நம்ம பாப்பா/மனிதக் கரு – 7வது வாரத்திலிருந்து- 9வது வாரம்வர
மனிதத் கரு 6 வது வாரத்தில், தலையில் இருந்து வால்வரை..1.0 செ.மீ நீளம் இருக்கும். இது வரை நிஜமாகவே மனித கரு மற்ற பாலூட்டிகள் போல வாலுடன்தான் இருக்கும்.அட நெசந்தான்பா. ஆனால் ..இது ஆச்சரியமான விஷயம்தானே. மனித இனம் பரிணாமத்தின் காலகட்டத்தில் மீன், ஊர்வன, பாலூட்டிகள் போன்றவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற பின்னரே, மனிதனாக பரிணமித்தது என்பதற்கு மனிதக் கருவின் வளர்ச்சிநிலைகள் உண்மையை நிலைநாட்டும் சான்றாகும்.ஆறாது வார கருவின் தலைப்பகுதி குழந்தையின் தலை போலவே இருக்கும். மற்ற பகுதியை ஒப்பிடும் போது தலை மிகப் பெரியதாக இருக்கும். இந்த காலகட்டங்களும் மாற்றங்களும் மிகவும் அதிசயமானதும், அற்புதமானதும் கூட..
7 வது வாரமும்..மூக்கு குழியும்..
7வது வாரம் கருவின் நீளம் 10 மி.மீ.(1. செ.மீ ) சைஸ்…அதுதான்,தலையிலிருந்து வால்வரை நீண்டு. இப்போது மனிதரக் கரு ஒரு ப்ளூபெர்ரி அளவு /சின்ன கருப்பு திராட்சை அளவு தான் இருக்கும்.. பெருமூளை வெகு வேகமாக, உடலை விட வேகமாக வளரும்.கருவின்தலைப்பகுதியில்) பெரிதாக இருக்கும் கண்களும் காதுகளும் வளர ஆரம்பிக்கும். மூக்குகளுக்கான குழிகள்/பள்ளம் பார்க்க நன்றாகவே தெரியும் கண்ணின் ரெட்டினா வளரத் துவங்கும். கால்களின் அமைப்பு ஒரு மொட்டாகவே தெரியும். ஆனால் கைகளில் மொட்டுக்களில் விரல் மடிப்புகள், ஒரு பஞ்சு மெத்தையில் குட்டி குட்டி முத்துகள் ஒட்டியது போலவே தெரியும். விரல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும். எல்லாம் இத்தனூண்டு புளூபெர்ரி பழ அளவுக்குள்ளேயே . .ஏழாவது வாரத்தில் உங்க பாப்பா/கரு கிட்டத்தட்ட தவளையின் தலைப்பிரட்டை/ கடல் குதிரை போல இருக்கும்.
உட்காது வளர்ச்சி
இப்போது உட்காதுகள் வளர துவங்கும். ஆனால் வெளியே பார்ப்பதற்குத் தெரியாது. தெளிவாக தெரியாமல் இருக்கும் இரண்டு வாரத்திற்கு பின் வெளிக்காதும் தலைப்பகுதியின் இரண்டு பக்கமும் தெரியத் துவங்கும். கை மற்றும் கால்களின் மொட்டுக்களின் கீழே எலும்புகளுக்கு முன் அவை குருத்தெலும்பாக (cartilage ) உருவாக ஆரம்பிக்கும் பின்னர் இவைதான் கை, கால்களின் எலும்புகளாக மாற இருக்கின்றன. கை கால்களில் மொட்டுக்கள.. நீண்டு வளரும். முடிவில் அவை குட்டி மெத்தை போல தட்டையாக இருக்கும்..
நரம்பு செல்கள் வேகமாக வளர்ந்து திரியும் இவை மூளையாக உருவெடுக்கும். மூளையிலிருந்து தண்டுவடம் கீழ்நோக்கி செல்லும் இதுதான் முதுகுக்கு வலுவையும், அழுத்தமான நேர்நிலையையும் கொடுக்கிறது..
