ஒவ்வொரு மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் ஊடகங்கள் சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்குவதில் இருக்கக் கூடிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் தொடர்ச்சியாக என்ன விதமான முன்னெச்சரிக்கைகளை எடுக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பினும், இந்தியாவினுடைய பொது சுகாதார கட்டமைப்புகள் இதுபோன்றவற்றை எதிர்கொள்வதற்கு கொஞ்சமும் போதுமானதாக இல்லை.
‘ஒவ்வொருவரும் ஒரு பஞ்சத்தை விரும்புகிறார்கள்’ என்கிற தனது புத்தகத்தில் மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத் மிகவும் சிரமப்பட்டு அரசு மருத்துவமனைகளை ஏழைக்குடும்பங்கள் எப்படி சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை பட்டியலிட்டிருக்கிறார்.
1994ம் ஆண்டில் இந்தியாவில் பரவிய பிளேக் நோயைப் பற்றி இந்திய ஊடகங்கள் மிகப் பெரிய அளவிற்கு கவனம் செலுத்தியதை குறிப்பிட்டு அப்படி கவனம் செலுத்தியதற்கு ஒரு காரணத்தையும் அவர் முன்வைக்கிறார். இதர நோய்களைப் போல அல்லாமல் அது கிராமப்புறத்தை மட்டுமோ அல்லது நகர்புறத்தின் சேரிகளையோ மட்டும் தாக்கவில்லை. அந்த நோய்க்கான பாக்டிரியா வசதி படைத்தவர்களையும் தாக்கும் வல்லமை கொண்டதாக இருந்தது. சாய்நாத்தின் வார்த்தைகளில் சொல்வதானால் “இதில் மிகவும் மோசமானது என்னவெனில் இந்த பாக்டிரீயாக்கள் விமானத்தில் ஏறி உயர்ந்த வசதி படைத்தவர்களோடு நியூயார்க்கு செல்ல முடியும். மிகவும் அழகான பல மனிதர்களின் பலரும் கூட இந்த நோயை பாதுகாப்பு குறித்து கவலையடைந்தனர்.” கொரனோ பிளைக்கை விட மிகவும் அபாயம் குறைந்தது என்கிற போதும் நோய்த்தொற்று உள்ள நாடுகளிலிருந்து இந்தியா வந்த பயனிகளால் கொண்டுவரப்பட்டது. இதன் பொருள் இந்த நோய்களை குறைத்து மதிப்பிடுவது அல்ல. மாறாக, இந்தியா இந்த நோய்களை கையாள்வதில் சமூக மற்றும் வர்க்க நிலைபாடுகளிலிருந்து எப்படி கையாள்கிறது என்பதை பற்றி கவனிப்பதாகும்.
கொரோனா பரவல் ஒரு வித்தியாசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவ வசதிகளை பயன்படுத்துபவர்களுக்கு வாய்ப்புள்ளவர்களும் கூட தற்போது அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துவதும், அங்கு பரிசோதித்துக் கொள்வதும், அரசு மருத்துவமனைகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதும் நடைபெறுகிறது. இந்தியாவில் பல பகுதிகள் கடந்த பல பத்து வருடங்களாக எதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு கொரோனா போன்ற நோய்கள் வந்த பிறகு தான் சாத்தியம் இருக்கிறது. ஆக்ரா பெண் ஒருவரைப் பற்றிய செய்தியை நாம் அனைவரும் அறிவோம். அவர் தனிமைப்படுத்துதிலிருந்து ஓடிவிட்டதாக தவறாக செய்திகள் சொல்லப்பட்டது. உண்மையில் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் எதிர்த்து இருக்கிறார். “பொது கழிவறை இருந்த சுகாதாரமற்ற நிலை அதை பார்த்ததும் குமிட்டிக் கொண்டு வந்ததாக சொல்லியிருக்கிறார். இது மருத்துவத்திற்கான செலவழிக்கப்படும் குறைந்த தொகை பற்றிய பொருத்தமான முறையீடு தான். அதே போன்று மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு தரப்பிலிருந்து போதுமான உத்வேகமளிக்காததும் காரணமாகும். பொது மருத்துவமனைகளில் ஒரு செயல்படும் சுகாதாரமான கழிவறைகளும் உத்தரவாதப்படுத்த முடியாத நிலையில் தான் கொரோனா சவாலை எதிர்கொள்ளும் நிலையில் இந்திய பொது சுகாதார நிர்வாகம் இருக்கிறது.
கேரளா எப்படி எதிர்கொண்டது
இந்தியாவில் பொது சுகாதார நிலைமைகளின் பின்னணியை கொரோனா போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்வதில் கேரளா பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. சுகாதார கட்டமைப்புகளானதும் நிப்பா வைரஸ் போன்றவற்றை எதிர்கொண்ட அனுபவமாகட்டும் இவையெல்லாம் கொரோனாவை எதிர்கொள்வதில் கேரள அரசாங்கம் இதர மாநிலங்களை விட தயார் நிலையில் இருப்பதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. கொரோனாவை எதிர்கொள்வது குறித்த விவாதங்கள் கேரளாவில் ஜனவரி மாத மத்தியிலேயே துவங்கி விட்டன. பல நாடுகள் தங்கள் நாடுகள் பாதிக்கப்பட்டதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் கேரளா தான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை உருவாக்கியது. ஜனவரி 30ந் தேதி முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதுமுதல் அரசாங்கம் கூடுதல் விழிப்போடு இருந்து முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை நோய்களை பெற்றிருந்தவர்களோடு தொடர்புடையவர்களை கண்டறியவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது.
இத்தாலியிலிருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் கேரளாவுக்கு வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமானது. 719 நபர்கள் அந்த குடும்பத்தோடு தொடர்பு கொண்டு இருப்பதாக கண்டறிந்தது. அதன் பிறகு அரசு வெளிநாடுகளிலிருந்து திரும்பும் மக்களுக்கான கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கியது. தங்களது பயண வழிகளை வெளிப்படுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முதல்நிலை, இரண்டாம் நிலை நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள் அல்லது வீடுகளில் தனிமைப்பட்டிருக்க வைக்கப்பட்டார்கள். அடுத்த நடவடிக்கை பெரிய மத விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அரசு கண்காணிப்பில் உள்ள நபர்களின் பட்டியலை வெளியிட்டது. பிறகு மாநிலத்தில் உள்ளே நுழைவதற்கான வெவ்வேறு இடங்கள் மூலமாக வருகிறவர்களை அரசு பரிசோதனை செய்தது. எல்லா சோதனைச் சாவடிகளிலும் மருத்துவ பணியாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். மாநிலத்திற்குள் உள்ளே நுழைவதற்கு முன்பாக கொரோனாவுக்காக அவர்கள் பரிசோதிக்கப்பட்டார்கள். இதேபோன்று ரயில்கள் நுழையும் இடங்களிலும் இந்த சோதனை செய்யப்பட்டது.
சீனாவும் தென்கொரியாவும் நமக்கு இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு ஒரு பாடத்தை கற்றுத் தந்திருக்கின்றன. இத்தகைய நிலையை எதிர்கொள்வதற்கான மிக முக்கியமான செயல் வாய்ப்பிருக்கும் கொரோன தொற்ற வாய்ப்பிருக்கும் நபர்களை கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே அது. தென் கொரியா எதையும் மூடாமலையே இதை எதிர்கொண்டது. அவர்களுடைய வெற்றி விடாப்பிடியான பரிசோதனைகளை செய்வதில் அடங்கி இருந்து இருக்கிறது. இதைத்தான் வல்லுநர்கள் சிறந்த உதாரணமாக காட்டுகிறார்கள்.
இத்தகைய பரிசோதனைகளை செய்வதற்கே நாம் மிகவும் சிரமப்பட வேண்டியது இருக்கிறது. கேரளாவில் இதர மாநிலங்களைவிட சிறப்பான ஏற்பாடுகளும் எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கைகளும் இருந்தபோதும் கூட பரிசோதிப்பதற்காக சோதனைக் கூடங்கள் போதுமான அளவிற்கு இல்லை. இத்தகையச் சூழலில் இருக்கும் வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்துவதும் பரிசோதனைகளை உள்ளூர் அளவிலேயே செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். இவற்றைச் செய்வதற்கு மிகத் தெளிவான அரசியல் உறுதி வேண்டும். அதேபோன்று வலிமையான பொது சுகாதார சேவை இருக்க வேண்டும். அதேபோன்று மக்களிடம் இதை எதிர்கொள்வதற்கான உறுதிப்பாடு இருக்க வேண்டும்.
மக்களைப் பொறுத்தமட்டில் அரசு முன்வைக்கிற நடவடிக்கைகளை பின்பற்றுகிற நடைமுறை மிக முக்கியமானது. இதில் மிக முக்கியமானது மக்கள் குறிப்பான தேவை இருந்தால் தவிர உங்களைப் பரிசோதித்து கொள்வதற்கு முண்டியடித்துக் கொண்டு செல்லக்கூடாது. அப்படி செல்வார்கள் ஆனால் தேவையானவர்களுக்கு பரிசோதனை நடப்பது சிரமமாகிவிடும். இதை உறுதிப்படுத்துவதற்காக கேரளா அரசாங்கம் ஜி.ஓ.கே. டைரக்ட் என்கிற செயலியை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த செயலி மூலம் மக்கள் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது தொற்று நோய் அறிகுறிகள் இருந்தால் எங்கு அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும், சரியான காலம் எது என்பதைப் பற்றிய விவரங்கள் இதில் கிடைக்கும். திஷா ஹெல்ப்லைன் இத்தகைய விழிப்புணர்வை ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. தொடர்பை துண்டியுங்கள் என்கிற பிரச்சாரம் அடிப்படையான சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பற்றிய செய்திகளை பிரபலப்படுத்துகிறது. இந்த முயற்சிகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வருவதிலும் வெற்றி பெற்று இருக்கிறது.
இவையெல்லாம்தான் தேசிய ஊடகத்தின் கவனத்தை கேரளாவின் பக்கம் திருப்பி இருக்கிறது. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும், சமூக ஒதுங்கி இருத்தல் நடைபெறுவதற்கும் சில காலம் ஆகலாம். இந்த காலத்திற்குள் மாநில அரசாங்கம் பரிசோதிப்பதற்காக ஏற்பாடுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படி செய்கிறபோது எந்த இடத்தில் நோய்த்தொற்று அதிகமாக இருக்கிறதோ அந்த இடங்களில் கூடுதல் கவனத்தை செலுத்த முடியும்.
இந்தச் சூழலில்தான் மாநில அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஐ சி எம் ஆர் கேரளாவிற்கு 10 பரிசோதனை நிலையங்களை அங்கீகரித்திருக்கிறது. அரசும் இதுபோன்ற சோதனை நிலையங்களை தனியார் ஒத்துழைப்புடன் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேரளா இத்தகைய முன்னேற்பாடாக செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு அரசின் முயற்சி குறிப்பாக, பொது சுகாதாரத் துறையினுடைய முயற்சி வாய்ப்பாக அமைந்திருந்தது.
அரசு நிர்வாகம் பொது சுகாதார சேவைகளை வலுப்படுத்த செய்து கொண்டிருந்தது. இது பொதுசுகாதார கட்டமைப்பை விரிவு படுத்துவதில் பிரதிபலித்தது. உதாரணமாக, நிஃப்பா வைரஸ்களை எதிர் கொள்வதில் ஏற்பட்ட அனுபவத்தால் ஆலப்புழாவில் தேசிய வைராலஜி நிறுவனம் உருவாக்கப்பட்டது.
மாநிலத்தில் சமீபகாலத்தில் தொற்றுநோய்களையும், தொற்று அல்லாத நோய்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அதிகமாயிருக்கிறது. சமீப காலத்தில் தொற்று நோய் பரவல் அடிக்கடி நடைபெறுகிறது. இதை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முறை வெற்றிகரமானதாக இருக்கிறது. இது சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நோய்களை கண்டறிவதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் வாய்ப்பளித்து இருக்கிறது.
பொது சுகாதார ஏற்பாடு கேரளாவைப் பொருத்தமட்டில் பரவலாக்கப்பட்டு இருக்கிறது. இது சேவைகளை உடனடியாக பெறுவதற்கு வாய்ப்பை அதிகரித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியே கொரானா வைரசை, அதனால் பாதிக்கப்பட்ட தனி நபர்களை உடனடியாக கண்டுபிடிப்பதற்கும், ‘சங்கிலித் தொடர்பை துண்டியுங்கள்’ என்கிற பிரச்சாரம் வெற்றி பெறுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களை, குடும்ப சுகாதார நிலையங்களாக மாற்றுவதற்கான ‘ஆதிரம் மிஷன்’ மூலம் உட்கட்டமைப்புகளையும் அவற்றின் திறமையான சேவைகளையும் மேம்படுத்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு பொது சுகாதாரத் துறையை மீண்டும் சிறப்பானதாக அமைப்பதற்கான முயற்சிகளை கேரளா வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது.
(இன்றைய தி இந்து நாளிதழிலில் வந்த கட்டுரையின் அவசர மொழி பெயர்ப்பு இது. ஆங்கிலம் தெரிந்தோர் https://www.thehindu.com/opinion/op-ed/how-to-handle-a-pandemic/article31136612.ece என்கிற சுட்டியில் சென்று ஆங்கிலத்திலேயே வாசிக்கவும்.)
தமிழில்: Kanagaraj Karuppaiah