அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent progressive diabetes?) type1 and type2 Diabetes - https://bookday.in/

அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது?

அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது?

-டாக்டர் வி. மோகன்
தமிழில்:மோசஸ் பிரபு

“வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்தால், நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் இல்லாத
இந்தியா சாத்தியமாகும்”

1970 ஆம் ஆண்டுகள் வரை, நீரிழிவு நோய் இந்தியாவில் தற்போது பரவியிருக்கும் எண்ணிக்கையோடு ஒப்பீடும் போது மிக மிக குறைவானதாக இருந்தது. இந்திய
மருத்துவ ஆராய்ச்சி ஆலோசனைக் குழு 1972 ஆம் ஆண்டு நிரழிவு நோய் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது, இதில் நகர்புறங்களில் வாழும் மக்களில் 2% என்ற அளவிலும் மற்றும் கிராமப்புறங்களில் 1% என்ற அளவிலும் நீரிழிவு நோயால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கையில் இன்று பெரும் மாற்றம்
ஏற்பட்டுள்ளது இந்திய வரலாற்றில் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றது அந்த நிகழ்வுகள்தான் இந்தியர்களின் உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் அதிகரிக்க காரணமாக இருந்தது.

முதல் நிகழ்வு:

1960 ஆம் ஆண்டுகள் வரை, இந்திய நாடு PL 480 போன்ற திட்டங்கள் மூலம் அரிசி கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை அமெரிக்க போன்ற நாடுகளிலிருந்து
வரும் உணவை நம்பியிருந்தது, பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான், இந்திய நாடு உணவில் தன்னிறைவு அடைந்தது. இந்த மாற்றத்தின் விளைவாகவும் .

இரண்டாவது நிகழ்வு:

1991 இல், இந்திய பொருளாதாரம் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டதன் மூலமாக, ​​வெளிநாட்டு
முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது மற்றும் பொருளாதாரத்தில் வேகமான பல மாற்றங்கள் நடைபெற்றது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் வருமான அளவுகள் அதிகரித்தது, கார்போஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு நிறைந்த அதிக கலோரிகளை கொண்ட உணவு வகைகளும் சந்தையில் அதிகமாக புழங்கியது. இந்தியர்கள் இவ்வுணவு வகைகளை உட்கொள்வது தவிர்க்க முடியாமல் போனது. இந்த மாற்றங்களால் புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவு வகைகளை உட்கொள்வது குறைந்ததாலும், வேலைத்தன்மையில் ஏற்பட்ட மாற்றம் உடல் உழைப்பின்மை ஆகியவற்றாலும்.

அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent progressive diabetes?) type1 and type2 Diabetes - https://bookday.in/

உடல் பருமன் அதிகரிக்கும் விகிதங்கள் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் பரவல் அதிகரிக்க துவங்கியது. இன்று இந்தியாவின் முக்கிய நகர்புறங்களில், 20 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் 25% பேருக்கும், 50 வயதிற்குள் உள்ள பெரியவர்களில் 50% பேருக்கும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. கிராமப்புறங்களிலும் இது அதிகரித்துள்ளது.

தேவையற்ற கொழுப்பு (excess fat)

நீரிழிவு நோயைத் தூண்டுவது எது? அடிவயிற்றில், குறிப்பாக கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிதல் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் என்பதற்கான சான்றுகள் உள்ளன,. வெள்ளை அரிசி அல்லது சுத்திகரிக்கப்பட்ட கோதுமை போன்ற கார்போஹைட்ரேட்டு உணவு வகைகள் அதிகப்படியான கலோரிகளை கொண்டுள்ளதால் நீரழிவு நோய்க்கு முக்கிய காரணியாக திகழ்கிறது என்று மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மேற்கொண்ட (MDRF) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான கார்போஹைட்ரேட்கள் கொழுப்பாக மாறுகிறது, பின்னர் அது அடிவயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படுகிறது, வேகமாக கல்லீரல் பகுதி கொழுப்பால் நிரப்பப்படுகிறது, இது இன்சுலின் எதிர்ப்பிற்கும் வழிவகுக்கிறது. இதனால் கணையத்தில் கொழுப்பு குவிந்து, இன்சுலின் சுரப்பு குறைகிறது. இதற்கிடையில், புதிய நோய் தொற்றுக்கான காரணிகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent progressive diabetes?) type1 and type2 Diabetes - https://bookday.in/

வகை- 2 நீரிழிவு நோய்க்கு காற்று மாசுபாடு ஒரு முக்கிய காரணம் என்று புது டெல்லி மற்றும் சென்னையில் CARRS (CARDIO METABOLIC RISK REDUCTION IN SOUTH ASIA) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கிறது. காற்று மாசு ஒரு நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது அதாவது நேரடியாக இரத்தத்தில் கலந்து, கணையம் மற்றும் கல்லீரல் இரண்டையும் பாதித்து, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. நீரிழிவு நோய்க்கு நம்மை அதிகம் ஆட்படுத்தும் தனித்துவமான மரபணு காரணிகள் ஏதேனும் உள்ளதா?

