுவே ஒரு சோதனையாகும் ஆர்யபட்டாவின் வெற்றிக்குப் பிறகுதான் உலகில் பெரும்பாலான செயற்கை கோள்கள் சூரிய ஒளியிலே இயங்குமாறு வடிவமைக்கப்பட்டன என்பது வரலாறு
பூமியின் தரை கேந்திரங்கள் உடன் தொடர்புகொள்ள VHF மற்றும் UHF அலைவரிசை பயன்படுத்தப்பட்ட உலகின் மூன்றாவது செயற்கைக்கோள் அதுதான்
வெப்ப கட்டுப்பாட்டு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு செயற்கைக்கோளின்னுடைய வெப்பத்தை கட்டுப்படுத்தும் முக்கியமான ஒரு படிநிலை எட்டப்பட்டது..
ஆரியபட்டா விண்வெளி அறிவியலுக்காக உருவாக்கப்பட்டதாகும் அதிலிருந்த கருவிகள் பின்வரும் ஆய்வுகளை சிறப்பாக செய்து அன்றைய கட்டத்தில் அறிவியலை அடுத்த படிநிலைக்கு எடுத்துச் செல்ல உதவின.. யூ ஆர் ராவ் அவர்களின் தொலைநோக்கு பார்வையும் சத்தீஸ் தவன் என்கிற தலைமை அவருக்கு கொடுத்த சுதந்திரம் யூ ஆர் ராவ் என்கின்ற அந்த அணி முழுக்க முழுக்க அறிவியலின் பார்வையில் உலகையே திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்டத்தை சாதித்தது
முதலாவது சோதனை எக்ஸ் கதிர்கள் .. ஆய்வு விண்வெளியில் உள்ள கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற விண்மீன்களின் எக்ஸ் கதிர்கள் வெளியீட்டை ஆரியபட்டா வெற்றிகரமாக ஆய்வு செய்தது.
சூரியனின் கதிர்வீச்சு எப்படி பூமியின் வளி மண்டலத்தை பாதிக்கிறது என்பதை ஆரியபட்டா நேரடியாக ஆய்வுக்கு உட்படுத்தியது..
வளிமண்டல ஆய்வு என்று அழைக்கப்படுகின்ற AERONOMY துறையினுடைய தனித்துவத்தோடு அயனோஸ்பியர் என்கின்ற ஒரு பகுதியை முழுக்க முழுக்க ஆய்வு செய்ய ஆரியபட்டா பயன்படுத்தப்பட்டது
ஆரியபட்டாவை கண்காணிக்க முக்கிய தரை கேந்திரம் இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டது என்பது சிறப்பு செய்தி.. அது ஸ்ரீஹரி கோட்டாவின் முதல் திட்டம்.. அப்போது இந்தியாவின் தரை கேந்திர வசதி குறைவாக இருக்கிறது என்று சொல்லி சோவியத் யூனியன் தன்னுடைய தரை கேந்திரங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிய பிறகும் ஸ்ரீஹரிகோட்டா என்னால் முடியும் என்று நிரூபித்தது..
600 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த பூவி ஆர்பிட் இதில் ஆரியபட்டா வைக்கப்பட்டது இது 96.46 நிமிடங்களில் ஒரு முறை பூமியை சுற்றி வந்தது.. ஆர்யபட்டாவின் அனுபவத்தில் இருந்து இஸ்ரோ எதிர்காலத்தில் பல செயற்கைக்கோள்களை உருவாக்குகின்ற தன்னிகரற்ற தன்னுடைய சாதனைகளை தொடங்கியது..
இன்றைக்கு ஆரியபட்டா விருது என்கிற ஒரு விருது வழங்கப்பட்டு வருகிறது இது உயரிய விண்வெளி விருது இந்த விருது அறிஞர் ஆரியபட்டா பெயரில் அல்ல நம்முடைய முதல் செயற்கைக்கோளின் பெயரில் தான் வழங்கப்படுகிறது என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டிய செய்தி ஆர்யபட்டாவின் செயல்பாடு குறுகிய காலத்திற்கு தான் இருந்தது ஆனால் அது தொடர்ந்து விண்வெளியை சுற்றிக் கொண்டிருந்தது ஆறு ஆண்டுகள் தொடர் செயலில் இருந்தது 1981றில்.. தன் பணியை அது முடித்துக்கொண்டது
உலகிலேயே தன்னுடைய முதல் செயற்கைக் கோளை அனுப்பிய நாடு என்று பார்க்கும் பொழுது பதினோராவது நாடாக இந்தியா அப்போது உருவானது என்றாலும் தங்கள் நாட்டிலேயே சொந்தமாக தயாரித்த செயற்கைக் கோளை விண்ணிற்கு அனுப்பியது என்கிற முறையில் பார்த்தால் இந்தியா ஆறாவது நாடாக வரலாற்றில் இடம் பிடித்தது..
1972 ஆம் ஆண்டு பெங்களூரின் உடைய இஸ்ரோ சாட்டிலைட் சென்டர் இயக்குனராக பதவியேற்றுக் கொண்ட யூ ஆர் ராவ் அவர்கள் அது வரையில் செயற்கைகோள்கள் தயாரிப்பதில் எத்தகைய முன்னனுபவமும் இல்லாத ஒரு அணியைத் திரட்டி பொறியாளர்கள் அறிஞர்கள் முதல் பட்டறை தொழிலாளர்கள் வரை அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு குடைக்கு கீழே வரவழைத்து ஆரியபட்டா அணி என்கிற ஒரு அணியை உருவாக்கி பிற் காலத்திற்கான பாதையை வகுத்து கொடுக்கிறார்..
வடிவமைப்பு மின் ஆற்றல் முறைமை.. தகவல்தொடர்பு.. விவர சேகரிப்பு எக்ஸ் கதிர் வானியல் சோலார் இயற்பியல் மற்றும் காற்றுமண்டல வான் மண்டல கல்வி என்று இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்த பெருமை ஆரியபட்டாவை சேருமென்றால் அதை உருவாக்கிய அணியின் தலைமையாக டாக்டர் ராவ் அவர்கள் பிற்காலத்தில் இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு கூட செயற்கைக்கோளை அனுப்ப முடியும் என்பதற்கான முதல் படிநிலையை எடுத்து வைத்தது எவ்வளவு பெரிய பிரம்மாண்டம்.. அதனால் தான் இஸ்ரோ தன்னுடைய சாட்டிலைட் சென்டரை பெங்களூரில் யூ ஆர் ராவ் சேட்டிலைட் சென்டர் என்று இன்று பெயர் மாற்றம் செய்துள்ளது..
ஆர்யபட்டா விண்ணில் அனுப்ப பட்ட பொழுது இஸ்ரோ என்கிற அந்த அமைப்பில் ஒட்டுமொத்தமாக பணியில் இருந்த விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிக சரியாக 117 ஆகும். இன்று இஸ்ரோவில் எத்தனை விஞ்ஞானிகள் பணிபுரிகிறார்கள் தெரியுமா? நாடுமுழுவதும் உள்ள இஸ்ரோவின் உடைய அனைத்து வகையான ஆய்வுக்கூடங்களையும் பட்டறைகளையும் செயற்கைக்கோள் உருவாக்குகின்ற நிலையங்களையும் ஒரு ராக்கெட்டை விண்ணில் அனுப்புவதற்கான முன்னேற்பாடுகளை செய்கின்ற எரிபொருள் கூடங்களையும் சேர்த்தால்..18000 பேர் என்னும் மனித வள சாதனையை அவர்கள் எட்டியிருக்கிறார்கள்..!
விரைவில் நீங்களும் அதில் இணைய இருக்கிறீர்கள் அடுத்த எட்டாண்டுகளில் இஸ்ரோவின் பணிகள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் மேலும் அங்கே விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள் என்பதுதான் அடுத்த நம்பிக்கைக்குரிய செய்தியாகும் ஆனால் இஸ்ரோவில் இருக்கும் அத்தனை பணிகளுமே விஞ்ஞானிகளின் பணிகள் அல்ல ஒரு விஞ்ஞானியாக இஸ்ரோவுக்குள் நுழையும் பணி என்பது என்ன அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
*****************
கட்டுரையாளர்:
முந்தைய தொடரை வாசிக்க: இஸ்ரோயணம்: இஸ்ரோ விஞ்ஞானி ஆவது எப்படி? – 3 —- இஸ்ரோ பிறந்தது எப்படி?
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: உலகின் மிகப்பெரிய விண்வெளியியல் ஆய்வு