மனிதக் கரு உள்ள கருப்பை குட்டி எலுமிச்சம் பழம்/ஸ்ட்ராபெரி பழம் அளவில் இருக்கும். இப்படி இவங்க குட்டி பாப்பா ஆகப் போற கரு ஜாலியா வேக வேகமா வளரும்போது அம்மாவின் நிலையோ பாவமாக இருக்கும். அப்போது அம்மாவுக்கு மிகவும் களைப்பாக இருக்கும் மார்பகம் கொஞ்சம் பெரியதாக வளரும்; மார்பகங்களில் புண் ஏற்பட்டது போல எரிச்சலும் தெரியும். கரு வளர வளர அம்மாவுக்கு அடிக்கடி சிறுநீர் வரும்.
இவையெல்லாம் மனிதக்கரு உருவாகும் காலத்தில் உண்டாகும் சின்ன சின்ன பிரச்சனைகள் தான். போகப் போக இது சரியாகிவிடும்.இவையெல்லாம் சந்தோஷ கணங்களின் துவக்கம். இந்த காலகட்டத்தில் அம்மாவுக்கு வயிற்றைப் புரட்டும்; வாந்தியும் ஏற்படும் இதை மார்னிங் சிக்னஸ் என்று சொல்வார்கள் இது கிட்டத்தட்ட மூன்று மாதம் வரை தொடரும்..சில சமயம் அம்மாவுக்கு கருவுற்றிருக்கும் போது பற்களில் இருந்து ரத்தம் வரும் அம்மா கவனத்துடன் பல் டாக்டரை பார்த்து பல்லை சரி செய்ய வேண்டும்.
8வது வாரம்..
8 வது வாரத்தில் மனிதக்ககரு ஒன்னேகால் இன்ச் நீளம் இருக்கும் இது ஒரு ஆலிவ் விதை அளவுடைய சைஸ் ஆகும். எட்டு வாரம் முடிந்ததும், கருவுக்குள் நிறைய மாற்றங்கள் உண்டாகின்றன. மனிதனின் உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளும் உருவாகத் துவங்கின்றன. எட்டாவது வாரத்தில் காலம் கையும் நீளமாக பெரிதாக வளர்வது தான் மிக ஆச்சரியமான விஷயமாகும். அவைகளின் விரல்களும் கூட உருவாகி இருக்கின்றன அவை மெத்தைகள் போல் இருக்கின்றன குட்டி குட்டி கால் விரல்கள் குட்டி குட்டி கை விரல்களும் பார்க்க மிக அழகாக ரோஸ் நிறத்தில் இருக்கின்றன பஞ்சு மெத்தையில் இருந்து முளைத்த மல்லிகை மொட்டுக்கள் போலவே விரல்கள் தெரிகின்றது முக்கியமாக கண்களும் காதுகளும் வாயும் நன்றாக வளர்ந்து பார்த்த உடன் தெளிவாக அடையாளம் காண முடியும். இப்போது இதயம் மற்ற பணிகளைவிட வேகுவேகமாகவே பணி செய்ய துவங்கியாயிற்று. இப்போது இதயம் நான்கு அறைகள் கொண்டதாக உருவெடுத்து விடுகிறது. வேறு எந்த உறுப்பும் இவ்வளவு வேகமாக .வளரவில்லை என்பது ஆச்சரியம்தானே..இந்த காலம் வரை இந்த கருவுக்கு குட்டியூண்டு வாலும் இருக்கிறது. இந்த வால்தான் பின்னர் நமக்கு முதுகெலும்பின் வால் எலும்பாக (Coccyx Coccyx )மாறுகிறது.. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த வால் ஓடியே போச்சே. எங்கே..இந்த உறுப்பு மட்டும்தான் கருவில் உருவம் குறைவது. நீளம் குறைந்து சிறிதாகி மறைந்து எலும்புடன் ஐக்கியமாகிறது. மற்ற உறுப்புகள் அனைத்தும் வெகு வேகமாக வளர துவங்குகின்றன..
கருவுற்ற ஆறு வாரம் – எட்டு வாரங்களுக்கு பிறகு அதாவது 56 நாட்கள் அல்லது இரண்டு மாதங்கள்..எனப்படும்.
எட்டாவது வாரத்தில் கை விரல்கள் கால் விரல்களும் இணைந்து ஒரு பேட் போல தெரியும் கண்ணிமை நன்றாக மூடிவிடும். கருவின் குட்டி வால் முழுமையாக மறைந்து விடும் கழுத்தில் இருந்து சுவாசிக்க ஒரு குழாய் உருவாகும் அது இரண்டாக பிரிந்து இரண்டு பக்க நுரையீரலாக மாற ஆரம்பிக்கிறது. நரம்பு செல்கள் மூளையில் உருவாகி அதில் ஒன்றை வந்து இணைத்து ஒரு நியூரல் நெட்வொர்க் உண்டாகும். பாலின வேறுபாட்டு உறுப்புகள் இன்னும் உருவாகவில்லை ஆனால் பாப்பா தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறார் இருந்தாலும் உங்களால் பாப்பாவை உணர முடியாது அது ஒரு அவரை விதை அளவுக்கு தான் இருக்கும்..
அம்மாவின் உடல் மாற்றம்
இப்போது அம்மா அணிய பெரிய பிரா தேவைப்படும்.ஏனென்றால் அம்மாவின் மார்பகம் விரிவடையும. அம்மாவின் உடலில் உள்ள ஹார்மோன் செயல்பாடுகள் மூலம் ஏராளமான மாற்றங்கள் விளையும் இன்னும் .இரண்டு மாதங்களுக்கு மார்பகம் பெரிதாகும் அம்மாவின் உடலில் உள்ள புரோஜெஸ்டிரான் (Progesterone) என்ற ஹார்மோன் அளவு அதிகரிக்கும் .அம்மா இதனால் சோர்வாகவும் களைப்பாகவும் இருப்பீர்கள். இந்த ஹார்மோனால் அம்மாவுக்கு வயிற்றுப் புரட்டலும் தலை சுற்றலும் வாந்தியும் ஏற்படும் தூங்குவதற்கு கூட கஷ்டமாக இருக்கும்.. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதால் தூக்கமும் தடைப்படும்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் டாக்டரிடம் சென்று சோதனை செய்து கொள்ளலாம்..
பன்னிரண்டாவது வாரம் வரை முதல் டிரைமேஸ்ட்டர் காலம் என்று சொல்வார்கள் இந்த காலகட்டத்தில் சில ரத்த பரிசோதனைகளையும் உடல் பரிசோதனைகளையும் செய்து கொள்ள வேண்டும் .அம்மாவுக்கு ரத்த சோகை இருக்கிறதா ரூபெல்லா/ ஜெர்மன் தட்டம்மை.எதிர்த்து போராடும் சக்தி இருக்கிறதா எச்ஐவி பாதிப்பில் இல்லையா என்பதெல்லாம் அம்மாவுக்கு இந்த காலகட்டத்தில் சோதனை செய்வார்கள் இதற்கான தனியான ஸ்கேன் உள்ளது
9 வது வார துவக்கத்தில்.. மனித உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளும் உருவாகத் துவங்கிவிடும் உங்கள் பாப்பாவின் இதயம் ஒரு ஒழுங்கான துடிக்க துவங்கிவிடும்;ஒழுங்கான தாள கதியில் துடித்து இசைக்கத் துவங்கி விடும். கைகளும் கால்களும் இப்போது நன்றாக நீளமாக வளர்ந்து விடும். கை விரல்களும், கால் விரல்களும் தனித்தனியாக பிரிந்து உருவாகத் துவங்குகின்றன அது மட்டுமா? அடுத்த அதிசயம் என்ன தெரியுமா? இப்போது பாலின உறுப்புகளும் கூட உருவாகிவிடும்.அவற்றை லேசாக அடையாளம் காண முடியும்.ஆனால் பார்த்தல் தெரியாது .கண்கள் முன்னோக்கி நகர்ந்து முகத்தில் பதிந்திருக்கும.. கண் இமைகள் மிக அழகாக சன்னமாக உருவெடுக்கும்.. மனித கருவின் நஞ்சுக்கொடியை (PlacentaPlacenta placenta) நன்றாக காண முடியும் எட்டு வார முடிவிலேயே உங்கள் பாப்பா கிட்டத்தட்ட மனித உருவத்tதுக்கு வந்துவிடுவார். இப்போது கருவறையில் உள்ள பாப்பாவின் நீளம் ஒரு இன்ச்/ 2.3 செ.மீ.. .எடை 1/8 அவுன்ஸ்../2 கிராம்.
அம்மாவுக்குள் . எட்டாவது வாரம் வந்தாலும் கூட அம்மாவை பார்க்க கருவுற்றவர் போல் தெரிய மாட்டார் ஆனால் அம்மாவின் உடல், உடலுக்குள் அந்த உணர்வு தெரியும், அது உருவாகும்.. அம்மாவுக்கு மார்னிங் சிக்னஸ் வரும் அதுதான் பிரச்சனைக்குரியதாகும்
9வ து வாரம்
9 வது வாரம் ஆனதும் உங்கள் பாப்பா Embryo என்னும் நிலையிலிருந்து Foetus /மனித கரு என்ற நிலைக்கு உயர்ந்து விட்டார். பாப்பா வின் கால் கைகள் நீளமாக இருக்கும். கால் விரல்கள் துல்லியமாக பிரிந்து இருக்காது, கொஞ்சம் ஒட்டிக்கொண்டு திரியும், ஆனால் இது கால் .முட்டிக்கு மேல் , அதவது தொடைப்பகுதி நீளமாக இருக்கும். கணுக் கால்கள் தெரியும் ;தொடை தெரியும் ;கால் விரல்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் கரு இப்போது முழுமையாக இருக்கிறது.ஆனால்அது நஞ்சுக்கொடியுடன் இணைத்துக்கொண்டு இருக்கிறது. இதன் மூலம் தான், அதாவது placenta மூலம் தான கருப்பை சுவரில் கரு ஒட்டி இருக்கிறது. . இந்த பருவம் வரை கருவுக்கு அதனுள் இருக்கும் , yolk sac என்ற அப்பகுதியிலிருந்து தான், அதாவது கோழிமுட்டையின் மஞ்சள் கரு போன்ற பகுதியாகும். இதிலிருந்துதான் இதுவரை, அதாவது 9 வது வாரம் வரை கரு அது வளர்வதற்கான உணவை பெற்றுக்கொள்கிறது. இதுவரை கரு அம்மாவிடமிருந்து உணவு பெறுவது கிடையாது. இனிதான் நஞ்சுக்கொடியிடமிருந்து உணவை .அம்மாவின் வழியே உணவையும், ஆக்சிஜனையும் பெறும்..
உங்க பாப்பா அல்லது கரு இப்ப 2.2 செ.மீ. நீளத்தில் இருக்கிறார்கள் இது ஒரு ஸ்ட்ராபெரி அளவுதான். கண்களை இமைகள் மூடி இருக்கின்றன வாய் லேசாக குழியாக வாய் அழகாக இருக்கிறது.அடடா இப்போது நாக்கும் உருவாகிவிட்டதே. அது மட்டுமா. நாக்குடன், அதன் சுவைய்ரும்புகளும். சின்ன சின்ன குட்டியூண்டு மொட்டுக்களாகவே உருவாகிக் கொண்டிருக்கின்றன. இப்ப உங்க பாப்பா/ மனிதக் கரு இப்படியே 9 வது வாரத்துக்கு ஓடியாந்துட்டாங்க..
அம்மாடியோ..இப்ப பாப்பா கருவின் இமைகள் கண்ணை பாதிதான் மூடுகின்றன. அட கண்ணில் கருவிழிக்கு இப்போது கருப்புக்கலர் வந்துவிட்டது.கண் கருப்பாக இருக்கிறதே..குட்டியூண்டு மூக்கு சின்ன மொட்டு போல் தெரிகின்றது. அதன் மேல் சின்ன சின்ன இரத்த நாளங்கள் அதற்கடியில் வருகின்றனவே. எங்கிருந்து இரத்தம் வருகிறது . ஆஹா இதயம் துடிக்கத் தொடங்கி உடம்பின் எல்லா இடத்துக்கும் இரத்தம் அனுப்பத் துவங்கிவிட்டார் ஓய்வில்லா உழைப்பாளியான இதயம். . இந்த இரத்த நாளங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன.. பாப்பா மூளையினுடைய இரண்டு பகுதிகளும் வேகமாக வளர்கின்றன இப்போ கல்லீரல் உருவாகி வந்துவிட்டது. இப்போது கல்லீரல்தான் இரத்தத்தின் சிவப்பு ரத்த செல்களை உருவாக்குகின்றன..ஆச்சரியமாக இல்லையா? பாப்பா கருவில் கல்லீரல்தான் சிவப்பு ரத்த செல்களை உருவாக்குகின்றன கருவின் எலும்பு மஜ்ஜை வளரும் வரை.அவை இரத்த செல்களின் உற்பத்தியில் பங்கு பெறும் வரை அல்லது பொறுப்பு எடுக்கும் வரை. இவைதான் சிவப்பு ரத்த செல்களை உருவாக்கிக் கொடுக்கின்றன. பின்னர் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை இந்த பணியை தானே எடுத்துக்கொண்டு செயலாக்குகிறது.. எவ்வளவு இயற்கையின் அற்புதமான பணிமாற்றல் செயல்பாடு. .
கணையம் மற்றும் குடல்வால்
இதோ பார்த்தீர்களா, இப்போது கணையமும் குடல்வாலும் கூட உருவாகிவிட்டனவே இப்போதிலிருந்து கணையம் கொஞ்சம் கொஞ்சமாக இன்சுலினை சுரக்க துவங்குகின்றது. எம்புட்டு அதிசயம் பார்த்தீர்களா? இத்தனூண்டு மனிதக்கரு 2செ.மீ நீளம் மட்டுமே உள்ளது என்னென்ன மேஜிக் வேலை எல்லாம் செய்கிறது என்றால் இயற்கையின் சித்து விளையாட்டுதானே. இந்த 2 செ.மீ நீள கருவுக்குள் கணையம் ,அதன் சுரப்பி இன்சுலின், அதன் சீரண செயல்பாடு. என்ன என்ன நினைக்கவே பிரமிப்பாக உள்ளதே. அது தன்னுடைய சீரண வேலை முறையை இப்போதிலிருந்து தொடங்கி விட்டது ஆச்சரியம் தானே .எட்டாவது வாரத்திலேயே சீரணத்திற்காக மனிதர்கள் குட்டி பாப்பா ரெடியாகறாங்க இங்கே வயிற்றுப் பகுதியில் ஒரு சின்ன வளையம் உண்டாகிறது அதுதான் பின்னாடி நீண்டு தொப்புள்கொடியாக வரப்போகிறது தொப்புள் கொடியை இணைக்கும் அந்த பகுதி இது இதன் மூலம் தான் பாப்பாவுக்கு உணவு அம்மாவிடமிருந்து வரப்போகிறது. உணவும் ஆக்சிஜனம் அம்மாவிடமிருந்து வரப்போவது இதன் மூலம்தான். அம்மாவின் மாற்றங்கள்
கருப்பையில் இருக்கும் குட்டி பாப்பா அல்லது மனிதக் கரு, வளர வளர அம்மாவுக்கும் கருப்பைக்கும் ஏராளமான மாற்றங்கள் உண்டாகின்றன கருப்பை முன்பை விட இரண்டு மடங்கு அளவு பெரிதாகிறது அதனால் அம்மாக்காரங்க மிகவும் களைப்படைகிறார். பாப்பாவுக்கு சேர்த்து அதிகமாக உணவுஉண்ண வேண்டியிருக்கிறது.
அம்மாவின் ரத்தம் அதிகரிப்பு
நீங்கள்/அம்மா பாப்பாவுக்கு ரத்தம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் அம்மாவின் உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது சிறுநீரகத்தின் வழியாக கூடுதல் திரவம் செலுத்தப்படுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழலும் உண்டாகிறது. இந்த காலகட்டத்தில் அம்மாவின் ரத்தம் முன்பு இருந்ததை விட 10 % அதிகரிக்கும்.. கருக்காலம் முடியும் தறுவாயில் அம்மாவுக்கு 40%-45 %வரை அதிகமாக ரத்தம் இருக்கும். ஏனென்றால் அந்த ரத்தம் தான் உங்கள் குழந்தையின் முழுத் தேவைகளின் பூர்த்தி செய்யப் போகிறது இவைகள் ரத்த குழாய்கள் வழியாக தொப்புள் கொடி வழியாக கருப்பைக்கு செல்வதால் சிறுநீர்ப்பையின் அழுத்தம் ஏற்படுவது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுகிறது ஏற்படுகிறது..அம்மாவின் வயிறு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளருவது போல தெரிகிறது. பாப்பா உட்கார்ந்து இருப்பதால் வயிறுப்பகுதி மேடாகிறது. .
9வது வாரம்..
மார்பகம் பெரிதாகும் இடுப்பின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாக விரியும். அம்மாவின் கருக்கால ஹார்மோன்கள் உடலுக்குள் வேகமாக வளரும் அது அம்மாவை இன்னும் கூட சுகவீனமாக்கும் ஆனால் இது கடைசி வரை இருக்காது இரண்டாவது trimesterTrimesterவந்தவுடன் அனைத்தும் குறைந்து விடும்இதுதான் குழந்தை பிறப்பு என்னும் சொர்க்கத்தின் துவக்க விழா.
HCG ஹார்மோன்(Human Corionic Gonadotrophin ) எப்போதும் கருக்காலத்தில் அதிகமாக சுரக்கும், 9 வது வாரம் அதன் சுரப்பு உச்சத்தில் இருக்கும் மற்ற ஹார்மோன்களும் எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் போன்றவை கூட அதிக அளவில் இருக்கும் இதன் மூலம் கருப்பைக்கு அதிகளவு ரத்த ஓட்டம் ஏற்படும் கருப்பை அதிக ரத்தத்தை பெறும் இந்த காலகட்டத்தை emotional roller coaster என்று சொல்லுகின்றனர்.
அம்மாவின் உடலில் மாற்றங்கள், சோர்வு ..
ஒன்பதாவது வாரம் என்பது அம்மாவுக்கு கடினமான காலகட்டம்தான். இப்போது அம்மாவுக்குள்ளும் நிறைய மாற்றங்கள் ஏற்படும் அம்மாவுக்கு அதிகமான களைப்பு, சோர்வு, வாயில் உலோகச் சுவை, மார்பக எரிச்சல் தலைவலி, உணவு பிடிக்காது, வாசனை பிடிக்காது, பிறப்பு உறுப்பில் இருந்து வெள்ளையான திரவம் வெளியேற்றல் அவ்வப்போது ரத்தமும் வெளியேறுதல் கால் கை பிடித்துக் கொள்ளுதல போன்ற பல்வேறு சின்ன சின்ன பிரச்சினைகள் அம்மாவுக்கு வரும். உடலில் வேறு ஒரு அந்நியப் பொருள் இருப்பதால், உடல் எதிர்க்கும் விஷயம்தான் இது. வலி ஏற்படுதல் முகம் கருத்து போதல் நிறமாற்றங்கள் முடியும் மாற்றங்கள் போன்றவை ஏற்படும்..
ஒன்பதாவது வாரத்தில் மூக்குத் துளைகள் மேல் உதட்டுக்கு மேல் உருவாகிறது உருவாகிறது. வாயும் அதற்குள் குட்டிநாக்கு இருக்கும் அதில் சுவை அரும்புகள் முன்னாடியே உருவாகி இருக்கும். இப்போது பாப்பா, அம்மாவின் கருப்பைக்குள் சுற்றி வரும். அவருக்கு தொடுதல் உணர்வை அவர்கள் நன்றாகவே உணர்வார்கள். ஆனாலும் கூட இன்னும் பல வாரங்கள் கழித்து தான் அம்மா பாப்பாவின் அசைவைக் கண்டுபிடிப்பார்
ஆண் பெண் பாலின உறுப்புக்கள் ஒரே பாதையில் இருந்துதான் உருவாகின்றன. 9 வாரம் வரை அவை தெளிவாகத் தெரியாது சின்ன குழாய் போலவே அது இருக்கும். 15 வாரம் முடிந்த பின்னர் தான் ஆண் பெண் பாலின உறுப்பை தெரிந்து கொள்ள முடியும் சில சமயம் ஒன்பதாவது வாரத்தில் கரு கலைந்து போகும் வாய்ப்பு கூட உண்டு.. ஒன்பதில் இருந்து 12 வாரத்திற்குள் என்பது 80% நடக்கிறது..9வது வாரத்தில் கரு வேகமாக துடிக்கிறது.karuvin இதய துடிப்பு 140 லிருந்து 170 வரை இருக்கும் அதுபோல அம்மாவுக்கு நிறைய பசி எடுக்கும் நிறைய உணவும் நிறைய கல்லூரி சட்டம் அவர்களுக்கு தேவைப்படுகிறது பாப்பாவுக்கு உணவு கொடுப்பதற்காக பாப்பாவோட மூளை அதிகமாக வளர்வதற்காக அம்மா நிறைய உணவை கொடுக்க வேண்டி இருக்கிறது இந்த காலகட்டத்தில் கரு உள்ளே சுற்றி வரும் வேதத்தை பார்த்தால் பெண் குழந்தைகளின் surruvathai சுற்றுவதை விட ஆண் குழந்தைகளின் கரு தான் வேகமாக சுற்றி வருகின்றது ஆண் கருவிற்கு கால் அசைவுகள் அதிகமாக இருக்கிறது கருகால முடியும் வரை..
ஒன்பதாவது வாரத்தில் fetal stage of development ல் எல்லா உடல் உறுப்புகளும் முழுமையாக உருவாகி இருக்கும் ஆனால் முழு உருவத்தில் இருக்காது இப்போது பிளசன்டா முழுமையாக செயல்பட ஆரம்பிக்கும் அம்மாவிடம் இருந்து உணவையும் ஆக்சனையும் எடுத்துக் கொண்டு பாப்பாவுக்கு கொடுக்கிறது..
9வது வாரத்தில் பாப்பாவின் அனைத்து முக்கிய பாகங்களும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதயம் மட்டும் முழுமையாக முடிந்து நான்கு அறைகளாகி ரத்த ஓட்டத்தை உடலுக்குச் செலுத்த துவங்கி விட்டது மூக்கு உருவாகிறது வாசனையை இழக்கும் அறியும் தன்மை கூட உருவாக்கிக் கொண்டிருக்கிறது பாப்பாவின் மற்ற உறுப்புகள் தசைகள் நரம்புகள் உருவாகி செயல்பட வந்துவிட்டன..துவங்கிவிட்டன.
பாப்பாவின் வால் ஓடியே போய்விட்டது பாப்பா முழுமையாக மனித உருவில் இருக்கிறது குட்டி காது இருக்கிறது வாய் உருவாகிவிட்டது,. வாயின் உள்ளே மொட்டுக்கள் போல் ஈறு இருக்கின்றது. அதைவிட அங்கே தான் பால் பற்கள் பின்னாடி உருவாகப் போகின்றன கருவினுடைய இனப்பெருக்க உறுப்புகளும் கூட உருவாகத் தூவங்கிவிட்டன ஆனால் உங்களால் கருவின் பாலினத்தை இப்போது அறிய முடியாது. பாப்பாவினுடைய கணக்கால்களும் கணுக்கையும் தன் உருவம் பெற்று . .கால்களும் கை விரல்களும் முழுமையாக உருவம் பெறவில்லை ஆனால் கைகளை விர்லக்ளைப் பிரிக்க முடிகிறது .முட்டி தெரிகிறது அதற்கு மேலே கை நீளமாக இருக்கிறது பார்க்கிறோம் இன்னும் கூட இவர்கள் நீளமாவார்கள் கருவின் கால்கள் நீண்டு கொண்டிருக்கின்றன உடலை விட அதிக நீளத்தில் இருக்கின்றன இங்கு முழங்கால், கணக்கால் இணைப்புகளும் தெளிவாக தெரிகிறது..
இப்போது அம்மாவின் கருமுட்டையிலிருந்து புரோஜெஸ்டிரான் என்றும் ஹார்மோன் உருவாகிக் கொண்டிருக்கிறது இது பாப்பாவின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானதாகும் ஆனால் இப்போது நஞ்சுக்கொடி தன்னுடைய முழுமையான பணியை செய்ய துவங்கி விட்டது இததான் பாப்பாவுக்கு உணவையும் ஆக்சிஜனையும் தருகிறது கெட்ட பொருள்களையும் வெளியேற்றி சேமிக்கிறது.