இன்சுலின் குறைபாட்டிற்கு காரணமான மரபணுக்கள் ஐரோப்பியர்களை விட இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகின்றன என்பதற்கு புதிய சான்றுகள் உள்ளன. மரபணு வளர்ச்சி காரணிகளும் நீரழிவு நோய்க்கு பங்களிக்கக்கூடும். கர்ப்ப காலத்தில், ஊட்டச்சத்து குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு மற்றும் இரத்தத்தில் வைட்டமின் பி-9 அதிகமாக இருப்பதால், இது கருப்பைக்கு உள்ளே கருவின் நிரலாக்கத்தைத் (INTRAAUTERINE PROGRAMMING)தூண்டலாம் எதிர்காலத்தில் நீரிழிவு நோயை உருவாக்க வாய்ப்புள்ளது இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள், அளவில் சிறியதாக இருந்தாலும், அதிக கொழுப்பைக் கொண்டிருப்பதாக புனேவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், தெரிவிக்கிறது. இது "இந்திய மெல்லிய கொழுப்பு" என்று குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தின் சமீபத்திய ஆய்வுகள்,
தெற்காசியர்கள் ஏன் அதிக அளவில் அடிவயிற்றுக் கொழுப்பைக் குவிக்கின்றனர் என்பதற்கான
புதிய காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக தெற்காசியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆகியோர் அதிகப்படியான உணவை உட்கொள்கின்றனர், ஆனால் ​​ஐரோப்பியர்கள் கொழுப்பு மற்றும் தசை இரண்டு வகையான வளர்ச்சியையும் பெறுகின்றனர்., தெற்காசியர்கள் பெரும்பாலும் கொழுப்பை மட்டுமே பெறுகின்றனர். ஐரோப்பியர்களுடன் ஒப்பிடுகையில் தெற்காசியர்கள் கார்போஹைட்ரேட் உணவை அதிகரித்தும் கொழுப்பு திசுக்களை(ADIPOCYTES) கொண்ட உணவுகளையும் குறைத்துள்ளனர்.

ஐரோப்பியர்கள் அதிகப்படியான உணவை உட்கொண்டாலும் சிறிய வகையிலான கொழுப்பு திசுக்கள் கொண்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதால், ​​ஐரோப்பியர்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்புகள் படியாமல் வயிற்றுப்பகுதியின் மேல் கொழுப்பு படிவுகள் சேமிக்கப்படுகிறது. ஆனால்
தெற்காசியர்களில், அதிக அளவில் கார்போஹைட்ரேட் உட்கொள்வதாலும் சிறிய வகையிலான கொழுப்பு உணவுகளை குறைப்பதன் காரணமாகவும், மேலோட்டமான கொழுப்பு திசுக்கள் மிக விரைவாக அடிவயிற்றில் நிரப்பப்படுகின்றன, இதனால் கொழுப்பு அதிக அளவில் நிரம்பி வழிகிறது இது அடிவயிற்றுக்குள் நுழைந்து பின்னர் கல்லீரலுக்கும் செல்கிறது. இந்தியர்களுக்கு வகை-2 நீரிழிவு நோய் ஏன் அதிகமாக உள்ளது என்பதற்கு இதுவும்
முக்கிய காரணமாக திகழ்கிறது.

இந்தியாவில் நீரிழிவு நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

நாம் ஆரம்ப கட்டத்திலே இதற்கான முயற்சியை தொடங்க வேண்டும். திருமணத்திற்கு முன்பே, பெண்கள் எடையின் அளவை சோதித்து அதிகமாக இருக்குமெனில் குறைக்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும், இதன் மூலம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க முடியும். கர்ப்ப காலத்தில், போதுமான புரதம் மற்றும் நார்ச்சத்து, குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் போதுமான வைட்டமின் பி 12 ஆகியவற்றைக் கொண்ட சத்தான உணவு வகைகளை உட்கொள்ளும் போது குழந்தைக்கு நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் தடுக்கலாம். அடுத்ததாக, சிறு வயதிலிருந்தே, குழந்தைகளுக்கு உடல் சுறுசுறுப்பாக இருக்கவும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும் கற்றுக்கொடுக்க வேண்டும். இது குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமனை தடுக்க உதவும். உடல் ரீதியான செயல்பாடுகளை அதிகரிப்பது, போதுமான தூக்கத்தை உறுதி செய்வது மற்றும் காற்று மாசுபாட்டைத் தடுப்பது போன்ற காரணிகள் வழியாகவும் நீரழிவு நோயைக் குறைக்கலாம்.

அதிகரிக்கும் நீரழிவு  நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent progressive diabetes?) type1 and type2 Diabetes - https://bookday.in/

நீரிழிவு நோய்க்கு முந்தைய ஆரம்ப நிலையில் ஒருவேளை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து முற்றிலும் விடுபட வாய்ப்புள்ளது. அதனோடு ABCDயின் விரிவாக்கத்தையும் பின்பற்ற வேண்டும் அதாவது A1c, சராசரி இரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், இரத்த அழுத்தம்(BLOOD PRESSURE) சரியாக பராமரிக்கப்பட வேண்டும் கொலஸ்ட்ரால் (CHOLESTROL) நல்ல கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் ,உடல் ஒழுக்கத்தை (DISCIPLINE) பராமரிக்க வேண்டும் அதாவது சத்தான உணவு, உடற்பயிற்சி, சரியான தூக்கம் மற்றும் நீரிழிவு நிபுணர்களிடம் ஆலோசனை மற்றும் சோதனை ஆகியவற்றை முறையாக பின்பற்றும் போது நீரிழிவு நோயின் ஆபத்தான
பாதிப்புகளை நாம் தடுக்கலாம்.

நவம்பர் 14 அன்று கொண்டாடப்பட்ட உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, “நீரிழிவு சிக்கல்கள் இல்லாத இந்தியாவை” உருவாக்க பாடுபடுவோம். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் இது சாத்தியமாகும்.

17-12-24 அன்று ஆங்கில இந்து பத்திரிகையில் வெளியான கட்டுரை

-டாக்டர் மோகன்
நீரழிவு சிறப்பு மையம், சென்னை.

தமிழில்: மோசஸ் பிரபு

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *