1.
என்ன அறிவியலோ
என்ன விதியோ
வார்த்தைகளை விட
மவுனம் கனக்கின்றது.
2.
உண்டியலில் சேரும்
நேசங்கள்
உடையும் போது தான்
வெளிவருகின்றன.
3.
ஒரெயொரு துளி அன்பு
அதற்கு முந்தைய ஆயிரம் நிராகரிப்புகளைத்
தூள்தூளாக்கி விடும்.
அதற்கு பிந்தைய
ஆயிரம் நிராகரிப்புகளை
துவம்சம் செய்துவிடும்.
4.
உள்ளிருக்கும் முத்துக்கு
சிப்பி பாதுகாப்பு.
முத்திருக்கும் வரை
மட்டுமே
சிப்பிக்கு பாதுகாப்பு.
5.
பேரன் பேத்திகளுக்கு
கதை சொல்லிக்கொண்டிருந்த
பாட்டி தாத்தாக்கள்
கதைகளாகிப் போனார்கள்.
6.
ஒரு முறையேனும்
சோறு வைக்காதவனின் வீட்டிற்கு வந்த
திருடனைப்பார்த்தும் கூட
தெருநாய் குரைக்கின்றது.
7.
முதல் ஆள்
மிதிக்கும் வரை
கோலம் பத்திரமாக
இருக்கின்றது!
8.
உங்கள் நம்பிக்கையை
யார் வேண்டுமானாலும்
குலைக்கலாம்
குறைக்கலாம்.
உங்களால் மட்டுமே
கூட்ட முடியும்!!
9.
எழுதப்பழகுமுன்
நிராகரிப்புகளுக்குப் பழகிக் கொள்ளுங்கள்.
அ.சீனிவாசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்


இனிய கருத்துக்கள் நிறைந்த குறுக்குவழிகள்.
கவிஞருக்கு வாழ்த்துக்கள்
இனிய கருத்துக்கள் நிறைந்த குறுங்கவிதைகள்.
கவிஞருக்கு வாழ்த்துக்கள்